பணம் பணம் பணம் : 19

அண்ணே வணக்கம்ணே !

தொழிற்களம் வலைதளம் மூலமா 19 ஆவது நாளா உங்களை சந்திக்கிறேன். நேத்திக்கு முடிவெடுக்கிறதை பத்தி சில விஷயம் சொல்லியிருந்தேன். முடிவெடுக்கிறதுங்கறது மரணம் போன்றது. இதனாலதான் நிறைய பெருந்தலைங்க முடிவெடுக்கிறதை சாமியாருங்க கிட்டேயும்  -சோசியருங்க கிட்டேயும் விட்டுர்ராய்ங்க. ஒவ்வொரு முடிவுக்கு பிறவும் நாம புதுசா பிறக்கறோம்.

முடிவெடுக்கிறதை தள்ளி போட்டுக்கிட்டு போறதையே சிலர் முடிவா வச்சிருப்பாய்ங்க ( நம்ம நரசிம்ம ராவ் மாதிரி) .அதெல்லாம் யாவாரத்துல வேலைக்காகாது. வியாபாரத்துல மினிட்டு மினிட்டு முடிவெடுக்க வேண்டியிருக்கும்.

முடிவெடுக்கிறதுல ரெண்டு விதம் இருக்கு. ஒன்னு காரியத்தை ஆரம்பிக்கிறதுக்கு  மிந்தியே ஆற அமர எடுக்கிற முடிவு.

 உதாரணமா:

வீடு காலி பண்ணித்தர்ர கம்பெனி ஆரம்பிக்கப்போறோம்னு வைங்க.( லோக்கல் ரவுடிகளை வச்சு இல்லிங்கண்ணா.. முழு சம்மதத்தோட காலி பண்ணிக்கிட்டு போறவுகளுக்கு ஜாமான் செட்டை பாக் பண்ணி - புது விலாசத்துல சேர்த்து செட் பண்ணிட்டு வர்ர காண்ட்ராக்டு.)

இந்த பிசினஸ் மாடல் வெளி நாட்ல அதுவும் மேலை நாடுகள்ள  சகஜமா இருக்கும். இது நம்ம நாட்டுக்கு - நம்ம மானிலத்துக்கு ஒத்துவருமான்னு பார்க்கனும்.

கொய்யால . ஒரு காலத்துல கண்ணாலத்துக்கு பையன்,பொண்ணை பார்க்கனும்னா ஒன்னு விட்ட சித்தப்புவோ , தனிக்கட்டையா கிடக்கிற மாமாவோ பார்த்துருவாய்ங்க.இன்னைக்கு .மேட் ரி மோனி வந்துருச்சு.

ஒரு காலத்துல கல்யாணம்னா சொந்த காரன் எல்லாம் வேலை வெட்டிய விட்டுட்டு ஒரு மாசம் முன்னாடியே அலைய ஆரம்பிச்சுருவான். இன்னைக்கு பொண்ணு வீட்டுக்காரனே ரிசப்ஷனுக்கு அரைமணி   நேரம் மிந்தி தான் மண்டபத்துக்கே வரான்.

இப்படி சமுதாயத்துல ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை எல்லாம் வச்சு கணக்கு போடனும்.ஆக வீட்டை காலி பண்ணி கொடுக்கிற பிசினஸ் மாடல் ஓகே. இது கொள்கை முடிவு. (கொள்கை முடிவுன்னா எந்த கணமும் கை விட்டுர்ர முடிவுன்னு அரசியல் வாதிங்க பல்ர்  நினைக்கிறாய்ங்க.இது வேற விஷயம்)

இந்த ஆஃபரை எந்த பொருளாதார பிரிவை சேர்ந்தவுக ஏத்துப்பாய்ங்கன்னு ரோசிக்கனும். பரம ஏழைன்னா புருசன் பொஞ்சாதியே தலைச்சுமையா எடுத்துட்டு போயிருவாய்ங்க. ஏழைன்னா ஆட்டோவே போதும். லோயர் மிடில் க்ளாஸ் ஃபேமிலின்னா கொஞ்சம் ரோசிப்பான். படக்குன்னு  ஊஹூம்..வேலைக்காரிக்கு அம்பதோ நூறோ எக்ஸ்ட் ரா தரேன்னு வரச்சொல்லு,ஆஃபீஸ் அட்டெண்டரை வரச்சொல்றேன். ஒரு பையன் நம்ம பொண்ணு பின்னாடியே அலையறானே அவனை வரச்சொல்லு மேனேஜ் பண்ணிரலாம்பான். இது வேலைக்காகாது.

மிடில் க்ளாஸ் ஃபேமிலின்னா ரோசிப்பான். ரெம்பவே ரோசிப்பான். அவனை இவனை கெஞ்சி கூத்தாடி லீவ் போட சொல்லி மன்னாடறதை விட இது ஏதோ சுலபமான வழியா இருக்கேன்னு ஃபோன் போட்டு பார்ப்பான். நம்ம சார்ஜ் கைய கடிக்காம இருந்தா நேர்ல வருவான். அப்பர் மிடில் க்ளாஸ்,பணக்காரன்லாம் கேள்வியே கேட்கமாட்டான். எப்ப வருவிங்கன்னு கேப்பான்.

இது வரைக்கும் ஓகே.ஒரு வீட்டை காலி பண்ணனும்னா -ஜாமான் செட்டை பேக் பண்ணனும்னா என்னெல்லாம் தேவை. என்னா மாதிரி ஆட்கள் தேவை? எலக்ட் ரீஷியன் தேவையா? ( ஏசி,ஃபேன் இத்யாதி கழட்டனுமே). ப்ளம்பர் தேவையா? (மோட்டார் கீட்டார் கழட்டனுமே)

எலக்ட்ரீஷியன்,ப்ளம்பரை எல்லாம் சம்பளம் கொடுத்து வச்சா கட்டுப்படியாகுமா? வெறுமனே டீலிங் வச்சுக்கலாமா?

