Ads Top

பணம் பணம் பணம் : 9


அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

தொழிற்களம் வலைதளம் மூலம் உங்களை ஒன்பதாவது நாளா உங்களை சந்திக்கிறேன். நான் இந்த தொடர்ல நடத்த நினைச்ச பாடங்களுக்கான அடிப்படைய கூட ஆரம்ப அத்யாயங்கள்ள சொல்லியிருக்கேன். இந்த பாடங்களை பார்த்துட்டு அட இவ்ளதானான்னு நினைச்சுட்டா தவறு. இந்த பாடங்களுக்கெல்லாம் அடிப்படை 1-7 அத்யாயங்கள்ள இருக்கு. அந்த அடிப்படை புரிஞ்சவுகளுக்கு இந்த பாடம்லாம் ஜுஜுபி. நேத்திக்கு பாடம்:1 என்று குறிப்பிட்டு பணம் சம்பாதிக்க நினைச்சா ஈகோவை கழட்டி விட்டுருங்கன்னு சொல்லியிருந்தேன்.

தங்கள் மேல் -தங்கள் தகுதியின் மேல் சந்தேகம் உள்ளவுகளுக்குத்தான் ஈகோ இருக்கும். ஈகோ உள்ளவுக தங்கள் ஈகோவை திருப்தி படுத்திக்க செலவு பண்ணிக்கிட்டிருப்பாய்ங்களே தவிர அவிகளால சம்பாதிக்க முடியாது. நீங்க சம்பாதிக்கனும்னா உங்க வாடிக்கையாளரோட ஈகோவை நீங்க திருப்தி படுத்தியாகனும்.

ரஜினியாச்சும் இன்னைக்கு விவாத சுழல்ல மாட்டிக்கிற பார்ட்டியாயிட்டாரு.ஆனால் எம்.ஜி.ஆர் அப்படியில்லை. காரணம் என்னன்னா அவரு ஈகோ பார்க்காம தன்னை சேர்ந்தவுகளோட ஈகோவை திருப்தி படுத்தறதை வழக்கமா வச்சிருந்தாரு.

நம்மையே எடுத்துக்கங்க..முன்னே பின்னே தெரியாத சின்ன ஊருல தொழில் நடத்த வேண்டிய கட்டாயம். நாம குடியிருந்த வீடு பதினெட்டு பட்டி சனமும் வாரச்சந்தைக்கு போற வழியில இருந்தது. வீட்டுக்கு எதிர்த்தாப்ல ஒரு பெரிய கான்வென்ட் வேற தாய்க்குலங்கள் இது சின்ன ஊரு உங்க தொழில்ல பெருசா என்ன வந்துரப்போகுது. அதுலயும் நீங்க பொளைக்க தெரியாத மன்சனா இருக்கிங்க . சின்னதா கடை போட்டு சம்சாரத்தை ஒக்கார வச்சுட்டா அதுலயும் நாலு காசு வரும்லன்னு சஜஸ்ட் பண்ணாய்ங்க.

1994ல எல்லாம் நாம பெரிய ஈகோயிஸ்டு. ஏதோ போதாத நேரம்னு சகிச்சுக்குவமே தவிர நானே ராஜா நானே மந்திரி டைப்பு. என்னமோ தெரியலை. நம்ம மேல அக்கறையில சொல்றாய்ங்களேன்னு ஒரு பெட்டியை கவுத்து போட்டு அது மேல பெட்சீட்டை போட்டு வீட்ல கடுகு உளுத்தம்பருப்பு கொட்டி வைக்கிற பாட்டில்களை எல்லாம் கொண்டு வச்சு , குறுக்கால ஒரு கயிறு கட்டி வச்சுட்டு ஹோல்சேல் கடைக்கு போயி குழந்தைங்க சாப்பிடற ஐட்டங்களை பாக்கெட் பாக்கெட்டா வாங்கிட்டு வந்து இருந்தவரை பாட்டில்ல கொட்டி வச்சு - பாட்டில் போதாம கயித்துல சேஃப்டி பின் போட்டு தொங்க விட்டம்.

ஐடியா கொடுத்த தாய்க்குலத்துக்கு ரெம்ப சந்தோசம். ஒடனே தங்கள் வீட்ல இருந்து ஒரு மர அலமாரியை கொண்டு கொடுத்தாய்ங்க. அப்போதைக்கே நம்ம க்ளையண்ட்ஸா மாறியிருந்த பார்ட்டிங்க ஒவ்வொருத்தரு ஒவ்வொரு விதமா உதவினாய்ங்க.

ஒரே மாசத்துல யாவாரம் ஒரு ரேஞ்சுக்கு வந்துருச்சு. தினசரி ரூ.200 வரை யாவாரம் நடக்கும் (எதிர்க்க ஸ்கூலு ஞா இருக்குல்ல) ஒரு 60 ரூவா கிடைக்கும். வார சந்தையின் போது 1000 ரூ கிடைக்கும் நமக்கு ரூ.300 வரை கூட கிடைக்கும்.

