பணம் பணம் பணம் : 21


அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

தொழிற்களம் வலைதளம் மூலமா 21 ஆவது நாளா உங்களை சந்திக்கிறேன். பணவேட்டைக்கு உங்களை தயார் படுத்த என்னெல்லாம் தேவையோ ஏ டு ஜெட் இந்த தொடர்ல வந்தே உடும்.

பதிவுக்கு போயிரலாமா?

அந்தந்த தினம்  வவுத்த களுவறதுக்கு ஜம்பாரிக்கறது அடிமைத்தனம்.ஆமா பசியும் வறுமையும் தான் நம்ம பாஸு. ஒரு பாஸுக்காக /அந்த ஆசாமிக்கு பயந்துக்கினு  வேலை செய்றவனுக்கு மூளை வேலை செய்யாது.

சிலர் பழக்க தோஷத்துல எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு வேலைக்கோ /தொழிலுக்கோ போய்க்கினே இருப்பாய்ங்க.

ஒரு ஞா கிழமைக்காகவே வேண்டா வெறுப்பா அந்த தொழிலை/உத்யோகத்தை செய்துக்கிட்டே இருப்பாய்ங்க. அதுல சின்னதா ஒரு மாற்றம் வந்தாலும் தாங்க முடியாது. அப்படியே மன நோயாளி மாதிரி ஆயிருவான். அதுக்கே சரக்கடிக்க ஆரம்பிச்சுர்ரது.பொஞ்சாதிய,புள்ளைகளை போட்டு மொத்தறதுன்னு தயாராயிருவான்.

சிலர் தெரியாத்தனமா இளமை வேகத்துல  எதையோ ஒன்னை சின்னதா அச்சீவ் பண்ணி
யிருப்பான்.அதோட பார்ட்டி " நான் வெற்றி பெற்றவன் -இமயம் தொட்டு விட்டவன்"னுட்டு ஹம் பண்ணிக்கிட்டு ரொட்டீனுக்கு வந்திருவான்.

சிலர் .. எதுவோ  ஒரு " லீட்" கிடைக்க அந்த சின்ன வட்டத்துல அடைபட்டுருவான். அதுக்கு வெளியவும் தொழில் இருக்கு -அதை தாண்டியும் வளர்ச்சி இருக்குன்னு ரோசிக்க கூட விரும்ப மாட்டான்.

அதுக்கே இவிகளுக்கு பெரிய தொழிலதிபர் ஆயிட்டாப்ல ஃபீலிங். லோக்கல்ல எதுனா ஒரு கோவில் -அந்த கோவில்ல கொஞ்சம் வா சாலகரான அய்யரு இருந்தா போதும்.இவர் புரவலராயிருவாரு. அந்த உபயம் -இந்த அபிசேகம்னு வருசம் முழுக்க ஷெட்யூல் தயாராயிரும்.

சிலர் சிங்கம் மாதிரி ஒரு வேட்டை கிடைச்சு அதுல மஞ்ச குளிச்சுட்டா எட்டு இடமும் குளிர்ந்து போய் "இனப்பெருக்கத்துக்கு" போயிருவான்.  கும்பி காஞ்ச பிறவு அடுத்து என்னடான்னு ரோசிக்க ஆரம்பிப்பான்.

சில தொழில்கள் சீசனல் தொழில்களா இருக்கும். உ.ம் ஸ்வெட்டர் விக்கிறது இவிக ஒரு வருசம் முழுக்க கடந்த வருச யாவாரத்தை பத்தி பேசிக்கிட்டே அடுத்த வருச வியாவாரத்தை கனவு கண்டுக்கிட்டே காலத்தை கழிச்சுருவான்.

இன்னம் சிலர் இருக்காய்ங்க. தப்பி தவறி ஒரு சின்ன ப்ராஜக்டு சக்ஸஸ் ஆயிட்டா போதும். ஒடனே "இறம் பொறம்" இல்லாம் ஊர்ல /உலகத்துல உள்ள எல்லா தொழில்லயும் மூக்கை நுழைச்சு -கண்டவனை சேர்த்துக்கிட்டு -சகட்டு மேனிக்கு கடன் வாங்கி ஓடி ஓடி "தொழில்" செய்றாப்ல இருக்கும். இந்த ஓட்டத்துலயே மச்சினியை கை வச்சுர்ரது. சினிமா காரியை வச்சுக்கறது.பலி பூஜைன்னு போயிருப்பாய்ங்க..

இவிகளை சமூகம் கொஞ்ச நாளைக்கு நம்பும். (பரம்பரை பணக்காரனுவ - நம்ம மாதிரி ஓரளவு விசயம் தெரிஞ்சவுக இவிக "சந்தேக பட்டியல்ல" வச்சு தொடர்ந்து கண்காணிச்சிக்கிட்டிருப்போம்.

ஒரு கட்டத்துல பயாலஜி ப்ராக்டிக்கல் க்ளாஸ்ல மனையில மல்லாத்தி போட்டு  நாலு காலுக்கும் "செருப்பாணி" அடிச்ச கணக்கா மாட்டிக்குவான்.

