பணம் பணம் பணம் : 15

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்கா !!

தொழிற்களம் வலைதளம் மூலமா 15 ஆவது நாளை உங்களை சந்திக்கிறேன்.  நேத்திக்கு விளம்பரம் தர்ரதுல  எத்தனை கேட்டகிரி இருக்கு. விளம்பரம் தரதுக்கு மிந்தி எத்தனை கோணத்துல ரோசிக்கனும். விளம்பர பட்ஜெட்டை எப்படி உருவாக்கறது, இந்த விஷயத்துல  நாம செய்யவேண்டியது என்ன செய்யக்கூடாதது என்ன  இத்யாதி விஷயங்களை பற்றி கோடி காட்டினேன்.

யப்பா ! இப்பத்தான்யா இந்த ஆளு கோடிங்கற வார்த்தையையே சொன்னான்னு சலிச்சுக்கிறது ஆருப்பா?  இலக்கங்களை எண்ணும் போது ஒன்னு,பத்து , நூறுன்னு எண்ணுவம் ஞா இருக்கா.  பண வேட்டையில ஒன்னுலருந்து பத்து ,பத்துலருந்து நூறு, நூறுலருந்து ஆயிரத்துக்கு ஜம்ப் ஆறது ரெம்ப கஷ்டம். ஆயிரங்கள்ளருந்து லட்சத்துக்கு ஜம்ப ஆறதும் கொஞ்சம் கஷ்டம் தான்.லட்சங்கள்ளருந்து கோடிக்கு ஜம்ப் ஆக ஆரும் சொல்லித்தர வேண்டியதே இல்லை. சனம் உங்களை நெட்டி தள்ளிக்கிட்டே இருக்கும்.

இதுல என்ன ஒரு ரிஸ்க்னா மவனுங்க கோடிகளை நோக்கி தள்றானுவளா அல்லது பேக் டு தி பெவிலியன் தள்றானுங்களான்னுட்டு பல சமயம் புரியவே புரியாது. கோடியை தொட்டவன் அதை விட்டு இறங்கி வந்தான்னா அவனை மாதிரி முட்டாள் உலகத்துலயே இல்லேன்னு அருத்தம். அவன் எதையெல்லாம் ஃபாலோ பண்ணி கோடியை தொட்டானோ அதையெல்லாம் திராட்டுல விட்டுட்டான்னு அருத்தம்.

ஆக லட்சங்களை தொட முடிஞ்சா போதும் ஒரு ஃப்ளோல அப்படியே போயிருவிங்க. உங்களுக்கு கோடி காட்ட வேண்டிய அவசியம் கூட கிடையாது.  கோடி உங்களை தேடி வந்துரும்.

நிற்க. இன்னைக்கு இந்த லேபர் ப்ராப்ளத்தை பார்த்துருவம்.

நம்ம ஊர்ல செல்வாக்கான ஜாதி பின்னணி ,தூளான லாட்ஜு,கூடவே ஒரு நான் வெஜ் ஹோட்டல் நடத்திக்கிட்டிருந்தாய்ங்க.சாதாரணமா ஹோட்டல்கள்ள  வாடிக்கையாளர்கள் எல்லாம்  சாப்டு முடிச்ச பிறவு மிச்சம் மீதியத்தான் லேபருக்கு போடுவாய்ங்க. ஆனால் இந்த ஹோட்டல்ல அப்படி கிடையாது. மொதல் பந்தி (?)  லேபருக்குத்தான். திருப்பதி ரேணிகுண்டா ரோட்ல ஒரு நாள் ( மட்டும்)  கேட்டரிங் சூப்பர் வைசரா வேலை செய்தப்ப  லேபருக்குன்னு தனி சமையலே நடக்கிறதை பார்த்தேன்.

சமீப காலமா - பல மாதங்களாவே மராமத்துக்காக மூடப்பட்டுள்ளது-ங்கற போர்டு தொங்கிக்கிட்டு கிடக்கவே என்ன ஏதுன்னு விஜாரிச்சேன் .  லேபர் ப்ராப்ளமாம்.

நம்ம ஊரு சாக்லெட் கம்பெனியில   ( நியூட்ரினுங்கோ) முக்கியமான ஆசாமியோட நண்பர் நமக்கும் நண்பர். அவர் ரெம்ப காலத்துக்கு மிந்தி நடந்த ஒரு சம்பவத்தை சொன்னாரு. தொழிலாளர்கள் சின்ன சின்ன டப்பால சோறு கொண்டு வர்ரதை பார்த்த ஓனரு மனசு சங்கடப்பட்டு இனி எல்லாத்துக்கும் கேண்டிலயே சோறுன்னு அனவுன்ஸ் பண்ணிட்டாராம். இந்த ஏற்பாடு பத்து நாள் அமலாகிறதுக்குள்ள நூத்துக்கணக்கான புகார்கள்.

எனக்கு வீட்டு சாப்பாடுதான் செட் ஆகும். நான் வீட்லருந்தே கொண்டு வந்துர்ரன். கேண்டீன் சாப்பாட்டுக்கு பதில் பைசா கொடுத்துருங்கறான் ஒருத்தன்.

