பணம் பணம் பணம் : 11


அண்ணே வணக்கம்ணே !
இந்த தொடர் பதிவுல இது 11 ஆவது பதிவு. 11 ஆவது நாளா தொழிற்களம் வலைதளம் மூலமா உங்களை சந்திக்கிறேன்.

கடந்த பதிவுல பொருளாதார நிலையை பொருத்து மக்களில் உள்ள பிரிவுகள் - பொருட்கள்/சேவைகளில் உள்ள 3 வகைகளை பார்த்தோம்.

கொஞ்சம் போல முக்கி ஞா படுத்திக்கங்க:

மக்களில் உள்ள பிரிவுகள்:
பரம ஏழை ,
ஏழை ,
அடித்தட்டு மத்திய வர்கம்,
மேல் தட்டு மத்திய வர்கம்,
பணக்காரர்கள்,
பெரும் பணக்காரர்கள்.

பொருட்கள்/சேவைகளில் உள்ள 3 வகைகள் :

அத்யாவசியமானவை
சவுகரியம் கூட்டுபவை
ஆடம்பர தேவை/சேவைகள்

இதையெல்லாம் நாம தெரிஞ்சுக்கறது எதுக்கு? பணம் பண்ணத்தேன். மக்களில் உள்ள அனைத்து பிரிவினர்களுக்கும் தேவையான அனைத்து வகை பொருட்கள் ,சேவைகளை வழங்கறது முடியாத காரியம்.

நம்ம தகுதி , பொருளாதார பலம் ,ஆள் பலம் இத்யாதியை கொண்டு எந்த பிரிவு மக்களுக்கு ,எந்த பிரிவிலான பொருட்களை விற்க முடியும்,எந்த மாதிரியான சேவைகளை வழங்க முடியும்னு ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வரனும்.

பணம் பண்ணனும்னு முடிவு பண்ணியாச்சுன்னா சபரி மலைக்கு மாலை போட்டாப்ல ஆயிரனும். ஐ மீன் ஈகோ, கற்பனைகள் , பலகீனங்கள் ,மூட நம்பிக்கைகள்,ஊகங்கள், நம்பிக்கைகள், சார்பு நிலைகள் எலலத்தையும் தூக்கி கடாசிரனும்.

சிலர் வெறும் கையில முழம் போடுவாய்ங்க. சிலர் பண மூட்டைய சுமந்துக்கிட்டு என்ன பண்ணலாம்னு ரோசிச்சே வருசங்களை ஓட்டிருவாய்ங்க. சிலர் செய்யலாமா வேணாமான்னு குறி கேட்டு, சோசியம் பார்த்தே ஒழிஞ்சு போயிருவாய்ங்க., சிலர் பையில பணக்கட்டுகளை வச்சுக்கிட்டு எல்லாம் தன்னால நடக்கும். பைசா இருக்குல்லன்னு இருப்பாய்ங்க. சிலர் தங்கள் கற்பனைகளுக்கு உயிரூட்ட பைசாவை விரயம் பண்ணிருவாய்ங்க.

சிலர் சர்வே பண்றேன் பேர்வழி ஃபாரின் டூர் எல்லாம் அடிச்சுக்கிட்டிருப்பாய்ங்க. சிலர் டிஸ்கஸ் பண்றேன்னுட்டு சரக்கடிச்சே லிவர் வீங்கி செத்துருவாய்ங்க. சிலர் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி, தங்கள் மதம் சாதி என்ற காரணத்தை அடிப்படையா வச்சே தொழில் தொடர்புகளை உருவாக்குவாய்ங்க.. சிலர் எதை ரோசிச்சாலும் தன் குடும்பத்தினர்,உறவினர்களை வச்சே ரோசிப்பாய்ங்க. உ.ம் மேனேஜ்மென்ட் தம்பி, சேல்ஸ் மச்சான் , ஃபேக்டரியை அண்ணன் பார்த்துக்கிடுவாரு.

