பணம் பணம் பணம்: 7


அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா!!

தொழிற்களம் மூலமா 7 ஆவது நாளா உங்களை சந்திக்கிறேன். இந்த தொடர்பதிவு ஒட்டு மொத்தமா ஒரு ஆண் பார்வையில ஆண்களுக்காவ எழுதப்படறதா இருக்கே தவிர பெண்களுக்கு ஒரு வணக்கம் தவிர ஒன்னுமே இல்லியேன்னு ஒன்னு ரெண்டு சாட் மெசேஜ் ,ஒரு ஃபோன் கூட வந்தது. ப்ளீஸ் வெய்ட் ! மகளிர் ஸ்பெசலா ஒரு அத்யாயமே வரப்போகுது.

எதுவோ கிடைக்காதவங்க -அதை மறக்க - சம்பாரிக்க இறங்கினா பணம் கிடைச்சாலும் -அது கிடைக்காது -பணம் கிடைச்சாலும் -அதனால பொருளாதாரத்துக்கு ஆப்புன்னு சொன்னேன்.

அந்த எதுவோ கிடைச்சவுக அதுவே உலகம்னு இல்லாட்டாலும் - நமக்கென்ன குறைங்கற ஃபீல்லயே இருந்துர்ராய்ங்க. அதை தாண்டி வர்ரது எப்படின்னு சில பத்தியில சொல்லிட்டு சப்ஜெக்டுக்கு போயிரலாம்.

புதுசா இந்த பதிவை படிக்க வந்தவுக எதுவோன்னா அது எதுன்னு கேப்பிக சொல்றேன். வேறென்ன கில்மாத்தேன். அது கிடைச்சவுக மனசுல அவிகளையும் அறியாம ஒரு நிறைவு ஏற்பட்டுரும்.

அவிகளுக்கு சொல்லவேண்டியது சிலதிருக்கு. கில்மாவின் நோக்கம் கலத்தல் - படைத்தல். உருவாக்குதல். தன் மரணத்தை வெல்லுதல் (பாப்பா ) -இணைந்திருத்தல் -தனிமை கொல்லுதல் - வாழ்வில் வெளிச்சம் பெறுதல் -உறவுகளுடன் தொடர்பிலிருத்தல் இப்படி பலதும் இருக்கு.

என்னதான் இயற்கை கொடுத்த வரம்னாலும் கில்மாவில் நிகழும் கலத்தல் -படைத்தல் -உருவாக்குதல் எட்செட்ராவெல்லாம்- சிறு அளவில் தான் நடக்கிறது. பணம் இவற்றையே மெகா அளவில் சாத்தியமாக்குகிறது.

இதுக்கெல்லாம் உதாரணம் கொடுத்தாதான் உங்களுக்கு புரியும்னு உங்களை குறைத்து மதிப்பிட விரும்பலை.அதனால தவளைப் பாய்ச்சல் நடையில தாண்டிர்ரன்.

மைக்ரோ அளவில் இவற்றை உணர்ந்து -அனுபவித்து எந்த வித ஃபோபியாக்களும் இல்லாம இருக்கிற நீங்க பைசா பண்ண களமிறங்கினா ஒரு கை பார்க்கலாம். பொருளாதார அமைப்பே சீர்ப்படும். அதனாலதான் உங்களை இந்த பதிவுக்கும் -பணம் பண்ணவும் வருக வருகன்னு வரவேற்கிறேன்.


இந்த தொடரின் ஆரம்பத்துலயே மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் அதன் பின்னுள்ள் விருப்பம் ஒன்றே .அது கொல்வது அல்லது கொல்லப்படுவதேன்னு சொல்லியிருக்கேன்.இது மனவியல் கூறும் உண்மை .

மனவியல் மேலும் கூறுவது என்னவென்றால் கொல்லவும்,கொல்லப்படவும் தைரியம் போதாதவன் அதற்கு ஆல்ட்டர்னேடிவ் வழிகளை தேடுகிறான். அதுல தலையாயது செக்ஸ் இது சமுதாயத்துல ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருப்பதால் செக்ஸுக்கு ஆல்ட்டர்னேட்டிவா பணம்னு ஏற்கெனவே பார்த்தோம்.

ஒரு சில மிருகங்கள் பறவைகள் உணவு கிடைக்காத காலத்திலோ -முதுமை காலத்துலயோ உணவெடுக்காம தற்கொலை செய்துக்குது . இதுலயாச்சும் ஒரு லாஜிக் இருக்கு.

ஆறறிவு படைத்த மனிதன் போதுமான உணவு இருக்கும் காலத்துலயும் ஏன் ஜஸ்ட் கொல்வதும் கொல்லப்படுவதுமாயிருக்கிறான்.இங்குதான் முடிவான தத்துவம் வருகிறது.

நாமனைவரும் இல்லாதிருந்த காலமே கிடையாது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு கல்பத்தில்,ஏதோ ஒரு யுகத்தில் ஏதோ ஒரு வடிவில் சேர்ந்திருந்தோம். அப்போது அந்த இணைப்பில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தோம். பின் பிரிந்தோம்.

