பணம் பணம் பணம் : 12

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!
இந்த தொடர் பதிவுல இது 12 ஆவது பதிவு. 12 ஆவது நாளா தொழிற்களம் வலைதளம் மூலமா உங்களை சந்திக்கிறேன்.

கடந்த பதிவுல பொருளாதார அடிப்படையில மக்கள் பல பிரிவுகளா இருக்காய்ங்க. பொருட்கள் மற்றும் சர்வீஸஸ்லயும் 3 வகை இருக்குன்னு சொல்லியிருந்தேன். ஞா இருக்கில்லை?

நம்மளோட குண நலன் ,ஆர்வம், நாம தர முடிஞ்ச உழைப்பின் தீவிரம், தன்மை, கல்வி,தொழில் தகுதி , முன் அனுபவம்,குடும்ப பின்னணி, நட்பு வட்டம் , நாம குறி வச்சிருக்கிற மக்கள் பிரிவு, நாம உற்பத்தி செய்யப்போற பொருளின் பிரிவு இத்யாதிய மனசுல வச்சு " எதையும் ப்ளான் பண்ணி செய்யனும் " ( கொட்டேஷன்ல இருக்கிறதை சங்கி மங்கி ஸ்டைல்ல படிங்க)

ப்ராஜக்டுல நாம சேர்த்துக்கப்போற பார்ட்னருக்கு மேற்சொன்ன எல்லா தகுதியும் இருக்கனும்னு அவசியமில்லை. ஆனால் எதுவுமே இல்லைன்னா நாஸ்தி. முக்கியமா ப்ராஜக்டை முடிச்சே ஆகனும்ங்கற வெறி + உங்க திறமை மேல ,உங்க மேல முழு நம்பிக்கை இல்லின்னா நாஸ்தியோ நாஸ்தி. வெறுமனே பணம் இருக்குன்னோ அ எம்.எல்.ஏ சின்ன வீட்டுப்பையன்னுட்டோ பார்ட்னரை தேர்வு செய்துர கூடாது.

நம்ம பண வேட்டைக்கு குடும்பம் உபகாரம் பண்ணலின்னாலும் உபத்ரவம் பண்ணப்படாது. நம்ம கையில இருக்கிற முதலீடு ஆகட்டும் ,வாங்கப்போற தொழில் கடன் ஆகட்டும் எல்லாமே கடைசி பைசா வரைக்கும் தொழிலுக்கே செலவாகனும். இதுக்கு குடும்பத்தாரோட முழு ஒத்துழைப்பு அவசியத்துலயும் அவசியம்.

செலவுகள்ள ரெண்டு வகை உண்டு. உற்பத்தி செலவுகள் -உற்பத்தி சாரா செலவுகள். தொழில் தொடர்பான பர்ச்சேஸ் மேட்டரா மும்பை போறோம். இது உற்பத்தி செலவு. அங்கே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டா உற்பத்தி சாரா செலவு.

ஒரு வேளை நமக்கு கூட்ஸ் சப்ளை பண்ண போற பார்ட்டி நம்மை நம்ம இடத்துல வந்து சந்திக்கிறாப்ல இருந்தா -எதிர்காலத்துல நமக்கு லட்சக்கணக்குல கடன் தர போற பார்ட்டியா இருந்தா இதுவும் உற்பத்தி செலவு தான். அட வந்தவனோட சரக்கடிச்சாலும் அது உற்பத்தி செலவு தான். வீட்டுக்கு புது டைனிங் டேபிளுக்கு ஆர்டர் கொடுத்தா அது உற்பத்தி சாரா செலவு.

"அவ்ளோ தூரம் போய் வந்திங்கல்ல எனக்குன்னு என்ன வாங்கிட்டு வந்திங்க"ன்னு கேட்காத மனைவி ரெம்ப முக்கியம். அவிக இந்த பேச்சை கேட்காம இருக்கனும்னா நம்ம ப்ராஜக்டை பத்தி - அதில் உள்ள ரிஸ்கை பத்தி -ஜெயிச்சா கிடைக்க கூடிய வசதிகளை பத்தி பொஞ்சாதிக்கு ஏற்கெனவே தலையணை மந்திரம் போட்டிருக்கனும். அது ரீச் ஆகியிருக்கனும். இல்லின்னா பொளப்பு நாறிரும்.

நம்ம நண்பர் ஒருத்தரு நாம தேன் உருப்படாத போயிட்டம் பையனுக்காச்சும் எதுனா செய்துரனும்னு பையனோட வேலைக்கு அலைஞ்சுக்கிட்டிருந்தாரு. பையன் வேலை கிடைச்சுட்டதாவும் டெப்பாசிட்டா ஒரு பத்தாயிரம் கட்டனும்னும் சொன்னான்.

நண்பர் ஏற்கெனவே தான் டிஃபால்ட்டரா இருக்கக்கூடிய இன்னொரு நண்பர் கிட்டே போயி கைய காலை புடிச்சு காசு வாங்கி தந்தாரு.பையன் 10 ஆயிரம் ரூவாய்க்கு ஒரு செல் ஃபோன் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வந்தான். வேலைக்கு டெப்பாசிட் கட்டினா அது உற்பத்தி செலவு - வேலை வெட்டி இல்லாத மொட்டை பையன் 10 ஆயிர ரூவாய்க்கு செல் ஃபோன் வாங்கினா அது உற்பத்தி சாரா செலவு. ( நம்ம ஒக்காபிலரில சொன்னா ஒதகாத செலவு)

மக்களில் பல்வேறு பொருளாதார பிரிவுகள் இருப்பதா சொன்னேன். அதுல நீங்க டார்கெட் பண்ண போற க்ரூப்போட ஆந்த்ரபாலஜிலருந்து வரலாற்று,சமூக பின்னணி , சைக்காலஜி எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கனும்.

