பணம் பணம் பணம்: 18


அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா!!

தொழிற்களம் வலைதளம் மூலமா 18 ஆவது நாளா உங்களை சந்திக்கிறேன். லேட்டஸ்டா கவனிக்கிறது -முடிவெடுக்கிறது எப்டின்னு தெரிஞ்சா போதும்.பண வேட்டையில உங்களை அடிச்சுக்கவே ஆளிருக்காதுன்னு சொல்லியிருந்தேன். இதுல கவனிக்கிறதை பத்தி நேத்திக்கே சொல்லியாச்சு.

இப்பம் முடிவெடுக்கிறதை பத்தி சொல்றேன்.

ஒரு ஷூ கம்பெனி புதுசா ஒரு கிளையை திறக்கறதுக்கு மிந்தி சர்வே பண்றதுக்கு ரெண்டு பேரை அனுப்பினாய்ங்களாம்.

அதுல ஒருத்தர் வந்து "சார் ! இந்த சுத்து வட்டாரத்துல எவனுக்குமே ஷூ போடற பழக்கமில்லை.அதனால இங்கே கிளை திறக்கிறது வீண்வேலை"ன்னாராம்.

ரெண்டாவது ஆளு " "சார் ! இந்த சுத்து வட்டாரத்துல எவனுக்குமே ஷூ போடற பழக்கமில்லை. இவிகளுக்கு மட்டும் ஷூ போடற பழக்கத்தை ஏற்படுத்திட்டா இந்த கிளையை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிரலாம்"னாராம்.

ஒடனே கம்பெனி எம்.டி ரெண்டாவது ஆளை பாராட்டி பரிசு கொடுத்து கிளையை ஆரம்பிச்சுட்டாராம்.

-இது நீங்க ஏற்கெனவே கேள்வி பட்ட கதையா இருக்கலாம். அட இப்பத்தான் கேள்விப்படறிங்கன்னே வச்சுக்கங்க.

இதுல அந்த எம்.டியோட முடிவு கரெக்டா?  இந்த கதையை சொன்னவுகல்லாம் கரீட்டுன்னு தான் சொல்லியிருக்காய்ங்க.

இங்க சின்ன தத்துவம்.  "மக்கள் விருபத்துக்கேற்ப செயல்படறவன் வியாபாரி -தன் விருப்பத்துக்கேற்ப மக்களை மாத்தறவன் லட்சியவாதி"

மேற்படி எம்.டி வியாபாரி .வியாபாரம்தான் பண்ணனும்.ஆனால் அவரு மக்களை மாத்தறேன்னு கிளம்பிட்டாரு. இந்த கதைக்கு பார்ட் டூவை எவனும் எழுதலை.

ஏன்னா அந்த கிளை ஊத்தி மூடியிருக்கும்.அந்த நஷ்டம் மத்த கிளைகளை அட்டாக் பண்ண கம்பெனியே திவால் கூட ஆகியிருக்கலாம்.

ஆருமே தோத்துபோனவுகளை பத்தி எழுத விரும்பறதில்லை.

சமுதாயத்துல ஏற்பட்டுக்கிட்டு வர்ர மாற்றங்களை உன்னிப்பா கவனிச்சு -அந்த மாற்றங்களால் ஏற்படும் தொழில் வாய்ப்புகளை கேட்ச் பண்ணி  தொழிலை ஆரம்பிக்கிறவன் அல்லது தன் தொழில்ல மாற்றங்களை கொண்டு வர்ரவன் தான் வெற்றியடைய முடியும்.

மாற்றங்களை கொண்டுவரேங்கறதுல்லாம் ச்சொம்மா பேச்சு.

ஒரு காலத்துல விவசாயம் முக்கிய தொழில். அன்னிய படையெடுப்புகளுக்கு பிறகு "கெவுருமென்டு வேலை"ன்னா ஒரு கெத்து . சுதந்திரத்துக்கு பிறவு  நேருமாமா, இந்திரா அம்மையார் காலத்துல  தொழில் துறைக்கு ஓட்டம். மிடில் க்ளாஸ் குடும்பங்களுக்கு ஒரு வித யோகம். 