கால தர்மம் மாற மாற நம்மில் அகந்தை கிளர்ந்தது தனிமைப்பட்டோம். கோழிப்பண்ணையில ஒரு கோழிக்கு நோய் வந்தா பண்ணையே காலியாயிருது.ஏன்னா அங்கன உள்ள எந்த கோழியும் தன்னை ஒரு தனிப்பட்ட படைப்பா கருதுவதே இல்லை. ஒடைச்சு சொன்னா செல்ஃப் -ஈகோங்கற பேச்சுக்கே இடமில்லை.

ஒரு காலத்துல தொத்து நோய் வந்தா சனம் லட்ச ,லட்சமா சாவாய்ங்க. இன்னைக்கு? ஏன்னா ஒவ்வொரு மனிதனும் தன்னை தனிப்பட்டவனாக உணர்கிறான். நம்புகிறான். தன் கான்ஷியஸை நம்ப வைக்கிறான்.

எப்படியோ பிரிஞ்சோம் மீண்டும் இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடல் தடையாக இருப்பதாக பிரமிக்கிறோம்.

மாமிசம் உண்பவனை பாருங்கள். அவன் என்ன செய்கிறான். அவன் கொன்ற கோழியையோ,ஆட்டையோ தன்னுள் ஐக்கியம் செய்துகொள்கிறான். ஆண் பெண்ணில் ஐக்கியமாகிறான். பெண் ஆணை தன்னில் ஐக்கியம் செய்து கொள்கிறாள். இணைப்புக்கான கோரிக்கை அவர்களை ஊக்குவிக்கிறது. ஆனால் இணைப்புக்கு வழி உடல்களை இணைப்பதோ ? உடல்களை உதிர்ப்பதோ அல்ல.

நாம் பிரிந்திருக்கிறோம் என்பது நம் பிரமை. ஏற்கெனவே இணைந்தே தானிருக்கிறோம். நாமனைவரும் இப்படைப்பில் ஒரு அங்கமாகத்தானிருக்கிறோம். ஆனால் நம்மை இந்த படைப்பிலிருந்து பிரித்துக் காட்டுவது நமது அகந்தை ஒன்றே. பிறந்த குழந்தைக்கு தன்னை தனது பொம்மைகளிலிருந்து கூட பிரித்துக்காண முடிவதில்லை. ஆனால் நாம் ?

பெற்ற தாயை, தந்தையை, கூடப்பிறந்த சகோதர சகோதிரிகளையும் நம்மிலிருந்து பிரித்து காண்கிறோம். முஸ்லீம் இந்துவை, இந்து முஸ்லீமை பிரித்துக் காண்கிறான். இதனால் மனிதனில் பாதுகாப்பின்மை வளர்கிறது.

இதனால் மனிதன் இணைய துடிக்கிறான். மாமிசம் உண்ணும்பழக்கம், செக்ஸ் மீதான வேட்கை அதிகரிக்க மனிதருள் பெருகி வரும் பிரிவினையே முதல் காரணம். இதனால் தான் மனிதர்கள் சாகத்துடிக்கிறார்கள்.கொலை தற்கொலைக்கெல்லாம் ஸ்தூலமான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் சூட்சுமமாக பார்க்கும்போது அவனது நோக்கம் தன் உடலை உதிர்ப்பதும் இந்த அண்டத்துடன் இரண்டற கலப்பதுமே.

மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்தில் குழுவாய் வாழ்ந்தான் (இணைந்து வாழ்ந்தான்) மேலும் உடல் உதிர்ந்து போக-அவன் இந்த அண்டத்துடன் இரண்டற கலக்க எந்த நேரமும் வாய்ப்பிருந்தது. எனவே அவன் தற்கொலைக்கோ ,கொலைக்கோ பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை. இப்போது காலம் மாறிப்போச்சு. மருத்துவ -விஞ்ஞான வளர்ச்சி காரணமாய் மரணம் ஏறக்குறைய அசாத்தியமாகி விட்டது. எனவே தான் தானாய் வராத சாவை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறான் மனிதன்.

செக்ஸில் ஆண் பெண்களுக்கு சுக்கில சுரோணிதங்கள் ஸ்கலிதமாகும்போது காலம் தெரியாத மரணமொத்த காலாதீத நிலை (ப்ளாக் அவுட்) ஏற்படுகிறது. எனவேதான் மனிதன் செக்ஸ் மீது அதிக ஆர்வம் காட்டுகிறான்.

100 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் கூடி வாழ்ந்தனர், இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். எனவே படைப்புடனான உறவு நெருக்கமாகவே இருந்தது. மனிதன் பாதுக்காப்புணர்வுடன் வாழ்ந்தான்.

இப்போது ? இயற்கையிலிருந்து ஓடினான் ஓடினான் ஓடிக்கொண்டே இருக்கிறான். இந்த விலகல் அவனில் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது எனவே அவன் சமுதாயத்துடன் இணைய துடிக்கிறான். ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள துடிக்கிறான். சாதி சங்கம்,கட்சிகள் பெருக இதுவே காரணம். ஓயாமல் செல் பேசுவதும் இதன் அடையாளம் தான்.

