Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வாட்சப் மூலம் சம்பாதிக்கும் பெண்களுக்கான ஐந்து ஆலோசனைகள்

  இணைய சந்தை உலக அளவில் விரிவடைந்திருக்கும் இன்றைய யுகத்தில் சிங்கப்பெண்ணாய் வீட்டிலிருந்தபடியே பலரும் தங்கள் திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 

 வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டுவதற்கு பல நேர்மையான வழிகள் இருந்தாலும், பெரும்பாலன பெண்கள் வாட்சப் whatsApp மூலம் பொருட்கள் சேலைகள், சுடிதார்கள், சர்ட் மற்றும் ஹேன்ட்பேக், ஜிவல்லரீஸ் போன்ற அனைத்துவிதமான பொருட்களையும் மார்கெட்டிங் செய்து, நண்பர்கள் மற்றும் உலகின் அனைத்து இடங்களுக்கும் பார்சல் மூலம் தங்களது பொருட்களை அனுப்பி நல்ல லாபத்தை பெற்று சிறப்பாக தொழில் செய்கிறார்கள். 

  முதலீடு இல்லாமலோ அல்லது குறைந்த முதலீடோ போதும் இத்தகைய பிஸினஸ் (Business) செய்வதற்கு என்பதால் பெரும்பாலான பெண்களின் முதல் சாய்ஸ்  வாட்சப் மூலம் பொருட்களை விற்பனை செய்வதே.

வெற்றிகரமான வாட்சப் பிஸினஸிற்கு சில ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.

#1.நேரத்தை கணித்து விளம்பரம் செய்யுங்கள்.

   உங்கள் பொருட்களின் கேட்லாக்ஸ், புதிய ஆஃபர்களை சகட்டு மேனிக்கு கிடைக்கும் நேரத்திலெல்லாம் அனைத்து நபர்களுக்கும் பார்வேடு (forward) செய்துகொண்டே இருக்காதீர்கள். சில சமயம் இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும். 

   அதே சமயம், சில குறித்த நேரத்தில் அதிகமாக ஆன்லைனில் ஆட்கள் இருப்பார்கள். டிவியில் எப்படி பிரைம் டைம் இருக்கோ அதே போல் ஆன்லைனை (Online) பயன்படுத்துபவர்களுக்கும் பிரைம் டைம் இருக்கும். பொதுவாக காலை 8  மணி முதல் 11  மணி வரையும் இரவு 7 முதல் 10 வரையிலான நேரமும் குறிப்பிடதக்க நேரமாகும்.

#2.படஙகளை மொத்தமாக அனுப்பாதீர்கள்.
  
  உங்கள் பொருட்களின் (Catalogue) கேட்லாக் படஙகளை அப்படியே மொத்தமாக பார்வேடு செய்யாதீர்கள். சொந்தமாக வெப்சைட் இருந்தால் அதன் லிங்க் அனுப்புஙகள். இல்லாதவர்கள் கூகுள் டிரைவ் அல்லது பேஸ்புக் பேஜ் உருவாக்கி அதில் படஙகளை இணைத்து அதன் இணைப்பை கொடுங்கள். 

வாட்சப் பிஸினஸ் ஆப்பில் இன்று கேட்டக்ரி (Category) பிரித்து பொருட்களின் பட்டியலை தயார் செய்துகொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதனை பயன்படுத்தி பாருங்கள்.

#3.எல்லோருக்கும் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்.

  உங்கள் பொருட்களின் சரியான வாடிக்கையாளர் யார் என்பதை தெரிந்துகொண்டு அதற்கான ஆட்களை அடையாளம் கண்டு பழகுங்கள்.  சரியான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் முழு தகவல்களையும் தெரிவியுங்கள். 

 வாட்சப் குழுக்கள் பலவற்றில் இணைந்து மொத்தமாக பார்வேடுகளை தட்டி விடாதீர்கள். 

   விலை விபரம் விசாரிக்கும் அனைத்து நபர்களும் பொருட்களை வாங்குவார்கள் என்பது உறுதியில்லை. முக்கிய தகவல்களை ஒரு பதிவாக முன்கூட்டியே தயார் செய்து வைத்துகொள்ளுங்கள். குயிக் ரிப்ளை (Quick Reply Option) ஆப்சன் வாட்சப்பில் இதற்கு பயன்படும்.#4. நீங்கள் எப்பொழுதும் வாடிக்கையாளருடன் தொடர்பில் இருஙகள்

    உங்கள் குழு (Group) நபர்கள் மட்டுமே உங்கள் வாடிக்கையாளர்கள் இல்லை என்பதை மனதினில் வைத்திருங்கள்.  பேஸ்புக், டிவிட்டர், வாட்சப் ஸ்டேட்டஸ் என்று தினந்தோறும் ஏதேனும் ஒரு புதிய தகவல்களை (Post) அப்டேட் செய்துகொண்டே இருஙகள். அது பொதுவான செய்தியாக கூட இருக்கலாம். 

 அதே சமயத்தில் மற்றவர்கள் வைத்திருக்கும் ஸ்டேட்டஸ்(Status) அல்லது பேஸ்புக் போஸ்ட்டில் சென்று லைக்ஸ்,  பின்னூட்டம்(Command) இடுஙகள். பாராட்டுங்கள் உங்கள் கருத்துகளை அவருடன் பகிர்ந்துகொள்ளுஙகள்.

 அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முடிந்த அளவு விரைவாக ரிப்ளை செய்து பழகுங்கள். வாட்சப் பிஸினஸ் அக்கவுண்டில் ஆட்டோ ரிப்ளை ஆப்சன் (Auto Reply Option Enable)எனபல் செய்து வைதுகொள்ளுங்கள்.

#5.சரியான நபர்களை தேவைக்கு பயன்படுத்துங்கள்

உங்களால் முடிந்த வேலைகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள். மிச்சம் செய்கிறேன் பேர்வழி என்று சகலத்தையும் நீங்களே கையாண்டு பழகாதீர்கள். 

வாடிக்கையாளர்களுக்கு பார்சல் அனுப்புவது, கேட்லாக்கில் போட்டோசாப் செய்வது, இன்னும் ப்ரபசனலாக டிஜிட்டல் மார்கெட்டிங் செய்வதற்கும் கூட ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்துங்கள். எல்லா வேலைகளையும் நீங்களே செய்ய வேண்டாம். மாறாக, தொழிலை மேம்படுத்துவதற்கான வேலைகளை யோசியுங்கள்.

இன்னும் பல்வேறு விசயஙகளை தொடர்ந்து வாசிப்போம் அடுத்து வரும் பதிவுகளில். உங்கள் சந்தேகங்கள், கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். வெற்றிபெற வாழ்த்துகள்!!!

Post a Comment

1 Comments

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்