Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

2021-2030 ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய தொழில்கள்

     ஒரு 10 வருசத்துக்கும் முன்னாடி இருந்த கேமராக்களில் பிளிம் ரோல் போட்டு தான் போட்டோ எடுக்க முடியும். அப்பெல்லாம் இந்த பிளிம் ரோல்கள் விற்பனை படுஜோராக நடந்துட்டு இருந்தது. ஆன, டிஜிட்டல் கேமராக்கள், மொபைல் போன்களின் புதிய அறிமுகத்தால் அத்தகைய பிளிம்ரோல் கேமராக்கள் ஓரம்கட்டப்பட்டு இன்று அவைகளே இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. வேகமாக மாறிவரும் டிஜிட்டல் பரினாம வளர்ச்சியால் உலகில் பல்வேறு தொழில்கள் அழிந்தும் புதிய தொழில்வாய்ப்புகள் அனைத்து துறைகளிலும் உருவாகிக்கொண்டே வருகிறது. கால ஓட்டத்திற்கு தகுந்தாற்போல தங்களை தகவமைத்துக்கொண்ட நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை தக்க வைத்துக்கொண்டது. புதிய மாற்றங்களை பற்றி கண்டுகொள்ளாத நிறுவனங்கள் தரை தட்டி முன்னேறாமல் துருப்பிடித்து அழிந்து ஒழிந்தது. 

    இப்படியாக, இனி அடுத்த பத்து பதினைந்து வருடங்களில் ஒரு சில தொழில் வாய்ப்புகள் நிச்சயமாக புதிய புதிய சிந்தனைகளோடு வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க போகின்றது. அத்தகைய தொழில்கள் பற்றி காண்போம்.1.ஹோம் டெக்கரேசன்

    இதுவரை இல்லாத அளவில் இந்த துறை அசூர வளர்ச்சி அடைய போகிறது என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை எனலாம். ரியல் எஸ்டேட், அப்பார்மென்ட் துறைகளை ஒட்டி இன்று ஓவ்வொருவரும் தங்கள் வீட்டை அலங்கரிப்பதை பெருமையாகவும், ரசனைக்குரியதாகவும் பார்க்கின்றார்கள். அந்த வகையில் பெயிண்டிங்க், வால்பேப்பர், வால் ஹேங்கிங், இன்டீரியர் டெக்கரேசன், சோஃபா, பெட்ரூம் டிசைன்ஸ், கிச்சன் வேலட்ஸ், கார்டனிங், பெட்ஸ் வளர்ப்பு, ஹோம் கிளினிங் சர்வீஸ் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதில் புதிய புதிய வடிவமைப்புகள், அடிக்கடி மாற்றக்கூடிய வகையில் விலை குறைந்த அதே சமயம் ஆம்பரமான அழகுபொருட்கள், கிப்ட் ஐட்டங்கள் என இந்த துறை நிச்சயமாக புதிய  பல தொழில்வாய்ப்புகளை உருவாக்கும். 

   நல்ல கிரியேட்டிவ் வேலைகளுக்கு மவுசு குறையாமல் இருக்கும். கன்ஸ்ட்ரக்சன் துறையை காட்டிலும் இன்டீரியர் டெக்ரேசன் துறை அதிக லாபத்தை தருவதாகவும், அதிக போட்டியாளர்களையும் கொண்டிருக்கும்.

2.கேட்ஜெட் இன்னவேசன்ஸ்

   நாம் அன்றாடம் பயன்படுத்த கூடிய பொருட்களின் உபயோகத்தை உயர்த்தி தரும் அல்லது எளிதாக்கி தரும் எலக்ட்ரானிக் அல்லது நான் எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள்  புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கும். காரில் பயன்படுத்தக்கூடிய சின்ன சின்ன கேட்ஜெட்கள், கிச்சன் கேட்ஜெட்கள், டாய்ஸ், ஆபிஸ் மற்றும் ஹோட்டல்களுக்கு உபயோகப்படும் வகையான பெரிய கேட்ஜெட்கள் அதிக அளவில் தயாரிக்கப்படும். அவைகள் ஒரு பொருளாகவோ அல்லது தரவுகளாகவோ எப்படியும் ஓவ்வொரு வாடிக்கையாளர்களிடமும் ஏதாவது ஒரு வகையில் ஒட்டிக்கொண்டு இருக்கும். உதரணமாக,  தண்ணீர் குறைவாக செலவழிக்கும் காரை சுத்தம் செய்யும் வாட்டர் கன், ஸ்மார்ட் வாட்ச் போன்றவைகளை குறிப்பிடலாம். ஒரு சாதராண டேபில் வெயிட்டர் கூட இவ்வகையான கேட்ஜெட்களே. 

