சாதனை மனிதர்கள் (4)
1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. தற்காப்பு ஏதுமின்றி அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, ஜெனரல் டயர் பிறப்பித்த உத்தரவின் பேரில் சுட்டுக்கொன்றனர். 90 துப்பாக்கி வீரர்கள் கொண்ட படையும், ஒரு பீரங்கி வண்டியும் இதில் பயன்படுத்தப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக உண்மையான எண்ணிக்கை வெளியே சொல்லப்படாவிட்டாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் எந்த முன்னறிவிப்புமின்றிச் சுட்டுக் கொல்லப்படனர் என்பது நிதரிசனம்.
இப்படுகொலையைக் கண்டு மனம் கொதித்த இளைஞன், அமிர்த சரஸில் நீராடி, ஹரிமந்திர் சாகிப்பில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயரைக் கொல்லுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார்.
அப்பொழுது அந்த இளைஞனுக்கு வயது 18 . அவன் குறிக்கோளோ மிகப் பெரியது. இந்தியாவில் மிகப் பெரிய அசம்பாவிதத்தை நடத்திய ஜெனரல் டயரோ லண்டனுக்கு சென்றுவிட்டார்.
அந்த இளைஞன் லண்டனுக்கு செல்ல வேண்டும். அவரைக் கண்காணிக்க பல பிரிட்டிஷ் சி.ஐ.டி கள் நியமிக்கப் பட்டிருந்தனர். அப்படியும் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934ல் இங்கிலாந்துக்குள் நுழைந்தார்.
எண் 9, அட்லர் தெரு, கமர்ஷியல் ரோடு, அவரது முகவரியாயிற்று. அங்கே ஒரு காரும் துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மைக்கேல் டயரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அவருக்கு டயரைக் கொல்ல பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் அமைதியாக இருந்தார். ஏனெனில் தமக்கு எளிமையாக இருக்கும் என்பதைக் காட்டிலும் அச்செயல் உலக மக்களுக்கு ஒரு செய்தியாக அமைய வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.
1940 மார்ச் 13 – ஏறக்குறைய இருபது ஆண்டுகள்சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவராக வந்திருந்தார் டயர்.அந்தக் கூட்டத்தில் கையில் 0.45 ஸ்மித் வெல்ஸன் கைத்துப்பாக்கியுடன் இளைஞர்  புத்தகத்துக்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட பக்கங்களுக்குள் மறைத்தபடி இருந்தார்.
அப்பொழுது டயர் அவர்கள் “பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காகத் தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் வாய்ப்பு கிடைத்தால் அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் “ தன் பேச்சில் குறிப்பிட்டார். இத்தருணத்தில் கூட்டத்தில் இருந்த உத்தம் சிங் எழுந்தார். “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை சர். மைக்கேல் டயர் அவர்களேஎனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்து அவரை தாக்கினார். ஜெனரல் டயர் அந்த இடத்திலே மரணமடைந்தார்.
            சிரித்த முகத்துடன் கைதானார் உதம் சிங். காவல் நிலைய விசாரணையில் உதம் சிங் தமது பெயராக ராம் முகமது சிங் ஆஸாத் என கூறினார். குறுகிய மதவாதம் நாட்டை உலுக்கியபடி இருந்த காலகட்டத்தில் அவரது இந்த பெயரே குறுகிய எல்லைகளைக் கடந்த பாரதிய தேசியம் எழும்புவதைக் கட்டியம் கூறுவதாக அமைந்தது.
            எடுத்தக் காரியத்திற்காக பல காலம் காத்திருந்தும், பல தடைகளை மீறியும்  தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றிய ராம் முகமது சிங் ஆஸாத் என்னைப் பொறுத்தவரை ஒரு மிகப் பெரிய சாதனை மனிதர் தான்.
      ஒரு செயல் நமக்கு சரிப்பட்டு வரவில்லை என்றால் உடனே குறிக்கோளை மாற்றிக் கொள்ளும் மனம் தான் இன்று அதிகம் காணப்படுகிறது. அப்படியிருக்க ராம் முகமது சிங் ஆஸாத் அவர்கள்  நாம் போற்றபட வேண்டிய ஒரு சாதனையாளர்.

Comments

  1. சிந்திய இரத்தம் வீணாய் போய் விட கூடாது,,,

    ஒன்றுபட்ட இந்தியா ஏற்படட்டும்..

    நல்ல பகிர்வு தமிழ்ராஜா,,

    ReplyDelete
  2. நல்ல பகிர்வுக்கு நன்றி.....

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்