பணம் பணம் பணம்: 17

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

தொழிற்களம் வலை தளம் மூலமா இன்னைக்கு 17 ஆவது நாளா சந்திக்கிறேன்."இன்னாபா நீ எல்லாத்தையும் தொட்டு காட்டிட்டு ஜம்ப் பண்ணிர்ரே.. ரோசிச்சு ரோசிச்சு மண்டை காஞ்சு போகுது"ன்னு போன்ல அங்கலாய்க்கிறாய்ங்க.

உங்களை ரோசிக்க வைக்கிறதும் -உங்க கால்ல நீங்க நிக்கிறாப்ல பண்றதும் தான் என் நோக்கம். சதா சர்வகாலம்  நீங்க என்னையோ -இந்த தொடரையோ சார்ந்திருக்க கூடாதுங்கறதுதான் நம்ம உத்தேசம்.அதனாலதான் இந்த தாவல்.

உங்களுக்கு ஒன்னுமே தெரியாது - நான் சொல்லித்தான் தெரியப்போகுதுன்னு நினைச்சா என்னாட்டம் மடையன் வேற  இருக்க மாட்டான். நான் பண்றதெல்லாம் ஜஸ்ட் உங்களுக்கு ஞா படுத்தறேன் தட்ஸால்.

நேத்திக்கு கவனிக்கிறது  மற்றும் முடிவெடுத்தல் பத்தி டச் பண்ணியிருந்தேன். கவனிக்கிறதுல பல விதம் இருக்கு.

குப்பை தொட்டிக்கிட்டே  நாய் கவனிச்சிட்டிருக்கும். எச்சில் இலை எப்ப விழும்னு -இது ஒரு விதம். நம்மாளு எப்படா வெளிய வர்ரான்னு காதலன் காத்துக்கிட்டிருப்பான் -இது ஒரு விதம்.வாத்தியாருக்கு எப்ப  ஃபோன் வரும் வெளிய போயி பேசுவாருன்னு பையன் பார்ப்பான் இது ஒரு விதம்.

இதுல எல்லாம் ஒரு வித எதிர்ப்பார்ப்பு இருக்கு. ஜஸ்ட் கேஸ் ஹிஸ்டரியை ஆதாரமா கொண்ட எதிர்ப்பார்ப்பு. தன் மனசுல ஒன்னை வச்சுக்கிட்டு அது நடக்குதாங்கற எதிர்பார்ப்பு.

ஆனால் பண வேட்டைக்கு இந்த விதமான கவனிப்பு உபயோகப்படாது.  நம்ம கவனிப்பு எப்படி இருக்கனும்னா நாம வேற ஒரு கிரகத்துலருந்து வந்திருக்கம். இவிகளை பத்தி சின்னதா ஒரு ரிப்போர்ட் தயாரிக்க வேண்டியிருக்குங்கற ரேஞ்சுல இருக்கனும். ஒரு ராஜா மாறு வேஷத்துல வந்த மாதிரி கவனிக்கனும்.

விருப்பு வெறுப்பு இல்லாம கவனிக்கனும். ஏற்கெனவே முடிவு பண்ணிக்கிட்டு கவனிக்க கூடாது. நம்ம கவனிப்பு தர்ர முடிவு எதுவா இருந்தாலும் திறந்த மனதுடன் ஏத்துக்கிற மன நிலையோட கவனிக்கனும்.

அடிப்படையில நாம கவிஞர் . அக்மார்க் கவிஞர் . நமக்கு யாவாரம்லாம் தெரியாது. நமக்கு தெரிஞ்சதெல்லாம் பாரதியார் சொன்ன மாதிரி " நமக்கு தொழில் கவிதை .நாட்டுக்குழைத்தல்"

எந்த காலத்துலயும் நாம வியாபாரம் பண்ணுவம்ங்கற எண்ணமே இல்லாம ச்சொம்மா அப்சர்வ் பண்ணிட்டிருந்தம். பணவேட்டையில உள்ளவுக என்ன பண்றாய்ங்கன்னு பார்த்துக்கிட்டிருந்தம். நாம ஆட்டத்துலயே இல்லை. கு.பட்சம் பாச்சா கூட கட்டிக்கலை. அதனாலதான் நம்மால கவனிக்க முடிஞ்சது. உங்களோட பகிர்ந்துக்க முடியுது.

கவனிக்கனும். பணவேட்டையில யாரெல்லாம் இருக்கான். அதுக்கு என்னெல்லாம் பண்றான். செயிக்கிறவ்ன் செயிக்க என்ன காரணம் தோத்தவன் தோற்க என்ன காரணம்னு அப்சர்வ் பண்ணனும்.

விஜய் மல்லய்யாவுலருந்து - லோக்கல் பில்டிங் மெட்டீரியல் டீலர் வரை கவனிக்கனும். எல்லா தப்பையும் நாமே செய்து திருந்தனும்னா வாழ் நாள் போறாது. அதுவும் பைசா மேட்டர்ல ஒரு தாட்டி இழந்துட்டா விட்டதை பிடிக்க ரெம்பவே மெனக்கெடனும்.