பத்து வட்டி வரைக்கும் போயிருப்பான்.அதுலருந்து மீள "புதையல் , தண்ணி பாம்பு,கருப்பு பூனை,ரைஸ் புல்லிங் , கோடி ரூ மதிப்புள்ள ஃபாரின் கரன்சி, மந்திர வாதி " இப்படி சிக்குன்னு சிக்கிப்பான்.

பொருளாதார அடிப்படையில சமூகத்தை பல வர்கமா பிரிக்கலாம்னு சொல்லியிருந்தது ஞா இருக்கலாம். இதுல ஒவ்வொரு பிரிவும் அந்த பிரிவுக்குள்ளயே கொடுக்கல் வாங்கல்  நடத்திக்கிட்டு கிடக்கிற வரை பிரச்சினை இருக்காது.

அட ஒரு வர்கத்துல (உ.ம் பரம ஏழை) ஆரம்பிச்சு கு.ப முறையான முறைகளோட மெல்ல மெல்ல வளர்ந்து தனக்கு மேல் உள்ள வர்கங்களோட தொடர்பு ஏற்பட்டு அருகாய் ( அருகம்புல்லுங்கோ) படர்ந்தா பரவால்லை. இவனும் அந்த ஊரு/ நாட்டோட எக்கனாமிக்கல் செட் அப்ல ஒரு அங்கமாயிருவான்.

ஒரு முறையே இல்லாம காட்டடி அடிச்சு (சட்ட விரோத தொழில் முயற்சிகளை இங்கே  சொல்லலை.அது வேற கேட்டகிரி )  மேலுக்கு வர்ரவன் தான் ரெம்ப டேஞ்சர். இந்த மாதிரி பார்ட்டிங்க மார்க்கெட்ல வந்து நாறடிச்சுட்டு போயிர்ரதால அந்த "சர்க்கிள்ள" கொடுக்கல் வாங்கல் எல்லாம் கிரிட்டிக்கல் ஆயிக்கிட்டே போகும். (பத்து வட்டி கலாசாரத்துக்கு இந்த மாதிரி ஆசாமிகளும் ஒரு காரணம்)

நான் எல்லாம் எட்டு மணி நேரத்துல வேலைய விட்ட சந்தர்ப்பம் இருக்கு . உ.ம் திருப்பதி ரேனிகுண்டா ரோட்ல உள்ள ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல கேட்டரிங் சூப்பர் வைசர் வேலை.

ஆன முதலை எல்லாம் போட்டு 6 மாசத்துல ப்ராஜக்டை ஊத்தி மூடின சரித்திரமெல்லாம்  இருக்கு உம் : லேட்டஸ்டா சொல்லனும்னா  நம்ம பதிவுகளை ஆங்கிலத்துல மொழி பெயர்க்க வச்சு கூகுல் ஆட்சென்ஸ் வாங்கறது.

 ஏன்னா "ஒதகாத வேலைன்னு தெரிஞ்சுக்கக்க எட்டுமணி நேரம் போதும். ஒரு ப்ராஜக்டு உருப்படாதுன்னு தெரிஞ்சுக்க ஆறு மாசம் ரெம்ப சாஸ்தி.

ஆனால்  நம்ம பேட்சுலயே  ஒவ்வொருத்தன்  காலேஜ் முடிஞ்சு வெளிய வந்த காலத்துலருந்து ஒன்னையே கட்டி மல்லாடிக்கிட்டிருப்பான்.

ஒன்றே செய் நன்றே செய்ங்கறதெல்லாம் இந்த சந்தியா காலத்துக்கு ஒத்து வராது. எதை செய்தாலும் கு.பட்சம் 3 மாசத்துக்கொருதரமாச்சும் நாம என்ன செய்யறோம்? எங்க இருக்கோம்? ஐ மீன் பொருளாதார பாதுகாப்பு வளையத்துக்குள்ளயாச்சும் வந்தோமா இல்லியா? பத்து நாள் டைஃபாய்ட்ல படுத்து தொலைச்சா என்னாகும்?  திடீர்னு பொஞ்சாதி மஹிளா ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ன் பண்ணா எத்தீனி பெரிய மன்சன் ஸ்டேஷனுக்கு போன் போடுவான்னு "ஆய்வு" நடத்திக்கிட்டே இருக்கனும்.

பலரை கவனிக்கிறேன். என்னடா சாதிச்சான்னு பார்த்தா பிருஷ்டம்,தொந்தி  பெருத்திருக்கும், மண்டையில  முடி கொட்டிப்போயிருக்கும். மிஞ்சி போனா கம்பெனி காரனுக்கு பேமெண்ட் கொடுக்காம கம்பெனி மாறிக்கிட்டே கம்பெனிகளோட பணத்துல வீட்டு  மனை வாங்கியிருப்பான்.அது கூட ஏரி புறம்போக்கா இருக்கும்.