ராஜீவ் காலத்துல கம்ப்யூட்டர். நரசிம்ம ராவ் காலத்துல அன்னிய முதலீடு தாராளமயமாக்கம்..இப்படி ஒவ்வொரு ஆட்சியில ஒவ்வொரு மைல் கல்லான மாற்றங்கள்.

இவற்றின் விளைவாக கிராமங்கள்ளருந்து நகரங்களுக்கு வலசை அதிகரிச்சுது. நகரங்கள்ள  மக்கள் தொகை அடர்த்தி அதிகமாச்சு. கூட்டுகுடும்பங்கள் சிதற ஆரம்பிச்சது. குடும்ப கட்டுப்பாடு பிரபலமாச்சு. குழந்தைகளோட எண்ணிக்கை குறைஞ்சது. பெற்றோருக்கு அவிக மேல அக்கறை அதிகரிச்சுது.கல்வி வளர்ச்சி சூடு பிடிச்சது.  மருத்துவ வளர்ச்சி அதிகமாச்சு. முதியோர் எண்ணிக்கை அதிகமாச்சு.

ஸ்தூலமான கோரிக்கைகள் மட்டுமின்றி   டிவி இத்யாதி மீடியாக்களின் வளர்ச்சியால் கற்பனையான கோரிக்கைகள் அதிகரிச்சுது.

மக்களின் தேவைகள் அதிகரிச்சுது. . பெண்கள் வேலைக்கு போக ஆரம்பிச்சாய்ங்க.சேமிப்புக்கு வாய்ப்பு அதிகரிச்சது.

ஒவ்வொரு மாற்றமும் ஓராயிரம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிருச்சு. இதையெல்லாம் உத்து கவனிச்சு தங்கள் வள்ர்ச்சிக்கு பயன் படுத்திக்கிட்டவுக -தொடர்ந்து அப்டேட் பண்ணிக்கிட்டு வந்தவுக  சக்ஸஸ் ஆனாய்ங்க.

விழிச்சுக்கவே விழிச்சுக்காதவுக - இடையில தூங்கிட்டவுகல்லாம் மொக்கை ஆயிட்டாய்ங்க. ஆக யாவாரி மாற்றங்களை கவனிக்கலாம். அது தரும் தொழில் வாய்ப்புகளை பயன் படுத்திக்கலாம்.

மாற்றங்களை கொண்டு வர்ரதெல்லாம் ச்சொம்மா போச்சு.

இந்த மாற்றங்கள் பெரு நகரங்கள்ள சீக்கிரமா நுழைஞ்சிரும். நகரங்கள்ள கொஞ்சம் ஸ்லோ. மேலும் ஒரு மாற்றம் வரும் போது புது சினிமா ரிலீசான  தியேட்டர்ல   டிக்கெட் கவுண்டர்ல அடிச்சு பிடிச்சு  நுழைஞ்சாப்ல அதை கேட்ச் பண்ணி வேட்டையாடிரலாம்னு துடிக்கப்படாது.

கொஞ்சம் போல விட்டுப்பிடிக்கனும். ஏற்கெனவே நுழைஞ்சவனுக்கு என்னெல்லாம் பிரச்சினைகள் வருதுன்னு வேவு பார்த்து இடம்,பொருள்,ஏவல் எல்லாம் பார்த்து இறங்கனும்.

அதிலயும் தொழில் நுட்பம் சார்ந்த தொழிலா இருந்தா -முதற்கண் நாம அதுல அறிவை வளர்த்துக்கனும் - கேள்வி கேட்கனும் -தொடர்ந்து கேட்கனும் -கிடைக்கிற பதில்களை அலசி பார்க்கனும்.

நம்ம ஊருல ஒரு பார்ட்டி உங்க டிவியே கம்ப்யூட்டர் - நாங்களே மௌஸ் தர்ரோம் -நாங்களே கீ போர்டு தர்ரோம்னு கோதாவுல தொபுக்கடீர்னு குதிச்சு பயங்கர பல்பு.

