Ads Top

பணம் பணம் பணம் : 8


அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

தொழிற்களம் வலைதளம் மூலம் எட்டாவது நாளா சந்திக்கிறேன். இன்னைக்கு தொழிற்களம் குழுவையே குழப்பற ரேஞ்சுக்கு அடிச்சு விடற நாம ஓஷோவின் ..மன்னிக்கனும் ஓஷோ பற்றி ஆரோ நாலணா எழுத்தாளர் எழுதின புஸ்தவத்தை படிச்சு போட்டு செமர்த்தியா குழம்பி போயிட்டம்.

இன்னாடா மேட்டருன்னா அது நாள் வரை நாம மைண்ட்ல கான்க்ரீட்டா வச்சிருந்த எல்லாத்தையும் மறுக்கிறாரு ஓஷோ. அது வரை நாம பொன்னே போல் கருதி மூளையில பொதிஞ்சு வச்சிருந்ததை எல்லாம் குப்பைங்கறாரு மன்சன். நேர் எதிரிடை வியாக்யானங்கள் (டெட் ஆப்போசிட்) ஆளை விடுங்கடான்னு அரை மணில ரிட்டர்ன் பண்ணிட்டன்.

இதை இங்கன சொல்ல காரணம் இருக்கு. இன்னைக்கு ஓஷோ மேட்டர்ல நம்ம சர்க்கிள்ள அதிகார பூர்வ(?) சரிபார்த்தல் ஆசாமி (ஆத்தன்டிக்கேட்டட் ரெஃபரர்? ) நாமதேன்.

நேரடியா பணம் தானே இப்படியெல்லாம் சம்பாதிக்கலாம்னு ஆரம்பிச்சு அனுமார் வாலத்தைனை லிஸ்டை எடுத்து விட்டிருந்தா நீங்க என்னை சார்ந்தே இருக்கவேண்டிய நிலை வரும்.

வாசகன் எப்பவுமே நுகர்வோனாத்தான் இருக்கனும்னு நிறைய பேர் நினைக்கிறாய்ங்க. அதாவது தங்கள் உற்பத்தியை வாசகனுக்கு விற்கிறது.ஆனால் நாம "பொளைக்க தெரியாத கேஸு" ங்கறதால தயாரிப்பு முறையையே - ஃபார்முலாவையே கொடுத்து ஒழிச்சுரலாம்னு நினைக்கிறோம்.

ஆனால் பெரும்பாலான வாசகர்களும் நுகர்வோரா இருக்கத்தேன் ஆசைப்படறாய்ங்க. நாம புது ட்ரெண்டுல அவிகளையே -அதான் பாஸு.. உங்களையே தயாரிப்பாளரா மாத்த வேற ரூட்ல போறதால கொஞ்சம் போல குழப்பம் வந்திருக்கும்.

பர்த டே கேக்னுட்டு கேட்டதும் பாக்கிங் முடிஞ்சு கைக்கு வந்துரனும்.அதான சனங்க ஸ்டைலு. அதை விட்டுட்டு நான் பாட்டுக்கு மாஞ்சு மாஞ்சு தியரியை சொல்லிக்கிட்டு கிடந்தேன்.

இதை தொழிற்களம் குழு மிகச்சரியா கண்டு பிடிச்சுட்டாய்ங்க. அவிகளுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

ஜாக்கி சான் படத்துல படம் எல்லாம் முடிஞ்ச பிற்காடு அதை எப்படி எடுத்தாய்ங்கன்னு காட்டுவாய்ங்க. அப்படி நாமளும் இந்த ஃபார்முலா - தயாரிப்பு முறைகளையெல்லாம் கடேசியில தர முடிவு பண்ணியிருக்கம்.

இனி குழப்பங்கறதெல்லாம் மூச் !

பாடம்: 1

இந்த அத்யாயத்தின் எண் 8 . நாம ஒரு ஹோட்டல் கட்டறோம்னு வைங்க. எட்டாம் நெம்பர் ரூமுன்னு ஒன்னு கட்டாயம் வரும். நமக்கா சோசியம் , நியூமராலஜி மேல எல்லாம் நம்பிக்கை இல்லைன்னு வைங்க. இருந்தாலும் .. எட்டாம் நெம்பர் ரூமே இல்லாம 7 ஏ 7 பி ன்னு வச்சோம்னா கஸ்டமரோட நம்பிக்கையை கவுரவித்தவர்களாவோம். அவிக ஈகோவை திருப்திப்படுத்தினாலே பாதி வெற்றி. கஸ்டமர் ஈஸ் ஆல்வேஸ் கரெக்ட்.

சாமானியனுக்கு ஆத்மா ,ஆமைவடைல்லாம் தெரியாது. "சுயம்" (செல்ஃப்) என்பதையே அறியாதவர்கள் இருப்பாய்ங்க.அவனை பொருத்தவரை அவனோட ஈகோ தான் சகலமும்.