காமர்ஸ்ல ஒரு சின்ன விஷயம் இருக்கு. வியாபாரம் வேறு.வியாபாரி வேறு. வியாபாரி ஒரு ஆயிரம் ரூவா செலவுக்கு வேணம்னா கூட "முறைப்படி"  தான் எடுக்க முடியும். "ட்ராயிங்ஸ்"ங்கற அக்கவுண்ட்ல எளுதிட்டு தான் எடுக்கமுடியும்.

நம்மாளுங்களுக்கு இந்த  மேட்டர் உறைக்காம போறதாலதான் ஆலமரமா செழிச்சு வந்த வியாபாரத்தை கூட சிதைச்சுர்ராய்ங்க.

வியாபாரத்தை தன்னிலிருந்து பிரிச்சு பார்க்க முடியாத  காரணத்தால தான் சின்ன வீடு ,கில்மா பார்ட்டி, மந்திரவாதி, வாஸ்து காரன்னு அள்ளி விட்டுர்ராய்ங்க. குந்தி தின்றால் குன்றும் மாளூம்.

ஆரெல்லாம் யாவாரத்தையும் தன்னையும் பிரிச்சு பார்க்காம ஆட்டம் போடறான்னு பாருங்க.ஆரெல்லாம் வியாபாரத்தையும் தன்னையும் - தன் சொந்தப் பணத்தையும் யாவாரத்துல புரள்ற பணத்தையும் பிரிச்சு பார்க்கிறான் பாருங்க.

எதுக்கும் ஒரு முறை இருக்கு. முறைப்படி பயணத்தை துவங்கும்போது கொஞ்சம் சிரமம் இருக்கலாம். முன்னேற்றம் தாமதமாகலாம். வேகம் குறைவா இருக்கலாம்.உழைப்பு அதிகம் தேவை படலாம். லாபம் குறைவா இருக்கலாம். ஆனால் பயணம் நிம்மதியானதா இருக்கும்.இலக்கை அடைஞ்சே தீருவம்.

2012 ல போயி  என்னப்பா முறை கிறைன்னுக்கிட்டுங்கறவுக ஒரு தடவை  அன்றைய ஃபைனான்ஸ் கம்பெனிகள்ள இருந்து இன்றைய ஈமு கோழிப்பண்ணை வரை ரோசிச்சு பாருங்க. புரியும்.

ஒருத்தன் செயிச்சாலும் தன் சகல மடமைகளோடத்தான் செயிக்கிறான். (மடமை மழுப்பப்பட்டுரும்)
ஒருத்தன் தோத்தாலும் தன் சகல திறமைகளோடத்தான் தோற்கிறான் ( திறமை மழுப்பப்பட்டுரும்)

அதுக்காக காட்டடி அடிக்கப்படாது. தவறி நம்ம கை மேல விழுந்தா தாங்க முடியாது.

கவனிங்க பாஸு.. ஜெயிச்சவுகளை கவனிங்க. தோத்தவுகளை கவனிங்க. ஜெயிச்சவுகளை காப்பி பண்ணிராதிங்க.  அது அசிங்கம்.

தோத்தவனை ஒடனே முட்டாள்னு கணக்கு பண்ணிராதிங்க. ஏன் தோத்தான்னு ரோசிங்க. அந்த காரணத்தை காயடிச்சுட்டு காரியத்தை துவக்குங்க.

ஜெயிச்சவனோட குண நலன்கள் ,அவனோட  ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் , டைமிங் சென்ஸ், டாலரன்ஸ்,பொறுமை ,உழைப்பு,போராட்டகுணம்,  டைம் மேனேஜ்மென்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எல்லாத்தையும் கவனிங்க. மெருகேத்துங்க .ஃபாலோ பண்ணிக்கங்க.ஆனால் அவன் என்ன பண்றானோ அதை பண்ணிரலாம்னு நினைச்சுராதிங்க.

சத்ருக்ன சின்ஹா ஹிந்தில இருந்ததால அவரை ரஜினி தமிழ் படத்துல  காப்பி பண்ணாலும் அஜீஸ் ஆயிருச்சு. விஜய்காந்த் கூட விஷயம் தெரியாம ஆரம்பத்துல ரஜினியை கியாபகப்படுத்தினது உண்டு. ஆனால் காலப்போக்குல தனக்குன்னு ஒரு ஸ்டைலை கொண்டு வந்துட்டாரு.க்ளிக் ஆயிட்டாரு.

ஆக கவனிங்க. காப்பி அடிச்சுராதிங்க ஓகேவா..

குறிப்பு:
கடைசி பாரால மொழிக்கலப்பு உச்சத்தை தொட்டுருச்சு. தமிழ் வார்த்தைக்கு முக்கி முக்கி ரோசிக்கிறதுக்குள்ள பவர் கட் பண்ணிருவானுவ. பதிவே போட முடியாம போயிரும்னு அப்படியே விட்டுட்டன்.

பண்டிதர்கள் உரிய தமிழ் வார்த்தைகள் சொன்னாலோ அ நானே முக்கி ரோசிச்சு மைண்டுக்கு வந்தாலோ மாத்திருவம்ல..

Comments