Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ரஷ்யா, உஹ்ரைன் மேல் போர் தொடுப்பது எதற்காக?

 தடுப்பூசியில் அதிக வருமானம், எரிவாயு முக்கிய வணிகம். தொடர் ஊழல். மக்கள் கிளர்ச்சியை தடுக்க அவதார புருசனாக வேடம்,

எல்லையில் ஆதிக்கம் செய்யும் அமெரிக்க நேட்டோ கூட்டு நாடுகள் படை,

இத்தனை காலம் வல்லரசுக்கு சவால் விட்ட சக வல்லரசான தன்னை விடுத்து தம்பிக்காரன் (சீனா) மேல் கனைதொடுக்கும் அமெரிக்காவால் தமக்குள் ஏற்பட்ட "ஈகோ".
எரிவாயு கேஸ்லைன்கள் ஜெர்மனி, ஆஸ்திரிய உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கொண்டு செல்ல முக்கிய தரைவழி பயோகிராபியும்- வரலாற்றில் சோவியத்தின் பிராந்திய தேசமுமான உக்ரைன், நேட்டா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் எதிர்காலத்தில் தனக்கு ஏற்பட போகும் பேராபத்தும், நெருக்கடியும்,

மற்றும் உள்நாட்டில் முக்கியமாக எழுந்துள்ள பொருளாதார பலவீனம். முன்னேற்றம் மக்களிடையே பரலாக என்று இல்லாமல் நெருங்கிய சிலரின் ஆதிக்கத்திற்கு சென்றிருக்கும் அதிக பணவர்த்தனைகள். இப்படியான பல்வேறு காரணங்களை மனதில் வைத்து,
உக்ரைனில் ஏற்பட்ட(?) உள்ளூர் கிளர்ச்சியை தனக்கு சாதகமாக்கி, அனைத்து பிரச்சனைக்கும் " போர்" என்னும் பயங்கரவாதத்தை துணைக்கு வைத்துக்கொண்டு "புடின்" தனது பலமுனை சதுரங்க ஆட்டத்தை வெகு சாதூர்த்தியமாக ஆடியிருக்கிறார்.


அனைத்து நாடுகளும் வேடிக்கை பார்க்க முக்கிய காரணம் "புடின்" போன்றே தாங்களும் தங்கள் மக்களுக்கு "அவதார புருசர்கள்" வேடம் போட்டு ஏமாற்றிக்கொண்டு இருப்பது தான்.
ஆட்டம் முடிந்தால் வேசம் கலையும். அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்கு ஒவ்வொரு வரலாற்றிலும் பல லட்சம் மக்கள் ஈவு இரக்கம் இல்லாமல் வழி நெடுகிலும் பlலி ஆகி இருக்கிறார்கள். அதில் இந்த போர்காலமும் இடம் பெறுகிறது.
கொரானா எனும் பேரரசியல் வணிகத்தின் சுவடுகளை மக்கள் மறந்து சகஜ நிலைக்கு செல்ல அதைவிட கொடிய ஆயுதமாக "இந்த போரை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறது."
இதில் அப்பாவி உஹ்ரைன் பலிகடா ஆக்கப்படுகிறது.

அமெரிக்க நேட்டா படைகள் ரசியாவை சுற்றி உள்ள எல்லை நாடுகளில் இருந்து பின்வாங்காது. இதை சாதகமாக்கி ரசியா முதல் அடியை அடிக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் கணக்கு. அதில் வெற்றியும் அடைந்திருக்கிறது.
ஆனால் பெரியண்ணன் ரசியாவை குறிவைத்த நேரத்தில் கத்துக்குட்டி தம்பி சீனா அபிரிமிதமான வளர்ச்சி அடைந்து தன்னை மிஞ்சுவான் என்பதை கணிக்க தவறிய அமெரிக்க பிராந்திய நாடுகள் தனது அடுத்த மூவ் எதை நகர்த்துவதே என்றே தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறது.


வழக்கம் போல இந்த அச்சுருத்தலை அனைத்து உலக நாடுகளின் தலைவர்களும் தங்களுக்கு சாதகமாக்கி தங்கள் மக்களிடம் தானே ஆளுமை மிக்க தலைவன் என்று மார்தட்டிக்கொள்ள உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு உலக அரசியல் நாடகம் இரத்தத்தால், கண்ணீரால் எழுதப்பட்டுகொண்டே இருக்கிறது பல்லாயிரம் ஆண்டுகளாக...
-தொழிற்களம்_அருணேஸ்

Post a Comment

0 Comments