அவனோட ஈகோ தாக்கப்பட்டா கொதிச்சு போயிர்ரான். எனக்கே நான் முட்டாளோங்கற சந்தேகம் இருக்கிறப்ப ஆருனா முட்டாள்னா எனக்கு ஒடனே கோவம் வந்திரும். இதே எனக்கு நான் அறிவாளிங்கறதுல எந்த சந்தேகமும் இல்லேன்னு வைங்க . எதிராளி என்னை "முட்டாள்"னு பெரிய எழுத்தில கத்தினா " கரெக்ட் பாஸ்.. எனக்கும் அப்பப்போ அப்படித்தான் தோனுது"ன்னு சொல்லிட்டு அடுத்த வேலைய பார்க்க போயிருவன்.

நம்ம வாடிக்கையாளர்கள் எல்லாமே தங்கள் மேல் -தங்கள் தகுதி மேல் சந்தேகம் உடையவுகதேன். நாம அவிக சந்தேகத்தை போக்கனும். அவிக ஈகோவை திருப்திபடுத்தனும்.

நகைக்கடைக்கு போறோம்.ஒடனே கடைக்காரர் கூல் டிரிங்ஸ் கொண்டு வர சொல்றாரு. நம்ம ஈகோ திருப்தியடையுது. விலையை ஏத்திப்போட்டாலும் தட்டி கேட்க மனசு வர்ரதில்லை.

பணம் சம்பாதிக்க வேண்டுமானால் நீங்கள் கற்க வேண்டிய முதல் பாடம். உங்கள் ஈகோவை குழி தோண்டி புதைப்பது. எதிராளி ஈகோவை திருப்தி படுத்துவது..


உஸ் அப்பாடா ஒரு லைன் அப்பை பிடிச்சுட்டம். இனி குழப்பத்துக்கெல்லாம் சான்ஸே இல்லை. வண்டியிலருந்து இறங்கி போனவுக எல்லாம் வண்டி ஏறலாம். இனி தினசரி 2 பாடங்களை பார்ப்போம். இதெல்லாம் நாலு இங்கிலீஷு புஸ்தவம் படிச்சுட்டு எடுத்து விடற ஐட்டம் கடியாதுங்கோ..

நாம எந்த ஹோட்டல்ல பிச்சைக்காரனுக்கு லஞ்ச் ஆர்டர் பண்ணி லஞ்ச் காசை டிப் பண்ணோமோ அதே ஹோட்டல்ல அதே காசுக்கு சாம்பார் பவுடர் மார்க்கெட் பண்ணியிருக்கம். வசூலுக்கு நாற்பது தாட்டி அலைஞ்சிருக்கம் - புன்முறுவல் மாறா முகத்தோட. நம்ம பொளைப்பே .ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு.

நம்மை போல காசை கரியாக்கின பார்ட்டியும் இருக்கமாட்டாய்ங்க. நம்மை போல குப்பைய கூட காசாக்கின கிராக்கியும் இருக்கமாட்டாய்ங்க.

அந்த முனையிலருந்து இந்த முனை வரை பார்த்திருக்கம். ப்ரொஃபெஷ்னலா ஒரு சோசியராவும் இருக்கிறதால அம்பானி ரேஞ்சையும் சந்திச்சிருக்கம். அன்னாடங்காய்ச்சிகளையும் சந்திச்சிருக்கம். ச்சொம்மா ஆட்டோ கிராஃப் போட்டுட்டு/வாங்கிக்கினு வந்துர்ரதில்லிங்ணா அவிக சுகதுக்கங்கள்ள பங்கெடுத்திருக்கம்.

அந்த அனுபவத்துல புடம் போட்ட தங்க பஸ்பதனமான பாடங்கள் நாளையிலருந்து .. தினசரி ரெண்டு கண்ணா !
ரெண்டு லட்டு திங்க ஆசையா.. இந்த பக்கத்தை புக் மார்க் பண்ணிக்க !
6 comments:

  1. லட்டு நல்லாயிருக்கு சகோ...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உஸ் அப்பாடா.. எப்படியோ குழுவுக்கு லட்டு பிடிச்சுருச்சு..

    ReplyDelete
  3. புக் மார்க் பண்ணியாச்சு, சந்தோஷமா?

    ReplyDelete
  4. தமிழ் செல்வி அவர்களே !
    //தன் மகன் சான்றோன் என கேட்ட தாய்// போல ஃபீல் ஆகுது. ரெம்ப நன்றி.

    ReplyDelete
  5. தல,, இப்பல்லாம் லட்டுல கலப்படம் கொறைஞ்சட்டு வர மாதிரி தெரியுதே,,!

    இப்படியே கலக்குங்க,,,

    (கலப்படம் - தமிழில் அதிகமான பிற மொழி சொற்களை உபயோகித்தல்)

    ReplyDelete
  6. ரெம்ப பாராட்டிராதிங்க. அப்பாறம் மிதிவண்டி,அடி ரொட்டி,குழம்பின்னு கும்மியடிக்க ஆரம்பிச்சுருவம்..

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.