பொஞ்சாதி சமைக்கிறப்ப நாம கடையில உட்காருவம். ராத்திரி 8 க்கு மேல நாம உட்கார்ந்தே ஆகனும்.(சரக்கு பார்ட்டிங்க) பீடி சிகரட் ட்ரேவை மட்டும் வெளிய வச்சுக்கிட்டு படுத்தா ராத்திரி 12 வரை யாவாரம் நடக்கும். அப்பத்தேன் செட்டியார் ஒருத்தர் -வயசாளி நட்பானாரு. கடையில வந்து உட்கார்ந்து பழைய கதைல்லாம் நிறைய பேசுவாரு. லைப்ரரியில பழைய பேப்பர் செக்சன் மாதிரி - கெவுர்மென்டு ஆஃபீசுல ரிக்கார்ட் செக்சன் மாதிரி -பழமை நெடி ..

ஒரு நாளு யாவார கணக்கை எல்லாம் பார்த்துக்கிட்டிருக்கேன். நமக்கு வரவேண்டிய பாக்கியும் - நாம ஹோல்சேல் காரவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியும் சமம்மா இருக்கு.ஆனாலும் தினசரி நாலு பேர்த்துக்காச்சும் நாளைக்கு வாங்கண்ணேன்னு சொல்ல வேண்டிய நிலை..

அப்பம் வயசாளி வந்தாரு..என்ன சாமிகள் ரெம்ப டல்லாயிருக்காப்ல இருக்கேன்னாரு. மேட்டரை சொன்னேன். அப்பம் ஏதோ சாமி வந்தாப்ல படபடன்னு சில பாய்ண்டுகளை விட்டாரு. அது அப்டியே நம்ம மைண்ட்ல ஃபீடாயிருச்சு.

" சாமீ .. யாவாரம் பண்ணா முதலுக்கு வட்டி கிடைக்குதா பாரு.. உன் கூலி கட்டுப்படியாகுதா பாரு. கடைக்கு வாடகையாச்சும் நிக்குதா அதை பாரு.இதெல்லாம் போக லாபம் என்ன நிக்குது பாரு. லாபம் இருந்தா செய். இல்லாட்டி ஏறக்கட்டிட்டு வேற பொழப்பை பாரு

கல்லாவுல விழறதெல்லாம் உன் பணம் இல்லை. மேற்படி செலவெல்லாம் போக -முதலை தனிய எடுத்த பிற்காடு மிஞ்சினது தேன் உன் லாபம். உன் பணம். ஏதோ நிறையவே வருது போகுதுன்னு இருந்தின்னா படுக்க வச்சிரும்.

காசுக்கு வாங்கி காசுக்கு வில்லு. முடியலியா கடனுக்கு வாங்கி காசுக்கு வில்லு. கடனுக்கு வாங்கி கடனுக்கு வித்தினா இந்த இழவுதான்"

நமக்கு அப்டியே கீதோபதேசம் கேட்ட அர்ஜுனன் கணக்கா ஜில்லுன்னு ஆயிருச்சு. ராத்திரியெல்லாம் ரோசிச்சன்.

கொய்யால .கிழவாடி பெருசா படிச்சவரும் இல்லை. எதையும் புதுசா சொல்லலை. நமக்கு தெரியாததை ஒன்னும் சொல்லிரலை.

பொருளாதாரத்துல நிலம்,உழைப்பு, முதல், நிர்வாகம் னு சொல்வாய்ங்க (லேண்ட் ,லேபர் ,கேப்பிடல் ,ஆர்கனைசேஷன்) இவை தான் உற்பத்தி காரணிகள். (ஃபேக்டர்ஸ் ஆஃப் ப்ரொடக்சன்) உற்பத்தி நடந்தா நிலத்துக்கு வாடகை , உழைப்புக்கு கூலி, முதலுக்கு வட்டி, நிர்வாகத்துக்கு லாபம் கிடைக்கனும். இல்லாட்டி நஷ்டக்கணக்குதேன். எதிர்காலத்துல தலைக்கு துண்டு தேன்.

இன்னைக்கு நடக்கிற யாவாரங்களுக்கு இந்த விதியை அப்ளை பண்ணா எத்தனை யாவாரம் நிக்கும்னு தெரியலை. எல்லாரும் கடுமையான போட்டி காரணமா விலையயும் ஏத்த முடியாம - உற்பத்தி செலவையும் குறைக்க முடியாம -தரத்தை குறைச்சிக்கிட்டு -சேல்ஸை கூட்ட விளம்பரங்களை வாரிவிட்டுக்கிட்டு - வங்கிக்கடன் , அரசு தரும் சலுகைகள்,மானியங்களை வச்சுக்கிட்டு - டுபாகூரா லாபக்கணக்கு காட்டிக்கிட்டு (சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஞா இருக்குல்லை) நெருப்போட விளையாடிக்கிட்டிருக்காய்ங்க.