     அன்றாட வாழ்வில் உபயோகிக்க கூடிய வகையில் ஒரு துணை பொருளாக இந்த கேட்ஜெட் இன்னோவேசன் எப்பொழுதும் வளர்ந்துகொண்டே இருக்கும் துறையாகும்.

3. 3டி பிரிண்டிங் & டெக்னாலஜி

    முப்பரிமாண பிரிண்டிங் துறை மிக வேகமாக இப்பொழுதே வளர்ந்து வந்துகொண்டிருக்கும் ஒரு முக்கியமான துறை. கணினி வழியில் வடிவமைக்கப்பட்டு அச்சு அசலாக மிக வேகமாக ஒரு பொருள், ஸ்பேர் பார்ட்ஸ் அச்சுக்கள், கலைபொருட்கள், இராணுவ தளவாடங்கள் என பல்லேறு வடிவங்களையும் உடனடியாக செய்ய இந்த 3டி பிரிண்டிங் டெக்னாலஜி உதவி செய்யும். இதன் அடுத்த உருமாற்றமாக மருத்துவ துறையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் புதிய மைல்கல் எட்டும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.  எனவே முப்பரிமாண வரைகலை நிபுணர்கள், மூலபொருட்கள் தயாரிப்பாளர்கள், டிஸ்டிரிபியூட்டர்கள் என இந்த துறையின் அடுக்கடுக்கான வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும்.

4. ட்ரோன்கள்

      2020 ஆண்டுகளின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு ட்ரோன்களே. ட்ரோன்கள் வெறும் கண்காணிப்பு கேமராக்கள் என்றோடு நிற்காமல் தனது அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கிக்கொண்டே போகின்றது.  ஆன்லைன் டெலிவரி செய்யும் டிரோகள், விவசாயத்திற்கு பயன்படும் மருந்து தெளிக்கும், நீர் பாய்ச்சும் டிரோன்கள், ஏன் ஆடு மாடுகளை மேய்க்க கண்காணிக்க கூட ட்ரோன்கள் வேலை செய்ய பணியமர்த்தப்படும்.  இராணுவ தாக்குதல்கள், கண்காணிப்புகளை தாண்டி, பெரிய கப்பல்கள், விமானங்கள், மாளிகைகளை கவனிக்க மற்றும் தூய்மைபடுத்த, விளைநிலங்கள், காட்டு விலங்குகளை கணக்கிட, விபத்துகாலங்களில் உதவி செய்ய, பெரிய தொழிற்கூடங்களில், கட்டுமான பணி இடங்களில் என ஒரு அணில் போல இது அனைத்து துறைகளிலும் சத்தம் இல்லாமல் நுழைந்து தனது தொழில்நுட்பத்தை விஸ்தரித்திருக்கும். டிரோன் ஆப்பரேட்டர்கள், டெக்னீசியன்ஸ், சேல்ஸ், ரெண்டல் டிரோன்கள் என இதில் எக்கச்சக்க துறைகளும் உடன் ஒளிந்திருக்கும்.
5. எலெக்ட்ரிக் எனர்ஜி

