Ads Top

பணம் பணம் பணம் : 10


அண்ணே வணக்கம்ணே !

        10 ஆவது நாளா தொழிற்களம் வலைதளம் மூலம் உங்களை சந்திக்கிறேன். பணம் சம்பாதிக்க நினைக்கிறவன் ஈகோவை தூக்கி குப்பையில போடனும்னேன். கு.பட்சம் மறைச்சுக்கனும். எதிராளியோட ஈகோவை திருப்தி படுத்தனும்.அப்பத்தேன் பணம் சம்பாதிக்க முடியும்.

  பணம் பணம்ங்கறியே இந்த பணம் எங்கப்பா கீதுன்னு கேப்பிக. சொல்றேன்.பணம் வந்து கடவுள் மாதிரி. தூணிலும் இருக்கும்.துரும்பிலும் இருக்கும். எல்லார்கிட்டயும் இருக்கும்.இருக்குது. இந்த பணத்தை அவிகளுக்கு தேவையான லீகலான பொருளையோ, சர்வீசையோ கொடுத்து வாங்கனும் அவ்ளதேன்.

  அவிகளுக்கு என்னெல்லாம் தேவைன்னு நாம ரோசிக்கனும். அவனுக்கு என்னெல்லாம் சர்வீஸ் தேவைப்படும்னு நாம ரோசிக்கனும். அவன் தேவைகளை நாம நிறைவேத்தினா காசு பார்க்கலாம்.

இந்த தேவைகள் 3 வகைப்படும். 

 • 1. அத்யாவசிய தேவைகள் ( எசன்ஷியல்ஸ்) 
 • 2. சவுகரிய தேவைகள் (கம்ஃபர்ட்டபிள்ஸ்) 
 • 3. ஆடம்பர தேவைகள்


  இதே போல மக்களின் பொருளாதர நிலையை பொருத்து பல வகையா பிரிக்கலாம் . பஞ்சை பராரி, ஏழை , அடித்தட்டு மத்யமர் (லோயர் மிடில் க்ளாஸ்) , மேல் தட்டு மத்யமர் (அப்பர் மிடில் க்ளாஸ்) பணக்காரன்,பெரும்பணக்காரன்.

   நீங்க எந்த வகை மக்களின் எந்த வகை தேவைகளை / சேவைகள் தர முடியும்னு ஸ்கெட்ச் பண்ணனும். இதுல சூப்பர் டூப்பர் ஃபார்முலா என்னன்னா ஏழை +அடித்தட்டு மத்யமருக்கான அத்யாவசிய தேவை/சேவைய வழங்கறதுதேன்.

ஆனால் இன்னைக்கு நடக்கிறது என்னடான்னா பணக்காரனுக்கு தேவையான சவுகர்ய தேவைய கூட ,ஆடம்பர தேவைய கூட ஏழை+அடித்தட்டு மத்யமருக்கான அத்யாவசிய தேவையா "நம்ப வச்சு" கல்லா கட்டறாய்ங்க.

இந்த சந்தையை ஏன் ஹைலைட் பண்றேன்னா ஈழத்தமிழ்ல சொன்னா இது பாரிய சந்தை. அம்பது பைசாவுக்கு ஒரு சாஷே அதுல ஷாம்பூ வேற ஃபில் பண்ணி விக்கிறாய்ங்க. பிச்சைக்காரனுக்கு அம்பது பைசா போட்டா கூப்டு திருப்பி கொடுத்துர்ரான்.ஆனால் அம்பது பைசாவுக்கு சாஷே +ஷாம்பூ எப்படி கட்டுப்படியாகுது?

ஞா.கிழமை ஹிந்து பேப்பர் வாங்கியிருக்கிங்களா? அதை கக்கத்துல வச்சுக்கிட்டு, ஒரு பாட்டில் ஐஸ் வாட்டரோட பழக்கமுள்ள லோக்கல் பிரிண்டிங் ப்ரஸ்ல போயி இந்த மாதிரி பேப்பர் ஆயிரம் பிரதி அடிக்கனும். எவ்ள செலவு ஆகும்னு கேளுங்க. ப்ரஸ் காரர் சொல்ற ஃபிகரை கேட்டு தலை சுத்தி சொத்துன்னு விளுந்துருவிங்க.(அப்பம் அவர் உங்க முகத்துல அடிச்சு எழுப்பத்தேன் ஐஸ் வாட்டர் .ஹி ஹி)

விழிச்சு எந்திரிச்சு அவரு சொன்ன ஃபிகரை ஆயிரத்தால் வகுத்து பாருங்க. நீங்க ஹிந்து பேப்பர் அடிச்சா இந்த விலைக்கு தான் விக்கனும்.ஆனால் ஹிந்து ரூ.2 க்கே கிடைக்குது. எப்படி?