பின்னே இதற்கு என்னதான் தீர்வு ?

தான் படைப்பின் பிரிக்க முடியாத பாகம் என்ற சத்தியத்தை மனிதன் உணரவேண்டும். மனிதன் சமுதாயத்துடன்,இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும். அதற்கு தடையாக இருப்பது அவன் உடலல்ல அவனது அகந்தை.

ஆண் பெண் இயற்கையின் இரண்டு பாகங்கள். இவை பிரிந்து கிடக்கும் வரை மனிதன் அபத்திரமாகத்தான் உணர்வான்.

பெண் இயற்கையின் பிரதி.+ நிதி. பெண்ணே இயற்கைதான். சந்திரனின் வளர்ச்சி,தளர்ச்சிக்கும் - கோசாரத்தில் அந்த சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் ஏற்படும் தொடர்புக்கும் பெண்ணின் மாதாந்திர ருதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இப்படி இயற்கைக்கு ரெம்ப நெருக்கமா இருக்கிற பார்ட்டி பெண்.

இதனால் தான் வாழ்க்கை போராட்டத்தில் ஆக்டிவ் பார்ட்ல இருக்கிறதால - இயற்கையில் இருந்து விலகி விட்ட ஆணுக்கு பெண் மீது ஒரு வித மிரட்சி இருக்கிறது . ( மேல் சேவனிசம் ஒழிஞ்சு - பெண் 100% சுதந்திரம் பெற்றுவிட்டால் அவளும் ஆணுக்கு சமமாக மாறிவிட்டால் இந்த மிரட்சி காணாம போயிரும். அப்பம் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆண்களுக்கு சமமா பெண்களும் இடம் பெறுவாய்ங்க.

அதுவரை அவளை இயற்கையின் பிரதி நிதியாக கருதி அவளுடன் ஆண் உறவாட வேண்டும். வீடு இந்த சமுதாயத்தின் ஃபோன்சாய்க் வடிவம். குடும்பத்தில் உறவுகளை பேணாதவன் சமூக தொடர்பிலும் தோற்றுப்போகிறான்.

பிறகு பைசாவை விரட்ட ஆரம்பிச்சுர்ரான். நிறையபைசா சேர்ந்துட்டா உறவுகளை தான் பேண தேவையில்லை. எல்லாரும் வெல்லத்தை கண்ட ஈ கணக்கா வந்து ஒட்டிக்குவாய்ங்கன்னு ஒரு நினைப்பு.

வீட்டின் அச்சாணி பெண் . அவளை சுற்றித்தான் எல்லாமே நடக்கிறது. அவளை புரிந்து கொள்ள முடிந்தால் எதற்காகவோ -எதுவோ கிடைக்காத காரணத்தால் -அதையெல்லாம் பெற்று விட முடியும் என்ற பிரமையில் பண வேட்டையில் இறங்கி -வென்று தன் வெற்றி வெற்று என்று நொந்து போகவோ ,தோற்று வித விதமான ஃபோபியாக்களுடன்-வென்று இந்த பொருளாதார அமைப்பை சீரழிகக்வோ வேண்டிய அவசியமிருக்காது. வீடு -நாடு ரெண்டும் சேஃப்.

இந்த தியரி ,அவதானிப்பு, அலசல் எல்லாம் சரி. இதுல பணவேட்டைக்கான வியூகம் என்ன இருக்குன்னு கேப்பிக அதையெல்லாம் நாளைக்கு சொல்றேன் .Comments

 1. ஹய்யோ தாங்கல சாமி....எப்படியோ ஒரு வழியா குழம்பினாபோல நடிச்சாச்சு...சந்தோஷமா?

  ReplyDelete
 2. சகோ, ஏன் இந்த கொலவேறி...

  புரியுது ஆனா புரியல...

  பிளிஸ் போதும்பா, விட்டுடுபா...

  நாங்கெல்லாம் பாவம்ணே, நல்ல புரியறமாறி பதிவு போடுங்கண்ணே...

  ReplyDelete
 3. பாஸ்!
  இன்டர்லருந்து தேன் இங்கிலீசு மீடியம். எக்கனாமிக்ஸ் நான் படிச்சு எழுதினேன் 35 மார்க்கு. அப்பம் ஃபெயிலாட்டவனுக்கு அக்டோபர்ல டீச் பண்ணேன் அவனுக்கு 50 மார்க்கு.

  ஒரு வேளை வயசாயிட்டதால (45) அந்த கப்பாசிட்டி குறைஞ்சுருச்சோ என்னமோ .. இனி தம் கட்டி புரியறாப்லயே எழுதறேன் ஓகேவா..

  ReplyDelete
 4. வாங்க தமிழ் செல்வி !
  வரவுக்கும் -கருத்துரைக்கும் நன்றி. நீங்க பாராட்டித்தான் எழுதியிருக்கங்கன்னு புரியுது.

  ஆனாலும் .. சரி இப்போதைக்கு பாராட்டினதாவே இருக்கட்டும்.

  ReplyDelete
 5. தலை சுத்துடா சாமி !

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்