மீண்டும் ஒரு போராட்டம்
எல்.ஐ.சி. வங்கித்துறை கடன்
- மதிப்பிடமுடியாத தொகை.
சத்யம் மோசடி -
14000 - 25000 ஆயிரம் கோடி.
ஹசன் அலிகான்
- 80000 கோடி.
ஷ்கார்பன் நீர்மூழ்கி கப்பல் ஊழல் - 18978 கோடி.
தேயிலை ஊழல்
- 9000 கோடி.
ஸ்பெக்டரம் ஊழல்
- 1 .76 லட்சம் கோடி.
நிலக்கரி சுரங்க ஊழல்
- 1 86 லட்சம் கோடி.
இதெல்லாம் இந்தியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய ஊழல்களின் பட்டியல்.
உலக நாடுகள் எல்லாம் தங்களது சாதனைகளைத்தான் பட்டியலிடும். ஆனால் தங்கள் நாட்டில் நடந்த ஊழல்களை பட்டியலிடும் அவலநிலை இந்தியாவில் மட்டும்தான் நிலவுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த ஊழல்களின் மதிப்பு மட்டும் சுமார் 80 லட்சம் கோடிகள். ஆனால் இந்தியா உலக நாடுகளிடம் வாங்கி இருக்கும் மொத்த கடன்தொகையே 38 லட்சம் கோடிகள்தான். இது கடந்த வாரம் ஒரு வாரப்பத்திரிக்கையில் வெளியான செய்தி.
எங்கே செல்கிறது நம் நாடு.
50 % மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ வழியின்றி வாடும் இந்திய நாட்டில்தான் இவ்வளவு பெரிய ஊழல்கள் நடக்கிறது.
மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிகின்றனர். நாட்டை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் காடுகளை பெரிய தொழிற்சாலைகள் அமைக்க தனியாருக்கு தாரைவார்க்கபட்டுவிட்டன. இந்த அநியாயத்தை எதிர்த்து போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டனர்.
மழையின்றி விவசாயம் பொய்த்துவிட்ட சூழ்நிலையில், வாங்கிய கடனை அடைக்க முடியாமல், வாழ வேறு வழியின்றி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அத்தியாவசிய பொருள்களின் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீஸல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது.
இதெல்லாம் சரி செய்ய வேண்டிய அரசு, கைகட்டி, வாய்பொத்தி மக்களின் கஷ்டங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. கேட்டால் அரசாங்க கஜானாவில் பணம் இல்லை என்கிறது அரசு. மக்கள் தங்களின் குறைகளை அரசாங்கத்திடம் முறையிட்ட காலம் மாறி, இன்று விலையேற்றத்தை பொறுத்து கொள்ளுங்கள் என்று அரசு மக்களிடம் கையேந்துகிறது.
மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யகூட கஜானாவில் பணமில்லை என்று கூறும் இவர்களுக்கு, ஊழல் செய்வதற்கும், தேர்தல் நேரத்தில் போட்டி போட்டுகொண்டு கோடி கோடியாக செலவு செய்வதற்கும் அவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? ஒருவேளை ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்கள் வீட்டில் பணம் காய்க்கும் மரம் ஏதும் வளர்க்கிறார்களா? என்று புரியவில்லை.
ஊழலற்ற தேசத்தை உருவாக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்துதான் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வருகிறது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களையும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் மறந்துவிடுகிறார்கள். இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தால் ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு நம்மை ஆளும் அதிகாரத்தை கொடுத்த நாமோ, இன்னும் அன்றாட தேவைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.
காந்தியின் பெயரால் அமைந்த இந்த நாட்டில் , இன்று காந்தி ரூபாய் நோட்டுகளில் மட்டுமே இருக்கிறார். அவரது கொள்கைகள் கொல்லப்பட்டுவிட்டன. ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகளில் காணாமல் போய்விடும் இவர்களுக்கே இவ்வளவு தைரியம் இருக்கும் பொழுது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியாளர்களையே மாற்றும் நமக்கு அந்த தைரியம் இல்லாமல் போய்விடுமா?
சூரியன் அஸ்தமிக்காத தேசத்தை சேர்ந்த வெள்ளையர்களையே அஹிம்சை எனும் ஆயுதம் கொண்டு ஓட , ஓட விரட்டியவர்கள் நம் முன்னோர் . அவர்கள் வழிவந்த நம்மால் இந்த ஊழல்வாதிகளை ஒழிக்க முடியாதா?
முடியும்.
அதற்கு மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டும். இந்த போராட்டம் வெள்ளையர்களை எதிர்த்து அல்ல. அரசியல்வாதிகள் என்ற பெயரில் நம்மை சுரண்டி வாழும் இந்த கொள்ளையர்களை எதிர்த்து. ஊழல் இல்லா தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் உள்ளது. அந்த கனவுக்கு உயிர் கொடுப்போம். வாருங்கள் தோழர்களே, அனைவரும் ஒன்றிணைவோம். ஒரு காந்தியின் கீழ் அல்ல. ஒவ்வொருவரும் காந்தியாக முன்னின்று போராடுவோம். நம் அடுத்த தலைமுறை ஊழல் இல்லா தேசத்தில் உருவாகட்டும். கனவு பலிக்கட்டும்.
உணர்ச்சிகரமான உங்கள் எழுத்துக்கள் அனைவரின் மனதிலும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உங்களுடன் என்றும் நமது...
தொழிற்களம்...
அருமையான பதிவு. ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி போல் உள்ளது. உங்களின் எழுத்து நிச்சயம் படிப்பவர்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். தொடருங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDelete