கொதி குமிழ்கள் வராமல் திரவங்களை கொதிக்க வைப்பது எப்படி?
நாம் தண்ணீர் கொதிக்கும் போது 'களக் புளக்" என்று குமிழ்கள் தோன்றி தண்ணீர்  முழுதும் நடனமாடுவதை பார்க்கிறோம். இந்த கொதி குமிழ்கள் வராமலே தண்ணீரை  கொதிக்க வைக்க முடியாதா என்ற கேள்விக்கு விடையாக அறிவியல் ஆளர்கள் தங்களது ஆய்வின் மூலம் விடை கண்டிருக்கிறார்கள்

சிறப்பு தண்ணீர் விலக்கும் மேற்பூச்சு  இதை சாத்தியமாக்குகிறது.

வடமேற்கு பல்கலை கழகம், சவுதி அரேபியாவை சேர்ந்த கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலை கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலை கழகம் ஆகியவை இணைந்து தண்ணீர் விலக்கும் மேற்பூச்சு பூசப் பட்ட மிக சிறிய கோளங்களைப் பயன் படுத்தி தண்ணீரை குமிழிகள் இல்லாமல் கொதிக்க வைக்கும் முறையை உருவாக்கி உள்ளார்கள். இந்த கண்டு பிடிப்பு  லைடன் ப்ரோஸ்ட் விளைவு என்ற அடிப்படையை பின் பற்றி உருவாக்கம் பெற்றிருக்கிறது. ஒரு திரவம் (தண்ணீர் என்று வைத்துக் கொள்ளலாம்) லைடன் ப்ரோஸ்ட் ஆரம்ப வெப்ப நிலையுடைய ஒரு பரப்பின் மீது படும் போது குமிழியிட்டு  ஆவி ஆவதற்கு பதிலாக ஒரு ஆவியால் ஆனா அடுக்கு ஏற்பட்டு திரவத்தின் மற்ற பகுதிகளை தக்கிக்கும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது.  இந்த ஆவி தண்ணீருக்கும் சூடாக்கும் பரப்புக்கும் இடையில் ஒரு பாதுகாப்பு அடுக்கை ஏற்படுத்துவதால்  உள் தண்ணீர் எதிர்ப்பை  85  சதம் குறைக்கிறது.

இது வரை சிறு அளவு தண்ணீரில் மட்டுமே இப்படி செய்ய முடிந்தது. அதிக . அளவில் ஆன திரவங்களை இப்படி செய்ய முடியவில்லை. ஏனென்றால் லைடன் ப்ரோஸ்ட்  வெப்ப நிலை நமது சமையல் அறை தண்ணீர் கொதி பாத்திரத்தில் உருவாக்க முடியாத அளவு மிக அதிகமானது. கொதிக்கும் போது உருவாகும் குமிழிகள்  உடனே  கலைந்து விடும் லைடன் ப்ரோஸ்ட் அடுக்குகள் ஆகும்.  

திரவங்களை பெரிய அளவில் கொதிக்க வைக்க இது தொடர்பான ஆய்வுகள் உதவிக்கு வந்தன. நானோ துகள்கள் கொண்ட சிறிய ஸ்டீல் பந்துகளின் மீது நீர் விலக்கும் மேற்பூச்சை பூசி 400  டிகிரி சூடு ஏற்றி அதன் பிறகு சாதாரண தண்ணீரில் போட்டு இந்த லைடன் ப்ரோஸ்ட் விளைவு அதில் தோன்றும் படி செய்தார்கள். தண்ணீர் விலக்கும் மேற்பூச்சால் இந்த சிறிய ஸ்டீல் பந்துகளின் மீது ஏற்பட்ட உச்சிகளும் பள்ளங்களும் திரவ ஆவியின் அடுக்கை குறைந்த வெப்ப நிலையிலும் சிதையாமல் இருக்க உதவி செய்தன 

இதனுடன் ஒப்பிட சிறிய கோளங்களை தண்ணீர் விரும்பும் மேற்பூச்சு பூசி தண்ணீரில் போட்டு கொதிக்க வாய்த்த போது லைடன் ப்ரோஸ்ட்  அடுக்குகள் உடன் சிதைந்து "களக் புளக்" குமிழிகள் தோன்றுவதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.  

இந்தக் கண்டு பிடிப்பு வெப்ப இட மாறுதல், பனி தடுக்கும் தொழில் நுட்பம், திரவக் கருவிகள் மற்றும் வாகனங்களின் மீது இழுப்பை குறைத்தல் போன்றவற்றில் பயன் படக் கூடியது. திரவ நிலையில் இருந்து ஆவி நிலை மாறுதலின் போது குமிழிகள் தோன்றாதிருப்பது பெரிய தொழில் பாதுகாப்பு பயன் பாடுகளிலும் , உலோகங்களை வெப்பப் படுத்துவது குளிர்விப்பது மற்றும் அணு மின் உலைகளில் தண்ணீரை குளிர்விப்பது போன்றவற்றில் உபயோகமாக கூடியது.  


குமிழிகள் இல்லாமல் கொதிக்க வைப்பது இப்படித்தான் வாசக நண்பர்களே!

 

 


 
Comments

  1. நல்ல பதிவு, வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்