Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மூளையின் நியாபக திறனை மும்மடங்காக அதிகரிக்க எளிய மனோவியல் பயிற்சிகள்

     அன்றாட வாழ்வில் எத்தனையோ விசயங்களை, அனுபங்களை நாம் புதிது புதிதாக கற்றுக்கொண்டே வருகிறோம். நம் மூளையானது குவாட்ரிலியன், அதாவது பத்து கோடியே கோடி தகவல்களை தனக்குள் தனி தனியே தக்க வைத்து அதை வெளிக்கொனறும் திறன் வாய்ந்தது. அப்படியிருந்தாலும் இன்றைய சூழலில் நியாபக மறதி என்பது நூற்றில் தொன்தொன்பது பேருக்கு  இருக்கிறது. நம் மூளையின் நியூரான்களை தட்டி எழுப்பி அதை சரியான படி வழிநடத்தினால் நியாபக மறதி என்பது ஒரு பிரச்சனையே கிடையாது. வயோதிகம், நரம்பியல் குறைபாடு போன்ற காரணங்களை தவிர்த்து, ஏனைய அனைவருக்கும் நியாபக மறதி என்பது தீர்க்க முடியாத அறிய நோயெல்லாம் ஒன்றுமில்லைங்க. எப்படி காற்றின் திசைக்கேற்ப விளக்கில் எரியும் தீபம் அசைந்து திசைமாறுகிறதோ அது போல நமது மூளையில் இருக்கும் எண்ணெற்ற நியுரான்களை நாம் சரியாக டியூன் செய்து பழகிக்கொண்டால் நாம் எண்ணத்திற்கேற்ப மூளை செயல்பட ஆரம்பித்துவிடும். அப்படி என்னெல்லாம் நாம் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக பார்ப்போம்.

    அதற்கு முன், நியாபக மறதிக்கும் கவனச்சிதறல்லுக்கும் பெரிய வேறுபாடு இருக்குங்க. கவனச்சிதறலை தவறுதலாக நியாபக மறதி லிஸ்ட் ல சேர்த்திட்டு தப்பான ட்ரீட்மென்ட்க்கு நாம போயிட கூடாது.

கவனச்சிதறல்
காலைல ஆபிஸ் போகும் போது வண்டிய ஸ்டார்ட் பன்னுனதும் முக்கு திரும்பியதும் இருக்கிற இன்டியன் ஆயில்ல பெட்ரோல் போட்டுடனும், காலியாக போகுதுன்னு உள்மனசு சொல்லியிருக்கும். ஆனா, நாம அந்த பெட்ரோல் பங்க தாண்டி ரெண்டு கிலோமீட்டர் போனதுக்கு அப்பறம் தான் அடடா... மறந்துட்டோமேன்னு மண்டைல உறைக்கும். அதேமாதிரி அறக்கபறக்க கிளம்பி ஸ்கூல்பஸ்ல ஏறி உட்கார்ந்த பின்னாடி தான். அடடா இன்னைக்கு பீட்டி பீரியடு இருக்குல்ல.. யூனிபார்ம எடுத்து வெக்காம விட்டுட்டமேன்னு சட்டுன்னு தோனும். 

    இப்படி தினந்தோறும் நாம தொடர்ந்து ஒரே விசயத்தை தான் செஞ்சுட்டு வரும்வோம். அது நாம் வாழ்க்கையின் ஒரு அங்கமான வேலைதான் இருந்தாலும் அந்த செக்கன்ட்ல வேற ஏதோ நினைப்புல அத கவனிக்காம விட்ருவோம். 

   ஸ்கூல்ல மிஸ் பாடம் நடத்திட்டு இருக்கும் போதோ, அல்லது மன்த்லி மீட்டிங்கில் மேனேஜர் பேசிட்டு இருக்கும் போதோ நம் மனசு நிலையா அதை கவனிக்காம வேற எங்கயோ யோசிச்சுட்டு இருக்கும். நம்மால ஆர்வமா அதை கவனிக்க முடியாம போயிருக்கும். இதைத்தான் கவனசிதறல்ன்னு சொல்லுறோம். ஒரே நேரத்தில் வெவ்வேறான காட்சிகளை மனசுக்குள்ள ஓட்டிக்கிட்டே இருந்தா எது தேவையானது எது தேவையில்லாததுன்னு மூளை நியாபகம் வெச்சுக்க முடியாம, அலாரம் அடிக்காம விட்டுடும். அப்றம் வழக்கம் போல திட்டுவாங்க வேண்டியது தான் பாக்கி.