ஈகோ பார்க்காம பெருசு சொன்னதை ராத்திரி எல்லாம் ரோசிச்சிட்டே இருந்தேன். பல முடிவுகள் எடுத்தேன். உ.ம் கம்பெனிக்காரன் ப்ராடக்டை வாங்கி வித்தா லாபம் குறைவு. லோக்கல் மேக் வாங்கி வித்தா லாபம் சாஸ்தி ஆனால் அது மக்களுக்கு பண்ற துரோகம். நாமே உற்பத்தி செய்தா நம்ம கூலியை கணக்கு போடலின்னா பாதிக்கு பாதி லாபம் நிக்குது. இப்படி பல மேட்டர் ரோசிச்சு அமலாக்கினேன். அபார வளர்ச்சி. லாபம் கூடியது.

(ஆன்டி க்ளைமாக்ஸ் என்னடான்னா லாப வெறி கூடிப்போயி 70% லாபம் கிடைக்குதுன்னு க்ளூக்கோஸ் யாவாரத்துல இறங்கி அதை மார்க்கெட் பண்ணி முடிக்க 3 மாசம் ஆச்சு.கலீக்சனுக்கு போனா 1000 ரூவா சரக்கு போட்டுக்கிட்டவன் அம்பது ரூவா கலீக்சன் தரான். வச்ச முதல் மேல வட்டி என்ன ஆச்சு - மாதாந்திர செலவுகளுக்கு என்ன செய்ய? கலீக்சனுக்கு போய் வர்ர டி.ஏ என்னாச்சு , படி என்னாச்சு. செமர்த்தியாய் நாறிட்டம்)

ஆக இந்த அத்யாயத்தோட சாரம் சம்பாரிக்க நினைக்கிறவனுக்கு ஈகோங்கறது கூடவே கூடாது . அடுத்தவுக ஈகோவை திருப்தி படுத்தினாதான் சம்பாரிக்க முடியும். தன் ஈகோவை திருப்திபடுத்த நினைச்சா வச்சமுதலுக்கு வட்டம் தேன்..

மொத பாடத்துக்கான ரிவிஷனுக்கே இந்த அத்யாயம் சரியா போச்சு .இனி ரிவிஷன் எல்லாம் கடியாது. தினசரி ரெண்டு பாடம் ஓகேவா.. உடுங்க ஜூட்டு..

4 comments:

 1. பாமர மொழியில் அழகான படைப்பு...முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் நாம் ஏன் இன்னமும் பாமரர்களாய் இருக்க வேண்டும்...இதே கட்டுரையை தெளிவான தமிழுக்கு மாற்றி பதிவிடுங்கள் சகோ...தொழிற்களத்தின் ஆக்கமான பாதையின் முதல் பிரதிநிதியாய் இருப்பீர்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தமிழ் செல்வி அவர்களே !
  நானும் நெல்ல தமிழ்ல தான் எளுதிக்கிட்டிருந்தேன். ஆரும் கண்டுக்கலை.

  ஒரு ஈழத்து சொந்தம் நான் எழுதும் விஷயங்கள் மிக நன்றாக இருப்பதாகவும், ஆனால் என் நடை புரிய கடினமாக இருப்பதாகவும் -பேச்சு தமிழில் எழுதினால் அதிகம் பேர் படிக்கலாம் என்றும் கருத்துரையிட நான் மாறிவிட்டேன்.

  நம்ம ரேஞ்சும் மாறிப்போச்சு . தமிழ்10 தரவரிசையில நிரந்தரமா 10 முதல் 15 க்குள் இருக்கம்.

  இப்படியே விடுங்க. இதை புத்தகமாக வெளியிடும்போது வேண்டுமானால் மாற்றி பிரசுரிக்கிறேன்.

  வருகைக்கும் -கருத்துரைக்கும் -அக்கறைக்கும் மிக நன்றி .

  ReplyDelete
 3. தலை எல்லாம் அருமை.. ஒரு சின்ன ஆலோசனை,,

  ஒவ்வொரு பதிவின் முடிவிலும்,

  நிஜவாழ்வின் வெற்றியாளர்களின் பொன்மொழிகள், தத்துவங்கள்னு நான்கு வரிக்குள் நச்சுன்னு ஒரு சிறிய குறிப்பை போட்டு பாருங்களேன்...!!

  ReplyDelete
 4. அண்ணே !
  போட்டுப்பார்க்கிறதா.. போட்டு தாக்கிருவம்ல..

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.