அஞ்சலி செலுத்துவோம்உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளும் நாளடைவில் உலகம் முழுவதும் பரவி மக்களால் பயன்படுத்தப்படுகிறது. லேப்டாப்பை முதன்முதலில் உருவாக்கியவர்  பில்மாக்ரிட்ஜ். இவர் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆவார்.   பில்மாக்ரிட்ஜ் 1982 ஆம் ஆண்டில்  கிரிட்காம்பஸ்  என்ற மடி கணினியை உருவாக்கினார். 6 அங்குல மானிடர் திரை கொண்ட இந்த கணினி கீபோர்ட் மூலம் மூடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. கிரிட் ஆபரேட்டிங்க் சிஸ்டம் இதில் பயன்படுத்தப்பட்டது. இதன் விலை 4.5லட்சம் என்பதால் மக்கள் மத்தியில் பிரபலம் அடையவில்லை. கிரிட் காம்பஸ் மடி கணினியின் நம்பகத்தன்மை காரணமாக அமெரிக்க ராணுவம் இதை 1985 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தத் துவங்கியது. டிஸ்கவரி உள்ளிட்ட விண்வெளி வாகனங்களில் கிரிட்காம்பஸ் கணினி பயன்படுத்தப்பட்டது. இந்த மரியாதைக்குரிய விஞ்ஞானி  புற்று நோயால்  தன்னுடைய 69 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

Comments

  1. இவர் மறைந்தாலும் இவரின் புகழ் என்றும் மறைவதில்லை...

    நவின உலகத்தின் முன்னோடியான இவரின் ஆத்மா சாந்தியடைக்க இறைவனை வேண்டுவோம்...

    ReplyDelete
  2. உண்மையிலேயே உலகிற்கு ஒருமிகப்பெரிய இழப்புதான். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்