      கவனச்சிதறல் யார்க்கு அதிகமா இருக்கும்ன்னா எனக்கு தெரிஞ்ச வகையில் மனஉளைச்சல், மன அழுத்தத்தால் பாதிப்பு அடைந்தவர்கள் அல்லது இயல்பியேலே சோம்பேறித்தனம் அதிகமாக இருப்பவர்களுக்கு அதிகமான கவனச்சிதறல்கள் இருக்கும். மனசை இழகுவாக வெச்சிருக்க பழக்கம் பன்னனும். அப்படி இல்லைன்னா இது சரி ஆகாது. மூளைக்கு செல்கின்ற சுரப்பிகளில் தடை ஏற்படும்போது இப்படியான கவனச்சிதறல்கள் அதிக அளவில் இருக்கும். இதை ஈஸியா சரிபன்னிடலாம். எப்பவும் மூட் அவுட்டாக இருக்காம, தனிமையில் இருக்காம மனச கலகலன்னு வெச்சுக்க பழகிக்கனும். தினமும் 20-30 நிமிசம் நல்லா வியர்வை வரும்படியான எஸ்சர்சைஸ், யோகா, விளையாட்டுன்னு ஏதாவது ஒரு ஆக்டிவிட்டீஸ்ல உங்கள நிச்சயமாக ஈடுபடுத்திக்கனும். இப்படி தொடர்ந்து செய்யும் போது உங்கள் மனசு, இறைச்சல்களிலிருந்து விலக  ஆரம்பிச்சு மூளையோட சேர்ந்து வொர்க் பன்ன ஆரம்பிச்சுடும். கவனத்தை கூர்மையாக வெக்க உதவும். எது பிரைமரி எது செக்கன்டரின்னு "டான்னு ஒரு பெல் அடிச்சு" உங்களோட கவனத்தை தட்டி எழுப்பும். 
       சரி, கவனச்சிதறலை சரிபன்னுறது எல்லாம் ஈஸியா செஞ்சுடுவோம். இந்த நியாக மறதிக்கு தான் ஒரு வழிய கண்டுபிடிக்கனும் இல்லையா? விசயத்துக்கு போவோம்.

#ஸ்டெப் 1
      எக்சாம்ல கொஸ்டின் பேப்பர பார்த்ததும் அட!! இந்த கொஸ்டினுக்கு ஆன்ஸர் எனக்கு நல்லா தெரியுமே!! அப்படின்னு நினைக்கறதுக்கு முன்னாடி அந்த ஆன்ஸரோட பர்ஸ்ட் லைன் மட்டும் நியாபகத்துக்கே வராம நம்மை கடுப்பேத்தி முன்னாடி நின்னு கெக்கேபுக்கேன்னு சிரிக்கும்.

  ஆபிஸ்ல பேலன்ஸ்சீட் செக் பன்னிட்டு இருக்கும் போது 18-ந்தேதி முப்பதாயிரம் ரூபாய அனுப்பிருக்கோம். ஆனா எதுக்காக அந்த அமெளன்ட் அனுப்பினோம்? என்ன யோசிச்சாலும் நியாபகத்து வரமாட்டிங்குதேன்னு உங்களால உங்களுக்கு தெரிஞ்ச முக்கியமான விசயத்தை டக்குன்னு நியாபகத்துல கொண்டு வரலாம்ன்னு பார்த்தா கொண்டு வர முடியாம தினற ஆரம்பிச்சிருப்பீங்க..

    இப்படி டக்குன்னு ஒரு விசயத்தை நியாபகத்துக்கு கொண்டு வர வெக்கனுமா கவலைய விடுங்க. சிம்பிளா ஒரு ட்ரிக் அஹ் கத்துக்கலாம். 

    வண்டியோட என்ஜினுக்கு  பெட்ரோல் எவ்வளவு முக்கியமோ அதுபோல உங்க மூளையோட செயல்பாடு சரியா இருக்கனும்ன்னா அதை நாம அடிக்கடி தூண்டி விட்டுட்டே இருக்கனும். என்ஜின்ன எப்பவும் ஆன்லயே வெச்சுக்கனும்.

   முக்கியான விசயங்களை எப்பவும் மறக்காம இருக்கனும்ன்னா அதுக்கு மிகச்சிறந்த பயிற்சி நாம அந்த நிகழ்வுகள், / பாடங்களை ஏதாவது ஒரு எமோசனலோட தொடர்பு படுத்தி வெச்சுக்கனும். அதை ஒரு சின்ன கதையாக கற்பனைபடுத்தி மனசுல பதிவு பன்னி பழகிக்கனும்.  புரியற மாதிரி சொல்லனும்ன்னா ஐந்தாறு வெவ்வேறு மதிப்புள்ள ரூபாய் நாணயங்களை ஒரு பைக்குள்ள போட்டுட்டு அதை கையால தடவி பார்த்து அதில் பதிந்துள்ள உருவங்களை நீங்க கற்பனையால யோசிச்சு பழகனும். உங்க கற்பனை சக்தியை அதிகரிக்க அதிகரிக்க மூளை தன்னோட கதவுகளை ஒவ்வொன்னா திறக்க ஆரம்பிக்கும். 

