Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

About Us

தொழிற்களம் அறிமுகம்

வணக்கம்!!

      தமிழ் தளங்களில் ஒரு சிறந்த தளமாக நமது தொழிற்களம் அமைவதற்கு பல்வேறு ஆலோசனைகளையும், பங்களிப்பையும் அளித்து ஆசிர்வதித்த நமது சக பதிவர்களை நன்றிகளுடன் கரம் கூப்புகிறோம்.

     காலத்திற்கு என்றும் அழிவில்லை. எமது தமிழுக்கும் என்றுமே அழிவில்லை என உலகம் அறிய தலைச்சிறந்த கருத்துக்கள் பலவற்றை தமிழில் படைத்து  மாறாத புகழுடைய தமிழ் அன்னைக்கு மேலும் ஒரு அணி சேர்க்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டதே இந்த தொழிற்களம் குழு.

    புதைந்து போய் கரையான்கள் அரிக்க காரணமான காலங்களை நினைக்கும் போது, இன்றைய நவ நாகரீக உலகில் பல்வேறு புதுமைகளை அறிவியல் உலகிற்கு படைத்திருந்தாலும்  அனைத்திலும் தலைச்சிறந்த படைப்பாக இணையத்தை கூறலாம்.

இணையத்தில் அதுவும் குறிப்பாக வலைப்பதிவுகள் தொடர்பான அறிமுகம் அடைந்த எவரும் இந்த அருமையான படைப்புக்கு நன்றிபட்டவர்களாக மனதில் உணர்வார்கள்.

  இணையம் மட்டும் நமது முன்னோர்களின் நூற்றாண்டுகளில் இருந்திருந்தால் நிச்சயமாக தமிழினம் இன்று உலகத்தின் பொது மொழியாக எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு தலைமை மொழியாக வலம் வந்திருக்கும். ஒரு தொல்காப்பியம், ஒரு திருக்குறள்  என்றில்லாமல் எமது தமிழ் உறவுகள் ஓராயிரம் கோடி பொக்கிசங்களை உலகிற்கு அறிமுகப்படுத்திருப்போம்.

    மனதில் எண்ணமிருந்தும் எமது அன்னை மொழி பேச எமக்கனுமதி மறுக்கும் ஏனைய ஏகாதிபத்ய தன்மையினை  தகர்த்தெழும் காலம் இந்த நூற்றாண்டில் தொடங்கிவிட்டது இணையம் எனும் நண்பனால்.

மாற்றத்திற்கான காலம் வந்து விட்டது.



    நாம் அளிக்கும் இந்த முதல்  தமிழ் வழி சேவையின் தரம் கண்டு மேலும் பல பெரிய நிறுவனங்களும் இணைய பயன்பாட்டில் கால் பதிக்கும். அதன் மூலம் நல்லதொரு எதிர்காலம் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு கிடைக்கும் என்பதை நாங்கள் முழு வலிமையுடன் நம்புகிறோம்.

எமது தொழிற்களம் பகுதில் தொழில்முனைவோருக்கான அனைத்து தேவைகளையும் ஒரு களத்தில் அமைப்போம். தொழில் சார்ந்த் கருத்துகள், ஆலோசனைகள், அனுபவங்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் என சுவையான தகவல்களை உடனுக்குடன் அளிக்கிறோம்.

  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எமது நேரடி குழுக்ககள் இயங்கிவருகின்றன. 

வேலைவாய்ப்பு : 
தொழிற்களத்தின் பக்கங்களில் பகுதி / முழு நேரமாக கட்டுரைகள் எழுதி தர விருப்பம் உள்ளவர்களும்.

விளம்பர வாய்ப்பு :
தொழிற்களம் பக்கங்களில் சிறு, வளர் தொழில் நிறுவனங்கள் தங்களை பற்றிய கட்டுரைகள் வர விரும்பினாலும் தொடர்புகொள்ளுங்கள்.

cpedenews@gmail.com

Post a Comment

0 Comments