நம்ம நாட்ல நீண்ட நெடுங்காலமா வர்ணாசிரம (அ) தர்மம்,சாதி அமைப்பெல்லாம் பலம்மா இருக்கிறதால -திருமணங்கள் ஒரு வட்டத்துக்குள்ளயே நடக்கிறதால ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் ஒவ்வொரு விதமான குண நலன் ஜீன் வழியாவே வந்துருது.

குடும்பமே தொழில் பண்றது ஒரு சில பிரிவினருக்கு ஒர்க் அவுட் ஆகலாம். உ.ம் செட்டியாருங்க.( இவிகள்ள கூட யாவாரம் பல்பு வாங்கினதுமே ரோட்ல கட்டிப்புரண்டு அடிச்சுக்கற கூத்தெல்லாம் நடக்கும். உன்னாலே நான் கெட்டேன். என்னாலே நான் கெட்டேன்னு அலப்பறை பண்ணுவாய்ங்க.

பணம் பண்றது ஒரு கூட்டு முயற்சி. டீம் ஒர்க். நம்ம குழுவுல பரஸ்பரம் முரண்பாடான டேஸ்டு,ரோசனை,வியூகம் உள்ளவுக இருக்கனும். எந்த வித ஒப்பனையோ -ஒளிவு மறைவோ இல்லாம கருத்து தெரிவிக்க கூடிய சுதந்திரம் இருக்கனும். இது குடும்ப உறுப்பினர்கள் குழுவா அமையும் போது கொஞ்சம் சிரமம் தான்.

குழு இல்லையா? நிம்மதி. நம்ம திட்டமிடுதலை நாமே விமர்சன பார்வையில பார்த்து அப்டேட் பண்ணனும்.திட்டமிடனும் செயல்படனும்.

பெருச்சாளி எப்படி அண்டர் கிரவுண்ட் லெவல்லயே வழியை ஏற்படுத்திக்கிட்டு போகுதோ அப்படி இந்த ஆரம்ப செயல் பாடுகள் அமையனும்.

ஏவிஎம் காரவுக ரிலீஸ் டேட் அறிவிச்சுட்டு தான் ஷூட்டிங்கே ஆரம்பிப்பாய்ங்களாம். அது அவிக ரேஞ்சு. நாமளும் ஒன்னு ப்ராஜக்ட் செய்து அது சக்ஸஸ் ஆன பிற்காடு லாஞ்சிங் டேட் அறிவிச்சுட்டு வேலைய ஆரம்பிக்கலாம்.

மொத முயற்சியில எந்த அளவுக்கு "அடக்கி வாசிக்கிறமோ அந்த அளவுக்கு நல்லது. ப்ராஜக்டை ஆரம்பிக்கும் போதே பாதியில புட்டுக்கிட்டா அதை அப்படியே ட்ராப் பண்ணிட்டா எந்தெந்த நிலையில எந்த அளவு நஷ்டத்தோட வெளிய வருவம்னு ஒரு கணக்கு இருக்கனும்.

"இந்த ப்ளான் மட்டும் ஃபெயில் ஆகிற வாய்ப்பே கிடையாது. நாங்க யாரு சிங்கம்ல"ங்கற ஃபீலிங் மட்டும் இருக்கக்கூடாது இந்த கட்டத்துல - .இதை பாதியில விட்டுட்டா சனம் என்னா நினைப்பாய்ங்கங்கற கேள்வி எல்லாம் கூடாது. முழுக்க செய்து முழுக்க நஷ்டமடையறதை விட கு.ப டேமேஜசோட வெளியவர்ரதுதான் புத்திசாலித்தனம்.

ஆக உள்ளாற பூரும்போதே வெளிய வர்ரதுக்கான வழிய ஓப்பன்ல வச்சுக்கனும். அல்லது கார்,வேன்களில் பின் பக்க கண்ணாடி போல ஒரு கதவை "மெல்லிசா" அமைச்சுக்கறது நல்லது.

