பணம் பணம் பணம் : 14

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்கா !!

தொழிற்களம் வலைதளம் மூலமா 14 ஆவது நாளை உங்களை சந்திக்கிறேன்.  நேத்திக்கு முதலீடுல எத்தனை கேட்டகிரி இருக்கு. நேற்றைய அத்யாயத்துல  நாம செய்யவேண்டியது என்ன செய்யக்கூடாதது என்னனு பார்த்தோம்.

அந்த அத்யாயத்துல  பண வேட்டையில இறங்கறவுக சந்திக்க வேண்டிய - நிறைய பேர் பல்பு வாங்கின தொழிலாளர் பிரச்சினையையும் , விளம்பரம் தொடர்பான பிரச்சினைகளையும் இன்னைக்கு சொல்றதா சொல்லியிருந்தேன். சொல்லிர்ரன். கடேசியில அக்காவுங்களுக்கு ஒரு அறிவிப்பு. (இது அண்ணாமாருக்கும் பொருந்தும் தான். )

அந்த காலத்துல பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு? "ஜகமெரிகின ப்ராஹ்ம்னுடிக்கி ஜந்த்யாலெந்துகுன்னெல்லாம் பழமொழிகள் இருந்தது. ரெண்டாவது பழமொழி தெலுங்கு பழமொழி. இதுக்கு அருத்தம் "ஊரறிஞ்ச பிராமணனுக்கு பூணூல் எதுக்கு?"

ஆனா  இன்றைய காலகட்டத்துல எல்லா தொழிலுக்கும் - எல்லா சேவை மையங்களுக்கும் விளம்பரம் வேண்டியிருக்கு. மந்திரம் கால் மதி முக்கால்ங்கற மாதிரி நம்மாளுங்க சரக்கு கால் விளம்பரம் முக்கால்னு ரஜினி கணக்கா பறந்து பறந்து அடிக்கிறாய்ங்க. இது ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் கணக்கா வேலை செய்யும்.

விளம்பரத்துல அழகழகான மாடல்களை வச்சு சொன்ன மேட்டர்ல ரூவாய்க்கு 10 பைசாவாச்சும் சரக்குல இருந்தா ஓகே. இல்லின்னா விளம்பரத்துக்கு செலவழிச்ச காசெல்லாம் கடல்ல இறக்கின உப்பு குதிரை மாதிரி ஆயிரும்.

விளம்பரத்துல பல வகை இருக்கு

1.த பாருப்பா இப்படி ஒரு யாவாரத்தை - இந்த விலாசத்துல துவங்கியிருக்கோம்னு மட்டும் சொல்றது

இது கட்டாயம் செய்தாக வேண்டிய விளம்பரம்.

2. இந்த யாவாரத்தை மத்தவுக இப்படில்லாம்  செய்றாய்ங்க .ஆனால் நாங்க அப்படியில்லை "இப்டி இப்டி" செய்யப்போறோம்னு சொல்றது.

இதை ஆரம்பத்துல மட்டும் கிராண்டா சொல்லி விட்டுட்டா போதும்.

3.மகாசனங்களே ..இது  பலான நாள் /பலான மாசம்  உங்களுக்கு பலான பலான ஆஃபர் எல்லாம் தரோம்னு சொல்றது. உ.ம் ஆடித்தள்ளுபடி / அட்சய திருதியை

இதுவும் தேவை தான்.

ஆனால் விளம்பர பட்ஜெட்டை தயாரிக்கிறது பெரிய வித்தை. நம்ம தொழில் என்ன? நம்ம கஸ்டமர்ஸ் ஆரு. அவிக வயசு என்ன? அவிக படிப்பாய்ங்களா? படிப்பாங்கன்னா  தினசரியா? வார இதழா? சினிமா பத்திரிக்கையா? டிவி பார்ப்பாய்ங்களா? பார்ப்பாய்ங்கன்னா எந்தெந்த சானல் பார்பபய்ங்க.

அவிக ஃப்ரீ டைம் எது? அவிக தாய் மொழி எது?- ஆரு சொன்னா அவிக கேட்பாய்ங்க. இப்படி பல மேட்ட்டரை ரோசிக்கனும்.

நம்ம நிறுவனம் இருக்கிற ஏரியா எது? நம்ம கஸ்டமர்ஸ் ஏரியாவுலருந்து வந்தா போதுமா? வெளியிலருந்து வரனுமா? வெளியூர்லருந்து வரனுமா? இப்படி அனேக கேள்விகளை நாமே கேட்டுக்கனும்.

எல்லாத்தை விட முக்கியம். நமக்கு கிடைக்கிற லாப சதவீதம் என்ன? விளம்பரத்துக்கு ஆகக்குடிய  செலவு எவ்வளவு?  அந்த செலவு போக லாபம் நிக்குமா?

