Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வாடிக்கையாளர்களின் சைக்காலஜி தொழில் பழகு I தொடர்பதிவு 03 I I Business Secrets I #1. தனித்துவத்தை தக்கவையுங்கள்

கிட்டத்தட்ட 15 வருடங்களா அசைக்க முடியாத இடத்தில் இருந்த சன் டிவியை ஓவர்டேக் செஞ்சு அந்த இடத்துல தன்னை நிலைநிறுத்திக்கொண்ட விஜய் தொலைக்காட்சியின் சாதனை சாதாரணமான விசயம் இல்லை. பெண்களுக்கான சீரியல்கள், புது படம்ன்னு ஜனரஞ்சகமா அனைத்து தரப்பையும் ஆட்டி வெச்சிருந்தது சன் டிவி. அந்த சமயத்தில் இளைஞர் பட்டாளத்தை மட்டும் குறி வெச்சு குதுகலமாக்கி கும்பியடிச்சுட்டு தான் தான் ராஜான்னு இன்னைக்கும் டாப்ல இருக்கிறது ஸ்டார் விஜய். இப்ப ஸ்மார்ட் போன்ல யூடுப்ல கூட விஜய்டிவி சீரியல்தான் டாப்ல இருக்கு. கனாக்கானும் காலங்கள், கலக்க போவது யாருன்னு ஆரம்பிச்சு இன்னைக்கு ஹாட்ஸ்டார் வரை ஸ்டார்விஜய் கடைய விரிச்சு வெச்சிருக்கு.

சன் டிவி சீரியலை அடிச்சுக்க முடியாதுன்னு தெரிஞ்சதும், இளைஞர்களை குறி வெச்சு அடுக்கடுக்கா கலர்புல் எண்டெர்டெயின்மெண்ட் மசாலாவை இறக்கி அடிச்சுது. இப்ப மக்கள் மனசுல "பொழுதுபோக்கு எண்டெர்டெயின்மெண்ட்" என்றால் ஸ்டார் விஜய் தான் என தனி முத்திரையை பதிச்சாச்சல்லவா?!!


இதான் தனிதன்மைங்கறது. அதை சரியா பொசினிங் பன்னுனாங்க ஜெயிச்சாங்க.. இதே காலகட்டத்தில் மியூசிக் சேனல்க்குன்னு தனியா சன் மியூசிக், சுட்டி டிவின்னு தனி தனியா சன் குழுமமும் தன்னோட கிளைகளை உருவாக்கி மொத்த வருமானத்துல துண்டு விழாம தன்னை காத்துக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தகுந்த யுக்தி தான். ஆனா, இந்த யுக்தியை யார் எப்பொழுது கையில் எடுத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி தோல்வி அமையும். கவனமா கையாளுங்கள்.


சோனினா சவுண்ட் சிஸ்டம்

ஆப்பிள்னா குவாலிட்டி & டிசைன்

பல்சர்ன்னா ஸ்டைல்

ஆட்இன்னா சொகுசுகார்

கேஎப்சின்னா மொறு மொறு சிக்கன்

திருப்பதின்னா லட்டு 

சிவாஜின்னா நடிப்பு என்பதெல்லாமே அவங்கவங்களுக்கான தனி அடையாளம். இவங்களுக்கு பின்னாடி ஆயிரம் பேர் அத செஞ்சாலும் எப்பவுமே மனசுல நிக்கறது இவர்களாக மட்டும் தான் இருக்க முடியும். இது அவங்களோட தனிதன்மை. இதை அவங்களோட பொசிசனிங்க பாய்ண்ட் ஆஹ் நாம சொல்லிட முடியாது. பொசிசனிங் வேற தனிதன்மைங்கறது வேற. 
என்னதான் தனிதன்மை நமக்கு இருந்தாலும் அதை சரியா பொசிசனிங் செய்யலைன்னா வாடிக்கையாளர்களையே பார்க்காம வாடி போக வேண்டி வந்திரும் பார்த்துகங்க..


தொட்டுத்தொடரும் ஒரு பட்டு பாரம்பரியம், சுபமுகூர்த்த பட்டுகளுக்கு விவாஹா என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம் இல்லைங்க அது ஒரு மேஜிக் இன்னொவேசன்ஸ்.


ஏய் சோட்டா பாக்கெட் உம் பேரு என்ன? என்றவாறே சிரித்த பல்லுக்காறி அந்த குட்டிக்குழந்தை அடையாளம் காட்டுவது என்ன?? கோல்கெட் என்றால் உறுதி பளிச் பற்கள்ன்னு பதிய வைக்கத்தானே??

இதே பற்பசை வியாபாரத்தில் சென்சோடைன் பற்கூச்சம் போக்கும்நு தனக்கென்று ஒரு புது அடையாளத்தை உருவாக்கி அதை வெற்றிகரமா பொசிசனும் செய்து வைத்திருக்கிறதல்லவா?

அதேபோல, ஒரு சொதப்பல் யுக்தியை தெரிஞ்சுப்போமா? பசியை போக்கனுமா எடு ஸ்னிகர்ஸ்ன்னு சாக்லெட் பிஸ்கட் மாதிரி ஏதோ ஒன்னு அடிக்கடி கண்ணுல படுதே யாராச்சும் வாங்கி பசியை போக்கி இருக்கீங்களா?? இல்லையே!!! காரணம் சாக்லெட்ஸ் என்றாலே இனிப்பு இல்லைன்னா ரொமான்ஸ்ன்னு பதிவு பன்னி இருக்குற மார்கெட்ல போயி பசிக்கு சாக்லெட் எடுத்துக்கன்னு அதுல ஒரு சம்பந்தமே இல்லாத அடையாளத்தை உருவாக்கினால் எப்படி அதை பொசிசன் செய்ய முடியும்??  அதெல்லாம் ஒருவேளை தாத்தா கால மார்கெட்டிங் டெக்னிக்கோ என்னவோ இப்ப செல்லாது செல்லாது.


திரிஷா நடிச்ச விளம்பரத்தோட புடவைகடை, பிஸினஸில் பிச்சு ஒதருவதும், திரிஷாவே சொந்தமா துவங்கின பொட்டிக்ஸாப் பீஸ்போயி கிடக்கறதும் தனக்கென்ற தனி அடையாளத்தை உருவாக்கி அதை பொசிசனிங் செய்ய தவறுவதால் மட்டுமே தானுங்க?


ஊருல யார் கேட்டாலும் நம்ம கடைய பத்தி தெரிஞ்சு வெச்சிருக்காங்க, ஆனா கல்லாபெட்டி மட்டும் காலியாவே இருக்கேன்னு பொலம்பாதிங்க.


தொடர்ந்து வாசிப்போம்

முந்தைய பதிவுகளுக்கு


Post a Comment

0 Comments