உ.ம் நீங்க அரசு வேலையில இருக்கிங்க. பணம் பண்ண கோதாவுல இறங்கறிங்க. வி.ஆர்.எஸ் வாங்கிட்டு வந்துராதிங்க. ரிசைன் பண்ணிட்டு குதிக்காதிங்க. மெடிக்கல் லீவ் அப்ளை பண்ணி அது சேங்சன் ஆன பிறகு வாங்க.

உ.ம் : ஒரு சைட்டை வித்திங்க.காசு கையில இருக்கு. மொத்த காசுக்கும் திட்டம் போடாதிங்க. ஒரு பகுதியை டெர்ம் டெப்பாசிட்ல போடுங்க.

ப்ராஜக்ட் சக்ஸஸ் ஆனால் கூடுதல் முதலா உதவும். ப்ராஜக்ட் ஊத்திக்கிட்டா பெவிலியனுக்கு திரும்ப உதவும்.

எல்லாம் சரி.. இந்த பண வேட்டைக்கு நீங்க கிளம்பனும்னா உங்க குடும்பம், உறவுகள்,நட்பு இப்படி எல்லாரோட ஒத்துழைப்பும் தேவை. ஒத்துழையாமை என்னா மாதிரி டார்ச்சர் தெரீமா? காந்தி தாத்தாவோட ஒத்துழையாமைக்கு பிரிட்டீஷ் காரனே ஆளை விடுன்னு கழண்டுக்கிட்டான்.

பிறருடைய ஒத்துழைப்பு எப்படி பெறுவது - பண வேட்டையில எப்படி இறங்கறதுன்னு நாளைக்கு சொல்றேன்.
ஆந்த்ரபாலஜி:

கடல்ல தான் மொத உயிர் ஏற்பட்டதா சொல்றாய்ங்க.மொதல்ல அமீபா அங்கருந்து குரங்கு.குரங்குலருந்து மன்சன். ஆமையே கடலை விட்டு நிலத்துல கால் பதிச்ச மொத பிராணியா இருக்கும் போல . குரங்கு ? அது காட்டுல குடியேறியிருக்கும். குரங்குலருந்து வந்த மன்சனும் காட்ல தான் வசிச்சிருக்கனும்.

இப்பம் மா நகரங்கள்ள எப்டி கத்தி கப்படான்னுட்டு ஒரு குரூப்பா அலையறாய்ங்களோ அப்படி அலைஞ்சிருக்கனும். அதுக்கப்பாறம் சஞ்சார வாசம். அதாவது ஆற்றங்கரையில விதைச்சு பயிர் விளைஞ்சு அறுத்துக்கிட்டு டேரா தூக்கிர்ரது. இந்த கட்டம் வரை தேவை போக உபரிங்கறது ரெம்ப சொற்பமா இருந்திருக்கனும். அந்த உபரியை கூட இன்னொரு குழுவோட பகிர்ந்துக்கறதெல்லாம் ஒரு அற்புதம் போல நடந்திருக்கலாம். பண்டமாற்று? சந்தேகம் தேன்.

எப்பம் ஸ்திரவாசம் ஏற்பட்டதோ அங்கே தான் உற்பத்தியில உபரி -உபரியை பகிர்ந்துக்கறது பண்டமாற்று பக்காவா ஆரம்பிச்சிருக்கனும். காட்டுக்குள்ள இருந்தவரை எவன் காட்டடி அடிக்கிறானோ அவன் தான் தலீவன். ஸ்திர வாசத்துல தலைவனுக்கு கொஞ்சம் போல அறிவும் தேவைப்பட்டிருக்கனும். அந்த அறிவு தான் பண்டமாற்றை - பண்டமாற்று கஷ்டம்ங்கறப்போ தங்கம் - வெள்ளி நாணயம்லாம் வர்ரதுக்கு காரணமாகியிருக்கனும்.

