Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வாடிக்கையாளர்களின் சைக்காலஜி தொழில் பழகு I தொடர்பதிவு 08 I I Business Secrets I #2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்

வாடிக்கையாளர்களின் தேவை அல்லது விருப்பத்தை பூர்த்தி செய்யாமல் எந்த நிறுவனமும் வெற்றி பெறாது என்பது ஒரு கோட்பாடு என்றால். தங்கத்தையே கொடுத்தாலும் டைமிங்க்ல கொடுத்தால் தான் அதற்கு மதிப்பு இருக்கும் என்பதும் இன்னொரு கோட்பாடு. 

வாடிக்கையாளர்களின் குணத்தை கண்டுபிடிப்பதற்கு மார்கெட் ரிசர்ச் மிகவும் அவசியமானது. பொத்தாம் பொதுவாலாம் ஒரு பொருளை விற்பனை செய்துவிட முடியாது. 


ஒரு டெலிமார்க்கெட்டிங் செய்யும் போது கூட முன்பின் தெரியாத நபராக இருப்பின் குறிபிட்ட சில நேரங்களில் மட்டுமே அவருக்கு அலைப்பு விடுக்க வேண்டும். அப்படியே அவருக்கு கால் செய்தாலும் கூட, சார் நான் இன்னார் பேசுகிறேன், உங்களிடம் இதுபற்றி பேசவேண்டும் ஃபிரியா இருந்தா கேளுங்கள், அல்லது எந்தநேரத்தில் கூப்பிட்டால் உங்களுக்கு வசதியாக இருக்கும்? என்று கனிவுடன் கேட்க வேண்டும்.


உலகின் முன்னணி நுகர்பொருள் தயாரிப்பாளரான P&G நிறுவனம் இந்திய ஆண்களை குறிவைத்து தனது பாப்புலர் பிராண்டை இங்கேயும் அறிமுகபடுத்தியது. காரில் போகும் போதும், காப்பி குடிக்கும் போதும் இலகுவாக சேவ் பன்னுங்கள். வெட்டுக்காயம் இல்லாமல் பளபள கன்னத்தில் பாதுகாப்பாய் சேவ் செய்யுங்கள் என்று "ஜில்லட்" சேவர் & ரேசரை இந்திய சந்தையில் இறக்கியது. 


எங்கள் கன்னங்களை பாதுகாப்பது இருக்கட்டும்  எத்தனை முறை இதை உபயோகபடுத்துவது? யூஸ் அன் த்ரோ இவ்வளவு விலை  கொடுத்து வாங்குவதா? ஏற்கனவே ரெண்டு ரூபாய்க்கு பிளேடு வாங்கி இலகுவா சேவ் செஞ்சுட்டு இருக்கேன் இந்த விலை எனக்கு செட் ஆவாதுப்பா… அப்றம் உன்னோட பிளேடை கிளின் பன்றதுக்குள்ள எனக்கு காண்டு அதிகமாகுது… நீயே எடுத்துப்போ என்று வாடிக்கையாளர்கள் ஜில்லெட்டை சீண்டுவதே இல்லை. இருந்தாலும் அவசரத்துக்கு ஆகட்டும்ன்னு சந்தையில் ஒட்டிகிட்டு இருக்கிறது.


வாடிக்கையாளரின் தேவையை சரியாக தீர்த்து வைத்திடுந்தால் ஜில்லெட்டு நீர்த்து போயிருக்காதல்லவா?


இதில் இன்னொரு விசயத்தையும் கவனிக்கனும். ஜில்லெட் இந்திய ஆண்களை பொறுத்த வகையில் தோல்வியை தழுவியிருந்தாலும் இந்திய பெண்கள் தங்கள் உபயோகத்திற்கு ஜில்லெட்டை வாங்குகிறார்கள். அமெரிக்க ஆண்களின் மென்மையான சருமத்தை அலேக்காக சேவிங் செய்ய ஏதுவான சாப்ட் கேண்டில் பிளேடுகள் வைத்து இந்திய ஆண்களின் கரடுமுரடான முடிகளை ஜில்லெட்டால் சரியாக வெட்ட முடியாமல் போனதும் ஒரு முக்கிய காரணம். 


என்ன சார் சொல்றீங்க? அப்படின்னா இந்தியாவில் யாரும் தாடிய சேவ் பன்னிக்கவே மாட்டாங்களா என்ன?