இங்கே தான் நாம சொன்ன ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகுது. லோயர் /அப்பர் மிடில் க்ளாஸ் + பணக்காரர்கள்னு பெரிய க்ரூப்பை டார்கெட் பண்ணினதால பல லட்சம் பிரதிகள் விக்கிறதால தான் பேப்பரை ரூ.2 க்கு விக்க முடியுது.அதுலயும் லாபம் பார்க்க முடியுது.

இந்த ரெண்டு ரூபா சப்ஜெக்டுல "காஸ்டிங்ஸ்"ங்கற பெரிய சப்ஜெக்டை உங்களுக்கு பலான ஜோக் கணக்கா சுவாரசியமா சொல்ல ட்ரை பண்றேன்.

பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா?

அந்த பாட்டி கடலை பருப்பு வாங்கி அரைச்சு ,எண்ணெய் வாங்கி ,விறகு வாங்கி ,டவுன்ஸ் பஸ் ஏறி லட்டியை சுழட்டிக்கிட்டு வர்ர கான்ஸ்டபிளுக்கு கூழை கும்பிடு போட்டு அவருக்கு பத்தோ இருபதோ கொடுத்து வடை சுட ஆரம்பிக்குதுன்னு வைங்க. அதுவரைக்கும் ஆன செலவு ( டீ ,வெத்திலை ,பாக்கு,புகையில எல்லாம் சேர்த்து) எவ்ளன்னு ஒரு கணக்கு போடுங்க.

அன்னைக்கெல்லாம் பாட்டி எத்தனை வடை சுட்டதுன்னு பாருங்க. மொத்த செலவை பாட்டி சுட்ட மொத்த வடைகளின் எண்ணிக்கையால் வகுத்துட்டிங்கன்னா கிடைக்கிற தொகைதான் காஸ்ட் ப்ரைஸ்.

பாட்டிக்கு மொத்த செலவு ரூ500 ன்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்கங்க. பாட்டி மொத்தம் 500 வடை சுடுதுன்னு வைங்க. அப்பம் ஒரு வடைக்கான காஸ்ட் ப்ரைஸ் ரூ.1 இந்த ஒரு ரூவாய்க்கு மேல வச்சு வித்தாதேன் லாபம்.

ஹிந்து நிர்வாகம் லட்சக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு விக்கிறதால மொத்த செலவு தலை சுத்த வச்சாலும் காஸ்ட் பிரைஸு ரெம்ப குறைச்சலாதான் இருக்கும்.அதனால்தேன் ரூ.2 க்கு வித்தும் லாபம் ஈட்டமுடியுது.

மனிதர்களிடையில் உள்ள பொருளாதார பேதங்கள், தேவை/சேவைகளில் உள்ள வித்யாசம், இந்த உதாரணம் , காஸ்டிங் தியரி , எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தா பணம் சம்பாதிக்க நாம செய்யவேண்டியது என்ன?

பாரிய மார்க்கெட்டை டார்கெட் பண்ணனும் அவிகளோட அத்யாவசிய தேவைகளை நிறைவேத்தற ப்ராஜக்டை ப்ளான் பண்ணனும். உற்பத்தி செலவை குறைக்கனும் - விற்பனையை அதிகரிக்கனும் -அப்பத்தேன் காஸ்ட் ப்ரைஸு (உற்பத்தி செலவு) குறையும். அப்பத்தேன் லாபத்தை பார்க்க முடியும்.


பொரி கடலை :

 • பணத்தை(யே) தேடிச்செல்பவர்கள் அதை கண்டடைந்தாலும் தங்களை தொலைத்து விடுகிறார்கள்
 • பணத்துக்கு ஈகோ சாஸ்தி.தன்னை மதிக்காதவனை அண்டறதே இல்லை.
 • பணம் ஒரு மூங்கில். அரையடி வெட்டி புல்லாங்குழலும் செய்யலாம் .பாடையும் கட்டிக்கலாம்
 • வெடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கியை விட மவுனமாக குறி வைக்க பட்ட துப்பாக்கிக்கு கட்டளையிடும் சக்தி அதிகம்
 • செலவழிக்கப்பட்டு கொண்டிருக்கும் பணத்தை விட செலவழியாமல் இருக்கும் பணத்துக்கு பணம் ஈட்டும் சக்தி அதிகம்

பொன்மொழி:

பணம் உங்கள் மூளையில் இருக்கும் வரை பணம் உங்கள் பைக்கு வராது : ஓஷோ

2 comments:

 1. செலவழிக்கப்பட்டு கொண்டிருக்கும் பணத்தை விட செலவழியாமல் இருக்கும் பணத்துக்கு பணம் ஈட்டும் சக்தி அதிகம்

  பணத்தைப் பற்றிய இப்படியொரு வித்தியாசமான பார்வை புதிது. அருமை தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாங்க தமிழ் ராஜா!
  வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி. தொடரை தொடர்ந்து படியுங்கள். நிறை குறைகளை தெரிவியுங்கள்.

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.