சனிக்கிழமை வடை பாயசம் போட்டா என்னங்கறான் ஒருத்தன். ஒரு கட்டத்துல கடுப்பாகி கேண்டின் சாப்பாடு திட்டமே தூக்கியாச்சு.

நம்ம நண்பர் சின்னதா குவாரி நடத்திக்கிட்டிருக்காரு.குவாரிக்கு லேபர்களை பிடிச்சு கொடுக்கவே ஒரு நெட் ஒர்க் உண்டு. அவிக இருக்கிற ஊருக்கே போயி லம்பா அட்வான்ஸ் கொடுத்து கூட்டிக்கிட்டு வரனும்.

பொங்கலுக்கு ஊருக்கு  போயிட்டு ரெண்டு நாள்ல வரேன்னுட்டு கிளம்புவாய்ங்க. வாரமாகும்,மாசமாகும் .. இங்கன பொக்லைன், டிப்பர், கம்ப்ரெசர் எல்லாம் வாடகையை விழுங்கிட்டு ச்சொம்மா  உட்கார்ந்திருக்கும். நண்பர் இடுப்பு வலிகண்ட தாய்குலம் மாதிரி தவிச்சுக்கிட்டிருப்பாரு.

இது ஒரு கோணம்.

போன மாசம்னு நினைக்கிறேன். ஒரு ஆசாமி நல்லா சிகப்பா இருக்கான். ராஜஸ்தானா,மஹாராஷ்ட்ராவா தெரியலை. நேர நம்ம கிட்டே வந்து "ஒரு அம்பது ரூவா கொடுங்க பாஸு"ன்னான். அரண்டு போயிட்டன்.

இன்னாடா மேட்டருன்னா  கேட்டவன்  குவாரில வேலை பார்க்க சித்தூர் வந்த 15 பேரு லேபருங்கள்ள ஒருத்தன். இவிகளை அனுப்பினவன் குவாரிகாரனோட செல் நெம்பரை கொடுத்திருக்கான். இவிக ஊரு வந்து சேர்ந்தது மதியம் 2 மணிக்கு. இப்பம் நேரம் ராத்திரி 9 மணி.

குவாரி காரனுக்கு ஃபோன் போட்டா " இதோ வந்துக்கினே கீறேன்"ங்கறானே தவிர வந்த பாடா இல்லை.

நம்ம நிறம், ஜுப்பா எல்லாம் பார்த்துட்டு நார்த் இண்டியன்னு நினைச்சிருக்கான். அம்பது ரூவா இருந்தா கோதுமை மாவு வாங்கி அல்லாரும் சப்பாத்தி சுட்டு தின்னுட்டு வெய்ட் பண்ணுவம்ங்கறான். பெட்ரோல் போட வச்சிருந்த அம்பது ரூவாயை அவன் கிட்டே கொடுத்துட்டு வந்துட்டன்.

ஒரு பெரிய நர்சிங் ஹோம். டாக்டருக்கு அரசியல் பின்னணியும் உண்டு. கொய்யால இவன் கிட்டே வேலைக்கு போனா திருட்டு பட்டம் கட்டாம அனுப்பவே மாட்டான். வேலைக்காரின்னா நெக்லஸ் திருடிட்டானு கம்ப்ளெயின்ட் பண்ணுவான். நர்ஸுன்னா கவுண்டர் கேஷை லவட்டிட்டான்னு கம்ப்ளெயின்ட் பண்ணுவான்.

ஒரு சிமென்ட் டீலர் இருக்கான். ஒரே கொடவுன் தான். ஆனா அதை பெருக்க அரை டஜன் பொம்பள ஆள வச்சிருப்பான். வேலைக்கு வர்ர பொம்பளைங்க ஒரு வாரம் கூட நிக்க மாட்டாய்ங்க.  பொம்பள பெருக்க கொடவுன் உள்ற போனா பின்னாடியே இவன் போவான். வெள்ளை வேட்டி ,வெள்ளை சட்டை. அந்த தூசுல எப்டித்தான் மெயின்டெய்ன் பண்ணுவானோ தெரியாது.

இவ்ளோ எதுக்கு  ஆந்திர முதல்வருக்கு ஐடியா கொடுத்து மெய் கீர்த்தி பெற்ற நம்மையே ஜஸ்ட் 5 வருசத்துக்கு மிந்தி  ஒரு ஸ்கூல் கரெஸ்பான்டென்ட் எனக்கப்பாறம்  நீதானு அப்பாய்ண்ட் பண்ணிக்கிட்டு  30 நாள் கழிச்சு  ரூ.945 சம்பளம்னான் .

ஆக பிரச்சினை ரெண்டு பக்கமும் இருக்கு. உண்மை மத்தியில இருக்கு. அந்த உண்மைய எப்படி தரிசிக்கிறது லேபர் மென்டாலிட்டிங்கறாய்ங்களே அது என்ன? இந்த மாதிரி மேட்டரையெல்லாம் நாளைக்கு விவரமா பார்ப்போம்..Comments