அல்லது ஃபைனான்ஸ் கம்பெனியில பணம் போட்டுருவான். அல்லது பத்து பதினைஞ்சு வருசத்து சேமிப்பை தனக்கு ஆர்வம்,பிடிப்பு,கமாண்ட் எள்ளளவும் இல்லாத ஒரு தொழில்ல போட்டு பல்பு வாங்கி பேக் டு தி பெவிலியன்.

விளைவு   புதுசா நாலு வியாதி, பொஞ்சாதி /மகள் ஓடிப்போயிருப்பாள்.பையன் திருட்டு கேஸ்ல (சந்தேக கேஸுன்னு கூட வைங்க) மாட்டியிருப்பான். 

இத்தனை விதமான மனிதர்களை பத்தி சொன்னது ஏன்னா பணம்ங்கறது ஆக்சிஜன் மாதிரி.அதனோட சப்ளையில ஒரு கணம் கூட தடை கூடாது.பணம்ங்கறது ரத்தம் மாதிரி .அதனோட ஓட்டத்துல குண்டூசி தலையத்தனை " உறைவு" கூட இருக்கப்படாது.

பணம் பண்றது பணம் பண்றதுக்காகத்தேன். பணம் பண்றது ஒரு விளையாட்டு. வேட்டையாடின பணம் பெட்டிக்கு வந்ததுமே  வில்லையும் அம்பையும்  பிண மூட்டை மாதிரி செட்டாப் செய்து ( அர்ஜுனன் கணக்கா0 ஏதோ ஒரு  மரத்து மேல போட்டு  வச்சுட்டு  திங்க போயிர்ரது -இன்னம் திங்க எதுவும் மிச்சமில்லைங்கற சந்தர்ப்பத்துல அடுத்த வேட்டைக்கு போறவன் முட்டாள். அதுக்குள்ள அவனோட வில்லை செதிலடிச்சிருக்கும்.அவன் அம்பெல்லாம் மழுங்கி போயிருக்கும்.

பணம் பண்றது  தினசரி 24 மணி நேரம் ,வாரத்துல 7 நாள் ,மாசத்துல 30 நாள், வருசத்துல 365 நாள் எந்தவிதை தடையுமில்லாம தொடர்ந்து நடக்கவேண்டிய ப்ராசஸ். நீங்க பண வேட்டையில ஃபிசிக்கலா இருக்கிங்களா? சைக்கலாஜிக்கலா இருக்கிங்களா? அடுத்த  வேட்டைக்கு ரெஃப்ரெஷ் ஆறிங்களா? இதெல்லாம் வேற விஷயம் .ஆனால் வேட்டை செயலோ எண்ணமோ இல்லாம கனவு கூட காணப்படாது.ஆமாம் சொல்லிப்புட்டன்.

நாளையிலருந்து தினசரி குறைஞ்சது 10 விசயத்தையாச்சும் சொல்லி முடிச்சுரலாம்னு இருக்கேன்.உடுங்க ஜூட்டு.

Comments

 1. மனதார சொல்கிறோம் ,,,

  தலைவா நீ க்ரேட்,,,

  ReplyDelete
 2. அண்ணாத்தை!
  இதுல உள் குத்து எதுவும் இல்லியே..

  ReplyDelete
 3. அறிஞர் அண்ணா " தலைப்பு இல்லை" அப்டிங்குற தலைப்பிலே ஒரு சொற்பொழிவு பண்ணராம், நீங்க கூட அப்டிதான் " பணம் பணம்", நல்லா இருக்கு, திறமை தான் ... நன்றி அண்ணா

  ReplyDelete
 4. செழியன் அவர்களே !
  வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி. நா(ம்)ன் சம்பாதிக்கனும்னா அல்லாரும் சம்பாரிச்சுக்கிட்டிருக்கனும்.அப்பத்தேன் நான் சம்பாதிக்க முடியும்.

  இந்த சின்ன சூட்சுமத்தை புரிஞ்சுக்காம சனம் நம்ம பொருளாதார அமைப்பையே சிதைச்சுட்டாய்ங்க.

  அந்த ஆதங்கத்துலதான் இந்த தொடர்பதிவே..

  ஆமாம் அண்ணா மேல உங்களுக்கு என்ன கோபம்..

  ஆகாயமே அண்ணாந்து பார்க்க வேண்டிய பிரம்மாண்டம் அண்ணா.

  நான் எல்லாம் எதுல கணக்கு?

  ReplyDelete
 5. அன்புள்ள முருகேசன் அவர்களுக்கு,
  உங்கள் வலைதளத்தின் முகவரி வேண்டுமே, கொடுக்கிறீர்களா?

  ReplyDelete
 6. வணக்கம் ரஞ்சனி நாராயணன் அவர்களே !
  தொழிற்களம் வலைதளத்திலேயே நம்ம வலைப்பூவை விளம்பரிக்கிறாய்ங்களே..

  இருந்தாலும் பெரியவுக கேட்டு சொல்லலின்னா தப்பாயிரும்

  www.kavithai07.blogspot.com
  www.anubavajothidam.com

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்