      ஹலோ சார் அயம் ரமேஷ்ன்னு ஒருத்தர் உங்க கிட்ட அறிமுகம் ஆகும் போது, ஹாய்!! அப்படின்னு முடிச்சுக்காம அந்த ரமேஷ ஏதாவது ஒரு சிறு கதையோட தொடர்பு படுத்துங்க. உங்க எமோசனலோட அவர கனெக்ட் பன்ன முயற்சி செய்யுங்க. இதுக்காக ரொம்ப எல்லாம் மெனக்கெட தேவை இல்ல. அவர் போட்டிருக்கிற சர்ட் கலர், பேக்கெட்டில் உள்ள் பேனா, கட்டியிருக்கிற வாட்ச், போட்டிருக்கிற பிரவுன் சூ, சன் கிளாஸ்ன்னு எப்படி ஏதாவது ஒன்ன கவனிச்சு பாருங்க. அவரோட பேசிட்டு இருக்கும் போதே இதுல ஏதாவது ஒன்னு கண்டிப்பா உங்களுக்கு பிடிச்ச மாதிரி அல்லது பிடிக்காத மாதிரி கண்டிப்பா இருக்கும் அது தான் எமோசன். அந்த எமோசன புடிச்சுகிட்டீங்கன்னா இன்னும் பத்து வருசம் கழிச்சு அந்த ரமேஷ பார்த்தாலும் உங்களுக்கு அந்த பிரெள்ன் சூ நியாபகத்துக்கு வந்து ஹாய் ரமேஷ்ன்னு டக்குன்னு அடையாளம் கண்டு பிடிச்சு வெச்சுபீங்க. சோ, இதை ஒரு பழக்கமாக மாத்திகங்க. உங்களுக்கு தேவையான அனைத்தையும் ஒரு ஸ்டோரி போர்டுல கனெக்ட் பன்னி பழகுங்க. 

#ஸ்டெப் 2
   சொகுசு என்ற ஒன்றிற்காக தேடுதலை துவங்கிய மனிதன் இன்று வரை அதற்காக பல்லாயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருக்கிறான். ஸ்மார்ட் லைஃப்ன்னு நினைச்சு தனக்காக தயார்செய்யும் ஒவ்வொரு படிநிலையிலும் மனிதன் தன்னோட சுயதிறனை கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை வழியிலிருந்து இழக்க ஆரம்பிச்சுட்டே போகின்றான். வெகுசாதரணமாக செய்யக்கூடிய செயல்களை கூட இன்று ஒரு தனிப்பயிற்சியாளர் இருந்தால் தான் செய்யமுடியுமோ? என்ற நிலைக்கு மனித சமூகம் சென்றுகொண்டிருக்கிறது. நியாபக திறனையும் கூட இப்படியான சொகுசு வாழ்க்கையின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம் என்பதே நிஜமான உண்மை.

   உதாரனமாக உங்களில் எத்தனை பேருக்கு குறைந்தபட்டசம் உங்க பேமிலி ஆட்களின் மொபைல் நம்பர் நியாபகமாக தெரியும்? இப்படி நமது வசதிக்காக தயாரிக்கப்பட பொருட்களே நம் சிந்தனைகளை மழுங்கசெய்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மனித மூளையின் ஆற்றலை சராசரியாக ஒவ்வொரு மனிதனும் 5-8% சதவிகிதம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறது ஒரு ஆய்வு. வெறும் 8 % க்கு இப்படி அசூர வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்றால் முழுமையாக மூளையை பயன்படுத்துவோமானால் பல்லாயிரம் ஐன்ஸ்டைன்களை நம் சமூகம் கண்டிருக்குமல்லவா?

    சரி விசயத்துக்கு வருவோம். பிராக்டீஸ் பன்றது மூலமாக எதையுமே சாதிக்க முடியும். மூளைக்கு பெட்ரோல் ஊத்திக்கொண்டே இருந்தால் தான் அது நமக்காக செயல்படும். அந்த வகையில் நாள்தோறும் செய்யக்கூடிய பயிற்சிளில் புதிது புதிதாக எதையாவது தெரிந்துகொள்வது என்பதை ஒரு முழுமையான பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள். இதெல்லாம் வெறும் பயிற்சி என்றில்லாமல் உங்கள் வாழ்க்கியின் ஹேமிட்ஆகவே செய்து வர வேண்டும்.