அட போங்க சார், இன்னமுமா உங்களுக்கு புரியல?? ஐம்பது வருடங்களுக்கும் மேலாக, கிட்டத்தட்ட 150 நாடுகளில் வெற்றிகரமான டிஸ்போசபல் பிளேடுகளை தயாரித்து வரும் "சூப்பர் மேக்ஸ்" உங்க கண்ணுக்கு தெரியவில்லையா என்ன?? ஒரு சேவிங்கிற்கு செலவளிக்கும் விலை ரெண்டு ரூபா தான். ஆனா கம்பெனியோட லாபத்தை கணக்கெடுத்து பார்த்தா நீங்க மயக்கமே போட்டு விடுவீர்கள்.


அதுவுமில்லாம முன்பை விட இப்பெல்லாம் அண்ணாச்சி கடைக்கு அவசர அவசரமா போயி அண்ணாச்சி ஒரு பிளேடு கொடுங்க அண்ணாச்சின்னு ஆளாய் பறக்குறது கொறஞ்சு போச்சுங்க… மாளிகை சாமான்கள் வாங்கும் போதே வீட்டுக்காரம்மா பேக்கெட் (10பிளேடுகள்) ஒன்னோ ரெண்டோ மொத்தமா வாங்கி போட்டுவிடுவாங்க…


ரெண்டு ரூபா டிஸ்போசபல் பிளேடு செய்யுற வேலைக்கு போயி ஏன் குட்டிக்காரனம் அடிச்சு, யூடர்ன் போட்டு டேபிளை ஒடைப்பானேன்??


கஸ்டமருக்கு என்ன தேவையோ அத கொடுமய்யா முதல்ல…


வாடிக்கையாளர்களின் காலாச்சாரம், பரிணாமம் போன்றவை அவர்களின் வாங்கும் சிந்தனையை உருவாக்கும். இந்த உளவியலே முதன்மை காரணி. 


இதை உடைக்க முடியும். ஆனால் வெற்றி விகிதம் குறைவு. எப்படி உடைப்பது என்பதை மார்கெட்டிங் பொசிசனிங்ல் பிறகு தெரிந்துகொள்ளலாம். இந்த கான்செப்ட் பற்றி அப்பறமா விரிவாக பேசலாம்.


பொதுவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மிகைநுகர்வு சந்தைகளே அதிகம். அங்குள்ள வாடிக்கையாளர்களை பொறுத்த வரையில் நீங்கள் ஒரு பொருளை காண்பித்தால், "எப்படி?" என்ற கேள்வியை அதிகமாக கேட்பார்கள். அதுவே இந்திய சந்தைகளில் "ஏன்?" என்ற கேள்வியை அதிகமாக கேட்பார்கள். இரண்டுக்குமான வேறுபாட்டை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?? கில்லாடி சார் நீங்க!!


அதே தான்… வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன். இங்கே பெரும்பாலும் மக்கள் "ரிஸ்க்" எடுக்க விரும்புவதில்லை. ஏதேனும் ஒரு நல்ல மாத சம்பளம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையிலே வளர்கிறார்கள். அதற்கான கல்விமுறையே இங்கு கற்பிக்கப்படுகிறது.


  பொதுவாக அமெரிக்கர்கள் ஒருமுறை வாங்கிய பொருளில் ஏதாவது பழுது ஏற்பட்டால்  ரிப்பைர் செய்து திரும்ப பயன்படுத்த மாட்டார்கள். மாறாக புதிதாக வாங்கி விடுவார்கள். எதையாவது சாப்பிங் மாலில் பார்த்தால் உடனே அதை வாங்கி வீட்டில் குவித்து வைத்து விடுவார்கள். அந்த வகையில் ஓரிரு முறை பயன்படுத்தி விட்டு ஆடைகளை அப்படியே பழைய வேஸ்டில் போட்டு விடுவார்கள். 


இத்தகைய யூஸ்டு கிளாத்துகளை டன் கணக்கில் எடுத்து ஆப்பிரிக்கா, மியான்மார் போன்ற வளர்ச்சி குறைந்த நாடுகளின் உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். உலக தரத்தில் வித விதமான ஆடைகள் ஏற்கனவே பயன்படுத்திய பழைய ஆடைகள் என்று தெரிந்தும் மக்கள் விலைகுறைவு என்ற காரணத்தால் வாங்கி செல்கிறார்கள்.

இதனால் உள்நாட்டில் புதிதாக தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகளின் விற்பனை சந்தையில் தேங்கி நிற்பதால் தங்கள் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கபடுகிறது என்று பழைய துணி இறக்குமதியை அந்நாடுகள் தடை செய்யும் அளவிற்கு சும்மா விற்றுதள்ளிவிட்டார்கள் என்றால் இருவேறு நிலப்பரப்பில் வாழும் மக்களின் வாங்கும் திறன் பற்றி நாம் நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும் அல்லவா?


தொடர்ந்து வாசிப்போம்

முந்தைய பதிவுகளுக்கு

Post a Comment

0 Comments