ஹிஸ்டரி:

சம்பளத்தை சேலரிங்கறாய்ங்க. சேலரிங்கற வார்த்தைக்கு வேர் சொல் சால்ட் ..அதாவது உப்பு. ஒரு காலத்துல சம்பளமா உப்பை கொடுத்திருக்காய்ங்க. அதனாலதேன் சேலரிங்கற வார்த்தையே செலாவணிக்கு வந்தது. மன்சங்கள்ள நாணயத்தை போலவே - நாணயத்துக்கான உலோகமும் தரம் தாழ்ந்துக்கிட்டே வந்துருச்சு பித்தளை, செம்பு,அலுமினியம்,நிக்கல், இப்பம் இரும்பு. இது போதாதுன்னு காயிதம். இப்பம் ப்ளாஸ்டிக் நோட்டு விடப்போறாய்ங்களாம். நடக்கட்டும்.

சைக்காலஜி:

பணம் எந்த வடிவத்துல இருந்தாலும் அதை சம்பாதிக்கிறதுக்குள்ள மன்சன் செத்து சுண்ணாம்பாயிர்ரான்.கு.ப அவன் ஈகோ கொல்லப்பட்டுருது. அடுத்தவுக ஈகோவை திருப்தி படுத்தி பணம் சம்பாதிக்கிறவன் தான் செத்துப்போனதா ஃபீல் பண்றான்.

சம்பாதிச்ச பணத்தை வச்சு மரணத்தின் நிழல்களோட போராடறது தான்.( தனிமை,ஏழ்மை எட்செட்ரா) ஆக்சுவல் ப்ளான். பணம் கைக்கு வந்ததும் தன்னை ஆரெல்லாம் எப்படியெல்லாம் சாகடிச்சானுங்கன்னு ஞா வந்துருது. அடுத்தவுகளை கொல்ல - (ஐ மீன் அடுத்தவுக ஈகோவை) அந்த பணத்தை நாசமாக்கிர்ரான்.
அர்ஜுனனுக்காக வச்சிருந்த அஸ்திரத்தை கர்ணன் கடோத்கஜன் மேல விட்டுட்டாப்ல.

பொரிகடலை:

தனக்குள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே மனிதன் பணம் சம்பாதிக்கிறான்.ஆனால் அது ஒரு போதும் அந்த வெற்றிடத்தை நிரப்பவே நிரப்பாது. கு.ப அதை முழுக்க மறக்கடிக்கவும் செய்யாது.

உன் பணம் உன்னை சுற்றியிருப்பவர்கள் பொய்யர்களாக்கும்
உன் ஏழ்மை அவர்களை சத்திய சந்தர்களாக்குகிறது

பொன்மொழி:
பணம் கொஞ்சமா இருந்தா அது நம்மை காப்பாத்தும்
அதிகமா இருந்தா அதை நாம காப்பாத்தனும்
-ரஜினி காந்த்Comments

 1. அத்யாவசியமானவை
  சவுகரியம் கூட்டுபவை
  ஆடம்பர தேவை/சேவைகள்

  அருமையான உதாரணங்கள், சொல்லாடல் மற்றும் பணத்தைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்கள் மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது.

  ReplyDelete
 2. வாங்க தமிழ்ராஜா !
  வரவுக்கும் -கருத்துரைக்கும் நன்றி. இதுவரை சொன்னதெல்லாம் விஷயம் தெரிஞ்சவுகளுக்கு தெரிஞ்ச மேட்டருதேன்.

  விஷயம் தெரிஞ்சகளுக்கும் தெரியாத மேட்டர்லாம் நிறைய இருக்கு.

  இதையெல்லாம் தெரிஞ்சுக்காம பணம் சம்பாதிக்கலின்னா ஒரே பிரச்சினை தான் ஏழ்மை.

  இதையெல்லாம் தெரிஞ்சுக்காம பணம் சம்பாரிக்கிறாங்களே .. அவிகளால தான் ஒட்டு மொத்த பொருளாதார அமைப்பும் ஃபணால் ஆயிருது.

  அதான் பயம்மா இருக்கு.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்