ஒரு வேளை நம்ம லாப சதவீதத்தை விட விளம்பர செலவு அதிகமா இருக்கும் பட்சத்துல  விளம்பரம்
கவர்ந்திழுக்கிற கூடுதல்  வாடிக்கையாளர்களால  விற்பனை எந்த அளவு கூடும். லாபம் எந்த அளவு கூடும்.

லாபம் ப்ளஸ் கூடுதல் லாபத்துலருந்து விளம்பர செலவை கழிச்சா லாபம்  நிக்குமான்னு பார்க்கனும். இன்னைக்கு தந்த விளம்பரத்துக்கு நாளையே ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியாது.

இந்த அட்சய திருதியைக்கு கொடுத்த விளம்பரம் அடுத்த அட்சய திருதியைக்கு ஒர்க் அவுட் ஆகிற சான்ஸும் இருக்கு.

கடந்த அட்சய திருதியையின் போது  நம்ம வாடிக்கையாளரோட அம்மா செத்துபோயிருக்கலாம்.அதனால அவன் வராம இருந்திருக்கலாம். அடுத்த வருசம் வரலாம்.

அதனால நம்ம விளம்பர செலவை அதிக பட்சம் ஒரு வருசத்துக்கு கு.பட்சம் 3 மாசத்துக்கு தொடர்ந்து செய்யற கப்பாசிட்டி இருந்தாதேன் இதுல இறங்கனும்.

ஒரு தாட்டி பத்து வட்டிக்கு கடன் வாங்கி விளம்பரம் கொடுத்து க்ளிக் ஆயிர்ரதெல்லாம் ச்சொம்மா கதை. ரஜினி சினிமால தான் ஒர்க் அவுட் ஆகும்.

அதுலயும் இன்னைக்கு ப்ரிண்ட் மீடியாவே கலகலத்து கிடக்குது. எலக்ட்ரானிக் மீடியாவுக்கு போகனும்னா நம்ம யாவாரத்துக்கு அந்தளவு "வொர்த்" இருக்கா பார்த்துக்கனும். செலவை சமாளிக்கமுடியுமா பார்க்கனும்.

விளம்பரம்னா பத்திரிக்கை விளம்பரம் ,டிவி விளம்பரம் மட்டுமே கிடையாது. விளம்பரம் பண்றதுக்கு  ஆயிரக்கணக்கான மார்கங்கள் இருக்கு. ரேடியோ ,லோக்கல் டிவி சானல் , துண்டு பிரசுரம்,போஸ்டர், ஃப்ளெக்ஸி, சைன் போர்டு, விளக்கு கம்பம், மரம், வால் ரைட்டிங் இப்படி எத்தனையோ இருக்கு.

இதுல எதை தேர்ந்தெடுக்கிறது ? உங்க வாடிக்கையாளனை எது ரீச் ஆகுமோ அந்த மார்கத்தை "மட்டுமே" நீங்க தேர்ந்தெடுக்கனும். உங்க தேர்வை உங்க எக்கனாமிக்கல் கேப்பபிளிட்டி முடிவு பண்ணப்படாது.

நாம சில்லறை கடை வச்சுருந்த சின்ன  ஊருல ஒரு நகைக்கடை (1994) .பெரு நகரங்கள் , நகரங்கள்ள  நகை கடைக்காரவுக பண்ற அலம்பல் எல்லாத்தையும் அந்த கடை காரரும் பண்ணுவாரு . சகட்டுமேனிக்கு இவரே அக்கேஷன்ஸ் கிரியேட் பண்ணி பத்திரிக்கையில எல்லாம் விளம்பரம் அள்ளி விடுவாரு. அந்த பக்கம் திருப்பதி -இந்த பக்கம் சித்தூர். மத்தியில உள்ள  ஊரு அது.இவர் க்டைக்கு வரனும்னா சுத்துவட்டாரத்துல உள்ள 18 பட்டி கிராம மக்கள் தான் வரனும். கடைக்காரரு நம்ம க்ளையன்டு. வெல் விஷரும் கூட.

அந்த அக்கறையில "வாத்யாரே.. எதுக்கு வீண் செலவு. இதைவிட ஒரு ஆட்டோவுக்கு பேனர் கட்டி நாலு இளவட்டங்களோட ஒரு ஆசாமிக்கு குபேரன் வேஷம் போட்டு 18 பட்டிக்கும் அனுப்பிரு. உனக்கு தம் இருந்தா ஒரு குட்டிக்கு லட்சுமி வேஷம் போட்டு அனுப்பு.  நீ நினைக்கிற ரேஞ்செல்லாம் உன் கடைக்கு இல்லை"ன்னு சொல்றது வழக்கம்.

ஒவ்வொரு தாட்டியும் அலம்பல்,அலப்பறை நகை கடையில கூட்டம்  அம்மும். கணக்கு பார்த்து கல்லா கட்ட  ராத்திரி 12 ஆகும். எலக்சன் ரிசல்ட்டு மாதிரி சொல்லுவாரு " பத்துரூவா அடி" " இருபது ரூவா அடி"

இப்படி ஆயிரக்கூடாது நம்ம  நிலமை. நம்ம விளம்பரம் துடைப்பத்துக்கு போட்ட பிளாஸ்டிக் பிடி மாதிரி இருக்கனுமே தவிர பட்டு குஞ்சமாயிரப்படாது.