உதாரணத்துக்கு எலக்ட்ரிக் பைக். இந்த டெக்னாலஜி வந்த புதுசுலயே நம்ம ஊரு சைக்கிள் டீலர் ஒருத்தரு ச்சொம்மா கர்சீஃப் போட்டு வைக்கலாம்னு  இறங்கினாரு. ஊருக்கெல்லாம் சேர்த்து ஒரு டஜன் கூட விற்க முடியலை.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட ரெடிமேட் டெக்னாலஜி வந்தது .ஆனால் ஊத்திக்கிச்சு. ரெடிமேட் பேண்ட் சட்டைன்னா ஒடனே பிடிச்சுக்கும்.ரெடிமேட் ரவிக்கைன்னா கொஞ்சம் டைம் பிடிக்கும். லாஜிக்கு.

மாற்றங்கள் கொடுத்த தொழில் வாய்ப்புகள் அனேகம். அதே நேரம் அந்த தொழில்களில் இறங்கி பல்பு வாங்கியவர்களும் அனேகம். ஏன்?

அந்த மாற்றம் என்ட்ரி கொடுத்து சரியான ஒரு சீட்டை பார்த்து  செலக்ட் பண்ணி உட்கார்ந்து ஃபேனை போடுப்பாங்கறதுக்குள்ள இவிக குதிச்சுருக்கலாம்.

அல்லது அந்த மாற்றம் இடம் பிடிச்சு உட்கார்ந்து கார்வார் பண்ண ஆரம்பிச்சு முழுசா ஒரு ரவுண்டு வந்த பிற்காடு இவிக ஆற அமர இறங்கியிருக்கலாம்.

இது ரெண்டுமே தப்பு. முடிவெடுக்கிறதுல இன்னம் நிறைய சமாசாரம்லாம் இருக்கு.அதையெல்லாம்  நாளைக்கு சொல்லத்தான் போறேன். உடுங்க ஜூட்டு..Comments

 1. வணக்கம் அண்ணே!

  உங்க கட்டுரைக எல்லாத்தையும் படிச்சிட்டு வரேன்.

  நீங்க சொன்ன கதைக்கு இரண்டாம் பாகம் இருக்குங்கோ!

  இன்னொரு வியாபாரி தான் தயாரிக்கிற ஊறுகாய எப்படி விக்கறதுன்னு யோசிச்சாரு. நாலு சின்ன பசங்கள கூப்பிட்டு, ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு கடையிலேயும் போய், இந்த பேருடைய ஊறுகா இருக்கா-ன்னு கேட்கச் சொன்னாரு.

  அதக் கேட்ட கடைக்காரங்க, ஓ! இப்ப இந்த ஊறுகாவுக்குத் தான் ரொம்ப டிமாண்ட் போல என்று நினைத்து வாங்கி அடுக்கிட்டாங்க!

  வல்லவனுக்கு வல்லவன் இவ்வையத்தில் உண்டுங்க!
  ReplyDelete
 2. ரஞ்சனி நாராயணன் அவர்களே!
  கதை நெல்லா இருக்கு. இப்படி ஒரு ஜிம்மிக் செய்து கடைகாரனை ஊறுகாயை வாங்க செய்துரலாம்.

  சரக்கு கரெக்டா இருந்தா தானே சனம் வாங்குவாய்ங்க.

  சரக்கை பக்காவா வச்சுக்கிட்டு கிம்மிக்ல இறங்கனும்.

  கேள்வி:
  ஆனாலும் அ நியாயம் நீங்களும் அண்ணேன்னுட்டா எப்டி? நாம ஜஸ்ட் 45 தேன்

  ReplyDelete
 3. "யூத்"தாமா...?

  சிபியோட ஜீன்ஸ், டி-ஷர்ட் திருடி போட்டுகிட்டா "யூத்"ஆ ...?

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்