பரம ஏழை ,ஏழைகளோட சைக்காலஜி வேற . கீழ் மட்ட மத்யமர், மத்யமர்,மேல் மட்ட மத்யமரோட சைக்காலஜி வேற , பணக்காரர்கள் ,பெரும்பணக்காரர்களோட சைக்காலஜி வேற.

ஏற்கெனவே சொன்ன அத்யாவசிய , சௌகரிய,ஆடம்பர பொருட்கள்/சேவைகள்ள எது எந்த க்ரூப்புக்கு தேவை. அதை ஏற்கெனவே தந்துக்கிட்டிருக்கிறவுகளோட பின்னணி,மார்க்கெட்,நெட் வொர்க் ,அவிக பொருளோட/சேவையோட தரம் எல்லாத்தையும் அனலைஸ் பண்ணனும். அதை விட பெட்டரா செய்ய இன்னம் என்னெல்லாம் செய்யனும்னு ப்ளான் பண்ணிக்கனும்.

ரைட் சகோதரர்கள் விமானம் கண்டு பிடிச்சாய்ங்க. அவிக பறக்க விட்ட பிறகுதேன் விமானம் பறந்ததா? இல்லிங்கண்ணா அவிக மைண்ட்ல ஏற்கெனவே பல ஆயிரம் தடவை டேக் ஆஃப் ஆகி லேண்ட் ஆகியிருந்தது.

அப்படி நாம செய்யப்போற தொழிலை ஸ்தூலமா செய்றதுக்கு மிந்தியே சைக்கலாஜிக்கலா செய்து பார்க்கனும் அப்படி செய்யும் போது இப்பம் பிரபலமாகிட்டு வர்ர நேர் மறை சிந்தனையோட அதாங்க தமிழ்ல் சொன்னா பாசிட்டிவ் திங்கிங்கோட செய்யப்படாது.

அச்சாணியமா ரோசிக்கனும். நம்ம அண்ணாரு ஃப்ரண்டு ஒருத்தரு லோக்கல்ல கேபிள் டிவி நடத்திக்கிட்டிருந்தாரு. அதுக்கான ஆண்டுவிழாவை ப்ளான் பண்ணிக்கிட்டிருக்காரு. சென்னைலருந்து ஜூரிங்கல்லாம் வந்திருந்தாய்ங்க.

நம்ம சர்க்கிள்ள நமக்கு விஞ்ஞானின்னு பேராச்சே. உள்ளாற பூந்தேன். சில கருத்துக்களை சொல்லலாமான்னு கேட்டேன். கேபிள் டிவிக்காரரு சொல்லுப்பான்னாரு.

இப்பம் சொன்ன பாய்ண்டை சொன்னேன். விழா சரி. விழாவின் போது மழை வந்துட்டா என்ன பண்றது - கரண்ட் போயிட்டா என்ன பண்றது -சரக்கு பார்ட்டிங்க அலம்பல் பண்ணா என்ன பண்றது இப்படி நெகட்டிவா ரோசிச்சு ப்ளான் பண்ணுங்கன்னேன்.

அவரு நம்மை ஒரு மாதிரியா பார்த்துட்டு "சரிப்பா.. இவிகல்லாம் சென்னைலருந்து இதை ப்ளான் பண்ணவே வந்திருக்காய்ங்க. நீ சாயந்திரம் வாயேன் பேசிக்கலாம்"னுட்டாரு.வந்துட்டம்.

விழா ஒரு காலேஜ் கிரவுண்ட்ல திறந்த வெளியில ஏற்பாடு பண்ணியிருந்தாய்ங்க. நாமளும் போனோம். விழா ஆரம்பிச்ச பத்தாவது நிமிசம் மழை கொட்ட ஆரம்பிச்சுருச்சு . கிரவுண்ட்ல இருந்த சனம் மொத்தமும் ஸ்டேஜுக்கு ஏறிட்டாய்ங்க. அடுத்த மினட் கரண்ட் போயிருச்சு. நோ ஜெனரேட்டர். மொத்தம் நாறிப்போச்சு.

அதனால "எதிர்மறையா யோசிங்க" முன் யோசனையோட ப்ளான் பண்ணுங்க. உங்க முதலீட்டை எத்தனை கேட்டகிரியா பிரிச்சுக்கனும், ஒவ்வொரு கேட்டகிரியிலயும் முதலீடு எப்படி செய்யப்படனும்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

உடுங்க ஜூட்டு..,Comments

 1. வருக...வருக...

  அடுத்த பதிவிற்காக...

  எதிர்நோக்கும்.

  ReplyDelete
 2. நன்றி ஐயா.. மொதல்ல எல்லாருக்கும் இல்லின்னாலும் கொஞ்ச பேருக்காச்சும் தெரிஞ்ச விஷயங்களை தொட்டுக்கிட்டே போயி டாக்டர் பட்டம் தேடி வர்ர கணக்கா நிறைய மேட்டர் இருக்குல்ல. எடுத்து விடுவம்ல. உ.ம் ப்ளாக் ஹோல் தியரி

  ReplyDelete
 3. கிருஷ்ணாSeptember 20, 2012 at 11:49 AM

  பயனுள்ள பதிவு தல

  ReplyDelete
 4. பதிவுக்கு மிக்க நன்றி ...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்