விளம்பரங்கறது பெரிய சப்ஜெக்டு நாளைக்கும் நிறைய விஷயங்களை சொல்றேன். வடை பெறுவதற்கு முன் .. ச்சே எழுத்து பிழை. விடை பெறுவதற்கு முன்னே சகோதிரிகளுக்கு ஒரு அறிவிப்பையும் -   நேத்து இன்னைக்கு இந்த தொடர்பதிவுல நுழைஞ்சவுகளுக்கு ஒரு அறிவிப்பை தந்துரலாம்.


சகோதிரிகளுக்கான அறிவிப்பு:

இந்த தொடர் பதிவுல சகோதிரிகளுக்காக ஒரு தனி அத்யாயமே வரப்போகுதுன்னு சொல்லி பல நாளாச்சு.இன்னி வரைக்கும்  ஒன்னத்தையும் காணோம்னு கோவிச்சுக்கிட்டிருப்பாய்ங்க.

எழுதிரலாம்னு தான் பார்த்தேன்.ஆனால் ரெம்ப  நாளைக்கு மிந்தியே ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு சலிக்க சலிக்க எழுதியாச்சு. அது ஜோதிட தொடர்தான்.ஆனாலும் நாம ஜஸ்ட் ஜோதிடத்தை மட்டும் எழுதினதா சரித்திரமே இல்லையே.

மனித வாழ்க்கை என்ன ரெண்டாம் வாய்ப்பாடா? ஊஹூம்.. அல்ஜீப்ரா மாதிரி. இதை விவரிக்கனும்னா எல்லா கோணத்துலருந்தும் ஃபோக்கஸ் பண்ண வேண்டியதா இருக்கு. மேற்படி தொடர்ல லக்னம் முதல் 12 ஆம் பாவம் வரைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன வித்யாசம்னு நோண்டி நுங்கெடுத்திருக்கன்.

அந்த 12 பாவங்கள்ள காசு,பணத்தோட தொடர்புள்ள சில பாவங்களை தேடி படிச்சாலே போதும். மேட்டர் ஓவர்.  நீங்க தேடிப்படிக்க வேண்டிய அந்த பாவங்கள் 2 , 6, 9 ,10 ,11 தேன். என்னக்கா படிப்பிங்கல்ல.

கூகுல் சர்ச்ல   போயி ஆண் பெண் வித்யாசங்கள் னு தேடினா போதும். அப்படியே கொட்டும். இன்னொரு விஷயம் நமக்கு எதையும் மேம்போக்கா சொல்ட்டு போற வழக்கம் கிடையாது. எந்த மேட்டர்லயும் சில்லி வேர்களை மட்டும் பிடிச்சுக்கிட்டு ஜல்லியடிக்க தெரியவே தெரியாது.ஆணிவேரை பிடிச்சு அசைக்க ஆரம்பிச்சுருவம்.

எல்லாத்துக்கும் ஆணி வேர் கொஞ்சம் வில்லங்கமானது. எனக்கு தேவை உண்மை .அக்மார்க் உண்மைன்னு துணிஞ்சவுக மட்டும் தேடுங்க.மத்தவுக அம்பேல் ஆயிரலாம்.

புது முகங்களுக்கு ஒரு அறிவிப்பு:
இந்த அத்யாயத்தை படிச்சுட்டு  தொடரின் ஆரம்ப அத்யாயங்களை படிக்க ஆர்வமா இருப்பிங்க. மேற்படி அத்யாயங்களோட தொடுப்புகளுக்கு  இங்கே   அழுத்துங்க.

பொன்மொழி:

பணம் செய்வதெல்லாம் ஒன்று தான் அதை பெற்றவர்களுக்கு அதை இழந்துவிடுவோமோ என்ற பயத்தை தருவது

Comments

 1. வாங்கண்ணே, எங்கே இன்னும் காணலியேனு பார்த்தோம்...

  கலக்குங்க....

  ReplyDelete
 2. தொழிற்களம் குழுவுக்கு ,
  வந்துட்டம்ல . (ஹி ஹி கொஞ்சம் முன்னே பின்னே)

  ReplyDelete
 3. மின் வெட்டின் காரணமாக சில நாட்கள் படிக்க முடியவில்லை.
  1.த பாருப்பா இப்படி ஒரு யாவாரத்தை - இந்த விலாசத்துல துவங்கியிருக்கோம்னு மட்டும் சொல்றது

  இது கட்டாயம் செய்தாக வேண்டிய விளம்பரம்.

  அருமையான தகவல்

  ReplyDelete
 4. வாங்க தமிழ் ராஜா !
  என்னிய வச்சு காமெடி கீமிடி பண்ணலியே..

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்