வீடுன்னா பொம்பளைங்க இருப்பாய்ங்க.கிச்சன்,பாத்ரூம்லாம் கூட காலி பண்ண வேண்டி
இருக்கும்.வெறுமனே இளந்தாரிங்களை மட்டும் வச்சு எதுனா வில்லங்கமாயிருமா? ஒரு பொம்பள ஆளை போடு.

 ஜாமான் செட்டுகளை  ஏரியா விட்டு ஏரியா மாத்தனும்னா  வாகனம் வேணம்.அதை சொந்தமா வாங்கி வச்சா கட்டுமா? அல்லது டீலிங் வச்சுக்கிட்டா போதுமா?

விளம்பரம் எந்த அளவுல செய்யலாம்.ஆஃபீஸ் சின்னதா போதுமா.. வீட்டுக்காரனை அட்வான்ஸ் பண்ண சொல்லலாமா? இப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் முடிவெடுத்தே ஆகனும். இதெல்லாம் கோதாவுல இறங்கறதுக்கு மிந்தி எடுக்க வேண்டிய முடிவுகள்.

இப்பம் தொழிலை ஆரம்பிச்சாச்சு. ஆஃபீஸ்ல உட்கார்ந்திருக்கம்.ஃபோன் வருது. நம்மாளு நேர்ல போறான். புருசன் பொஞ்சாதி மத்தியில சண்டை போல. பொஞ்சாதி நான் போறேங்கறான்.புருசன் காரன் வேணா சுகந்தி! சொன்னா கேளு..சொன்னா கேளுன்னு மன்னாடிக்கிட்டிருக்கான்.

நம்மாளு விவரத்தை ஃபோன்ல சொல்றான். நீங்க முடிவெடுத்தே ஆகனும்.ஸ்பாட்ல எடுக்கனும். ஒன்னு "டேய் பார்ட்டி காலி பண்ண சொன்னா காலி பண்ணிர வேண்டியதுதானடா..புருசன் வேணான்னா நமக்கென்ன"ன்னு சொல்லலாம்.

அல்லது "  சரிடா ..நானே நேர்ல வந்து தொலையறேன். ரூட்டை சொல்லு"ன்னுட்டு நேர்ல போயி அந்த வீட்டம்மா கிட்டே  " அம்மா! கூட பிறந்தவனாட்டமா சொல்றேன். அவசரப்படாதிங்க.. நீங்க கிளம்பறதுன்னு முடிவு பண்ணிட்டிங்க.அதை மாத்திக்க சொல்லலை. ஒரு 3 நாள் தள்ளிப்போடுங்க. நாலாவது நாளும் காலி பண்ணியே தீரனும்னா  ஒரு ஃபோனை  .. போடுங்க"ன்னுட்டு விசிட்டிங் கார்டை கொடுத்துட்டு வந்துரனும்.

இது ஹ்யூமன் டச். இதனால ஒரு கிராக்கி தட்டிப்போனாலும் புருசன் காரன் சர்க்கிள்ளயோ -அந்த பொஞ்சாதி சர்க்கிள்ளயோ எவன் வீடு காலி பண்ணனும்னாலும் நமக்குத்தேன் ஃபோன் வரும். 

மேட்டர் சின்னது பெருசுங்கறதெல்லாம் இல்லை.முடிவெடுக்கிறதுலதான் இருக்கு சூட்சுமமே..சின்ன விஷயத்தை இன்னைக்கு பார்த்தோம். நாளைக்கு பெரிய விஷயமா சொல்றேன்..

உடுங்க  ஜூட்டு.

எச்சரிக்கை:
இந்த பதிவுல சொல்லியிருக்கிற யாவாரத்தை ஆருனா ஆரம்பிச்சே தீருவேன்னா நம்மை கலந்து பேசுங்க.பக்காவா கூர் தீட்டிரலாம். ஆலோசனை கட்டணம்லாம் இப்போதைக்கு வசூலிக்கிற மாதிரி இல்லிங்ணா.. ஒரு 6 மாசம் போவட்டும்..

Comments

 1. அண்ணே வணக்கம்னே...

  தனியா ரூம் போட்டு யோசிப்பீங்களோ....

  ReplyDelete
 2. இல்லிங்னா .. நம்ம சக பதிவர்கள் ,வாசகர்கள் எதை பத்தி தெரிஞ்சுக்கனும்னு நினைக்கிறாய்ங்களோ அதெல்லாம் டெலிபதி மூலமா நமக்கு ரீச் ஆகும்.

  அப்படியே ரவுண்டு கட்டி அடிச்சு விளையாடறதுதேன்..

  ReplyDelete
 3. வெறுமனே டிப்ஸ் கொடுத்துவிட்டு நின்று விடாமல், உதவவும் முன் வரும் உங்களை மிகவும் பாராட்டுகிறேன்.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. ரஞ்சனி நாராயணன் அவர்களே !
  சொந்த சரக்கை சேர்த்து நம்ம டிப்பை பட்டை தீட்டினா இன்னம் பெட்டர் ரிசல்ட் இருக்கும்.

  அது முடியாதவுகளுக்கு உதவறதுல வெற்றி சதவீதம் அதிகமாகுங்கற முன் எச்சரிக்கை தான் காரணம்.

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்