எங்கே செல்கிறது நம் மனம் /மானம்?( பகுதி-3)

 இணையத்திலே தேடித் படிக்க எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் பலரும் உரையாடலுக்கு ( CHATING) மட்டுமே அதிகம் பயன் படுத்துகிறார்கள்.

முந்தைய பதிவினை படிக்க:


இதிலே வேடிக்கை என்னவென்றால்  எழுத்து மற்றும் குரல் மூலம்  உரையாடுகையில் அவர் ஆணா, பெண்ணா என்பதனை கண்டறிவது கேள்விக் குறியே...? காணொளி உரையாடலில் கண்டறிவது சாத்தியம் தான்.


முதல் வகையில் தான் நம்ம ஆட்கள் குளத்தில் விழுந்த குதிரையாய்  இருக்கிறார்கள், காரணம், எழுத்து  மூலம்  உரையாடுகையில் எதிர் முனையில் இருப்பவர் எந்த பாலினம் என்பதை அறியமுடியாது,

குரல் மூலம் உரையாடுகையில், ஆண் குரலை பெண்ணாகவும்,பெண் குரலை ஆண்குரல் போலவும் மற்றும் மென் பொருள் வந்து விட்டது, இதனை பயன் படுத்தி பலர் ஏமாற்று வேளையில்  ஈடுபடுகின்றனர்,

இவர்கள் வலையிலே விழுவது இளைஞர்கள்  மட்டுமல்ல,நடுத்தர வயதினரும் தான் என்பது அதிர்ச்சி தகவல், 


இதனை பற்றி என் எண்ணத்திலே உதித்த கவிதை:

ஓரினச்சேர்க்கை

தினந்தோறும் மாறும்
அவள் முகம் கண்டு
வருத்தபடுகிறான்

அவள் அவளல்ல
அவனென்று அறியாமல்...
என்னவென்று சொல்ல ?

"மாய உலகில்
மாயையாய்
ஓர்
ஓரினச்சேர்க்கை "

சரியா...? சொல்லுங்கள்.

(இன்று பல ஆடவர்கள், பெண்கள் பெயரில் இளைஞர்களிடம் சமூக வலை தளங்களில், 

உரையாடி அவர்களை தவறான பாதைக்கு இட்டு செல்கின்றனர், நான் அந்த  

கோணத்தில் தான், கவிதை எழுதினேன். இக்குறிப்பு இட காரணமாய் இருந்த இக்பால் 

செல்வன் அண்ணா  அவர்களுக்கு எனது நன்றி )


இதிலே மொழி பாகுபாடு இன்றி பலரும் இவ் வலையி விழுகின்றனர், 

விழுபவர்கள் பெரும்பாலும், கணவனை/மனைவியை  இழந்தவர்கள், 

அல்லது குடும்பத்திலே குழப்பம் கொண்டவர்கள்......

இது போன்ற அப்பாவி மக்களை மடக்கி நயமாக பேசி, பணம் கறப்பதே 

இவர்கள் தொழில், இவர்கள் கண்களுக்கு அப்பாவிகள் பணம் கறக்கும் 

பசுவாக தான் தெரிகின்றார்கள்...


நம் பதிவு உலக தோழமைகள் இவ் வலையில் விழாமல் இருக்க 

வேண்டும் என்ற நல எண்ணத்திலே பதிவிட்டேன்..

                                                     வாழ்க வளமுடன் 

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்