     மிக வேகமாக குறைந்து வரும் எரிபொருட்களின் மிகச்சிறந்த மாற்று வழியாக எலெக்ட்ரிக் எனர்ஜி எனப்படும் மின்சார பயன்பாடு இருக்கிறது. பெரும்பாலான போக்குவரத்து வாகனங்கள் சோதனை முயற்சியாக மின்சார வாகனமாக மாற்றப்பட்டு வருகிறது. ஆக, இந்த துறை எதிர்காலத்தில் இன்னும் பல அதியசயங்களை நிகழ்த்தும் வாய்ப்பு இருக்கிறது.  வெறும் எலெக்ட்ரிக் ரீபிள் ஸ்டேசன்கள் என்றில்லாமல் வெவ்வேறு வகையில் அதாவது சோலார் மின்சாரம், கடலலை மின்சாரம், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு என்று பல தனியார் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் தோன்றக்கூடும். அவைகள் நேரடியாக தொழிற்சாலைகளுக்கு கான்ட்ராக்ட் அடிப்படியில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்யவும் வழிகளை உருவாக்குவார்கள். மேலும் மின்சார தேவைகள் மட்டும் என்றில்லாமல் பயோகேஸ் டெக்லானலஜியும் கூடவே வளர்ந்து வரும். எப்படியும் மாற்று எரிசக்தி தேவை இருந்துகொண்டே இருக்கும் என்பதால் இந்த துறையில் லாபம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

6. ரோபோடிக் என்ஜினியரிங்

     ஒருபக்கம் ரோபோடிக் தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்ற தவறான கண்ணோட்டம் இருந்தாலும் இந்த துறையின் தேவை என்பது நிச்சயமாக வேண்டியது ஒன்றாகும்.  அனைத்து தொழிற்சலைகளிலும் சிறிய பெரிய தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்தி துல்லியமான உற்பத்தியை அதிவேகமான உற்பத்தியை செய்ய இந்த துறை பெரும்பணியாற்றும். துறைமுகங்கள், விமானநிலையங்கள் என பப்ளிக் செக்டார்களிலும் இந்த தொழில்நுட்பம் பல வேலைகளை சுலபமானதாக மாற்றி தரும் என்பதால் இதி ல் நிபுணத்துவம் பெறும் படிப்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது.  அதே சமயம் பெரு முதலாளிகள் வேகமாக தங்கள் தயாரிப்புகளை தானியங்கிகள் மூலம் தயாரித்து சந்தைக்கு கொண்டு வந்துவிடுவார்கள் என்பதால் மிகச்சிறிய அளிவில் தயாரிப்புகளினை செய்யும் தொழில்முனைவோர்கள் தங்களுக்கென்ற ஒரு பிராண்ட் வேல்யூவை உருவாக்கி கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது. நீங்கள் நாள் முழுவதும் வேலை செய்து உருவாக்கும் ஒரு பொருளை அவர்கள் ஒருசில நொடிகளில் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் பெரும் விலை வித்தியாசத்தை சந்திக்க நேரிடும். அத்தகைய சமையத்தில் உங்களுக்கென்ற தனி அடையாளம், தரம் என்ன என்பதை கொண்டே வாடிக்கையாளர்கள் உங்களிடம் வருவார்கள். அதை வேறெரு பதிவில் காண்போம்.

7. சாயில் லெஸ் அக்ரிகல்ச்சர்

     மண்ணில்லா விவசாயம் மரபுமாற்றபட்ட விவசாயம் என இந்த துறையில் பல புதிய தொழில்நுட்பங்களினை சோதனை முயற்சியாக செய்து வருகிறார்கள். நம்மூரில் மாடிதோட்டம் வேகமாக பெருகிவருவதை போல வெர்டிகல் கார்டனிங் & அக்ரிகல்சர்,  பாலைவனத்தில் விவசாயம், கடல்நீரை பயன்படுத்தி விவசாயம் என பல்வேறு முயற்சிகளை அரசும், தனியார் நிறுவனங்களும் செய்து வருகின்றன. விதையில்லா காய்கறிகள் என்னும் ஆபத்தான ஒரு சந்தை வியாபாரத்தை புகுத்தவும்  பன்னாட்டு கம்பெனிகள் முனையும். விதைகளை பிரேண்ட் ஆக மாற்றி விளைபொருட்களை தயாரிக்கும் குத்தகை முறை பண்ணைகள் அதிக அளவில் மாற்றப்படும். அதேசமயம் ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்களை மிக விரைவாக நமது பகுதிகளில் காணக்கூடும். மிக வேகமாக கறிகள் வளர நானோ திசுக்கள் வளர்ப்பு என்ற உயிர் இல்லாத இறைச்சிகளை விற்பனை செய்யும் தொழில்நுட்பமும் விரைவில் சாத்தியமாக கூடும்.

8. விர்ச்சுவல் மீட்டிங் சேவைகள் 

     ஆன்லைன் வீடியோகால் போன்ற ஒரு சாதரண விசயம் தான். ஆனால் தொழில்நுட்பம் என்னும் ராட்சசனின் உதவியால் இது அசூர வளர்ச்சியடையும். நேரடியாக ஒரு அரங்கில் இருந்து நிகழ்வில் கலந்துகொள்வது போன்ற உணர்வை உருவாக்கும் வகையில் 8டி ஹோலோகிராம் டெக்னாலஜி வளரும். இதனால் உலகின் எந்த மூலையில் இருந்தும் அதிஅற்புதமான விசயங்களை பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள்ள முடியும். வழக்கம் போல ஆபிஸ், கம்பெனி மீட்டிங்குகள் என்றில்லாமல். அவசர அறுவை சிகிச்சை, கல்விக்கூடங்கள், திருமண நிகழ்வுகள் என பல்வேறு வடிவங்களில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்த இந்த விர்ச்சுவல் மீட்டிங் சேவைகள் உதவும். இதற்கான உபகரணங்கள், ரெண்டல் மீட்டிங் ஹால், பங்சன் ஆர்கனைசர் வேலைகள் என எக்கசக்கமான தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் இந்த துறை.

9. பேப்பர்லெஸ் இன்வெஸ்ட்மென்ட்கள்

      வழக்கமான மியூச்சுவல் பண்ட், கோல்ட், பிட்காயின், பாண்ட் பேப்பர், ரியல் எஸ்டேட்  இன்வெஸ்ட்மென்களை போன்றே எதிர்காலத்தில் தான் சேமித்த பணத்தை எதிலாவது முதலீடு செய்து அதிலும் இலாபம் பார்க்க வேண்டும் என்ற தேவையுள்ளோர் அதிக அளவில் இருப்பார்கள். இவர்களை குறிவைத்தும், சரியும் பொருளாதரத்தை தாங்கி பிடிக்கவும் பல புதிய முதலீட்டு பத்திரங்களை உலக நாடுகளும் தனியார் பெருநிறுவனங்களும் உருவாக்க கூடும். அதனால் இந்த துறையை சார்ந்தவர்கள் தவறாமல் அடுத்தடுத்த மாற்றங்களை கூர்ந்து கவனித்து வருவது சாலச்சிறந்தது. என்றைக்கும் முதலீடு சார்ந்த இந்த துறை இருந்துகொண்டுதான் இருக்கும். 

10. டேட்டிங் நிறுவனங்கள்

    டூர்ஸ், டிராவல்ஸ், மேட்ரிமோனியல் வெப்சைட், வெட்டிங் பிளானர்ஸ் போன்றே டேட்டிங்கிற்கென்றே பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவ்வகையான சேவை நிறுவனங்களில் பிடித்தமான நண்பரை தேர்வு செய்வது மட்டுமின்றி டேட்டிங் செல்வதற்கான செல்ப் டிரைவிங் பைக்குகள், சொகுசு கார்கள், ரெஸ்ட்டாரென்ட் மற்றும் உணவு வகைகளை கூட புக்கிங் செய்துகொள்ளலாம். மேலான டேட்டிங் அனுபவங்களை இந்த நிறுவனங்கள் அளிக்கும்.  அதேபோல செக்ஸ் டாய்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனைகள் கனிசமான அளவில் அதிகரிக்கும்.  பிரைட் & க்ரூமிங் பிட்னெஸ் கன்சல்டன்ட், அழகுசாதனம் பொருட்கள், கன்சல்டிங் அன்ட் கவுன்சிலிங் நிறுவனங்கள், செக்யூரிட்டி பாயோமேட்ரிக் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கியமாக அவுட்சோர்சிங் கால்சென்டர்ஸ், டேட்டா மேனேஜ்மென்ட் சென்டர்கள், பிரிலான்சிங் வேலைகள், ஆபிஸ் ஹோம் ஸ்பேஸ் சேரிங்  என சில இதர துறைகளும் இதனோடு சேர்ந்து தங்களது புதிய பரிமாண வளர்ச்சியை சந்திக்கும்.

- தொழிற்களம் அருணேஸ்

Post a Comment

0 Comments