   புதிதாக சில சொற்களை, மொழியை, விசயத்தை கற்றுக்கொள்ளும் பொழுது நமது மூளை குஷியாகிவிடுகிறது என்கின்றார்கள். ஆட்டோபைலட் மோடிலிருந்து மேனுவல் மோடுக்கு நமது மூளை திரும்புகிறது. இப்படி தினந்தோறும் பழக்கபடுத்தி வருவதனால் உங்களின் சிந்திக்கும், முடிவெடுக்கும் திறன் பன்மடங்கு கூடும். புதிதாக ஒரு பாடமோ ஒரு மொழியையையோ தினந்தோறும் கற்பது என்பது முடியாது என்று நினைக்கின்றீர்களா? அப்ப ஒன்னு செய்யுங்கள். கூடுமானவரை ஒருநாளைக்கு 5 மொபைல் நம்பரையாவது அல்லது வாகனத்தில் செல்லும் போது எதிரில் வரும்  வாகனத்தின் எண்ணை மனப்பாடம் செய்வது போன்று ஜாலியாக அதை நினைவில் வைத்திருக்க பயிற்சி எடுங்கள்.  மொபைல் போனில் கூடுமானவரை எண்களை நினைவில் இருத்தி டயல் செய்து கால் பன்னி பழகுங்கள். நாளைடைவில் உங்க மூளை பூஸ்ட், காம்ப்ளான் குடிச்ச மாதிரி தெம்பாக மாறுவதை நீங்களே உணர துவங்கி விடுவீர்கள். 
# ஸ்டேப் 3
  அடுத்து ஒருமுக்கியமான பயிற்சியை கண்டிப்பாக நீங்கள் செய்தாக வேண்டும்.   வெறும் நியாபக ஆற்றலை மட்டும் வளர்த்தெடுக்க என்றில்லாமல் உங்கள் வாழ்க்கையின் மேம்பாட்டிற்கும் இந்த பயிற்சி உங்களுக்கு நிச்சயமாக உதவக்கூடும்.

  தினந்தோறும் உங்கள் அலுவல் நிகழுவுகளை காலை முதல் இரவு வரை வரிசைபடுத்தி ரீகால் பன்னி பார்க்கனும். இரவு தூங்க போகும் போதோ அல்லது பணி முடிந்து வீடு திரும்பும் வழியிலோ காலை எழுந்து கிளம்பி ஆபிஸ் போகும் போது வழியில் சரவணனை சந்தித்தோம், அவர் ஒரு புரபோசல் ரெடி பன்னி தரச்சொன்னார், அப்பறம் ஆபிஸ் போனதும் பைல் பார்திட்டு இருக்கும் போது மேனேஜர் வந்து செக்க கொடுத்து பேங்க் போயிட்டு வர சொன்னார்... இப்படின்னு முழுமையாக அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டு பாருங்கள். 

   இந்த பழக்கமானது நீங்கள் அன்றைய நாளில் செய்த நல்ல விசயத்தையும், கெட்ட விசயத்தையும் உங்களுக்கு எடுத்து சொல்லும். முன்னெல்லாம் டைரி எழுதுவது ஒருசிலருக்கு வழக்கமான செயலாக இருந்தது. இப்ப எத்தனை பேர் இதை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் ஒருமுறை மன ஓட்டத்திலாவது அசைபோட்டு வைத்துக்கொள்வது உங்க மூளைக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு ரெப்ரஸ் எனர்ஜி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

  அதே போல சில முக்கியமான விசயங்களை ஒரு பேப்பரில் எழுத்து வடிவில் குறித்து வைத்துக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள். உங்கள் மேசையின் முன் அந்த குறிப்பு புத்தகம் எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். எதையும் கையால் எழுதும்பொழுது  அதற்கென தனி எனர்ஜி கிரியேட் ஆகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

   இந்த மூன்று பயிற்சிகளையும் உங்களை அறியாமலேயே தினந்தோறும் ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொள்வீர்களானால் உங்கள் நியாப திறன் பல மடங்கு அதிகரிப்பதை வெகுசில நாட்களில் நீங்களே உணரத்துவங்கி விடுவீர்கள்.

  முக்கியமாக, மனபயிற்சி என்பதையும் தான்டி உடலுக்கு தேவையான விட்டமின்ஸ், மினரல்ஸ், புரோட்டீன்களை தகுந்த நியூட்ரீசியன் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமாக பெறலாம். சுவர் இருந்தால் தானே சித்திரம்? எந்தெந்த உணவு வகையில் என்னென்ன சத்துகளை பெறலாம் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்பது நல்லது.

#தொழிற்களம்_அருணேஸ்

Post a Comment

0 Comments