என்ஜின்யில் உள்ள முக்கிய வகைகள்:

ஆட்டோமொபைல் என்ஜின்  இயங்குவது எப்படி என்கிற இந்த தொடரில் ஆட்டோமொபைல் என்ஜின் செயல்படும் விதம் மற்றும் அதன் பாகங்கள் பற்றி அறிவோம்
AUTOMOBILE (Automotive)நம் தமிழில் வாகனவியல்
ஆட்டோமொபைல் என்றால் தானாக சக்தியை உற்பத்தி செய்து இயங்கும் இயந்திரம் ஆகும்.

வாகனங்களின் இதயம் என்றால் அது என்ஜின்தான்.
என்ஜின் எனப்படுவது வாகனத்தின் சக்தி உற்பத்தி ஆலையாகும்.
என்ஜின்  இயங்குவது எப்படி என்று தெரிந்து கொள்வதற்க்கு முன் என்ஜின் பாகங்களை அறிந்து கொள்வோம்.என்ஜின்யில் உள்ள முக்கிய வகைகள்:

என்ஜின் 4 பிரிவுகளை கொண்டது;

1. எரிதல் அடிப்படையில்(based on combustion)

அ. வெளிப்புற எரிதல்(external combustion engine)

பயன்பாட்டில் இல்லை

ஆ. உட்ப்புற எரிதல்(internal combustion engine)

அனைத்து வாகனங்களிலும்
2. எரிபொருள் அடிப்படையில் (fuel based)

டீசல், பெட்ரோல், எல்பிஜி, இன்னும் பிற...

3. பயன்பாட்டின் அடிப்படையில்(application based)

ஆட்டோமொபைல் என்ஜின்,ராக்கெட் என்ஜின், நிலையான என்ஜின்,இன்னும் பிற...
4. வடிவமைப்பு அடிப்படையில்(construction based)

உட்ப்புற கட்டமைப்பு(inline), V கட்டமைப்பு, W கட்டமைப்பு...
...........................................................................................................................................................................................
ஆட்டோமொபைல்  தொழில்நுட்ப தொடரான என்ஜின் இயங்குவது எப்படி 2ஆம் பகுதியில்  எரிதல் அடிப்படையில் என்ஜின்(Based on combustion) என்றால் என்ன என்பது பற்றி கான்போம்.

Internal Combustion Engine (IC Engine):

உலக அளவில் உட்ப்புற எரிதல் என்ஜின்தான் அதிகயளவில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து ஆட்டோமொபைல் வாகனங்களுக்கு IC Engine பயன்படுத்தப்படுகிறது. என்ஜின் உட்ப்புறமாக எரிபொருளை எரித்து ஆற்றலை தருகிறது. அந்த ஆற்றலை கொண்டு வாகனம் இயங்குகிறது.
எ.கா:  கார், பஸ்,லாரி, பைக்....
External Combustion Engine (EC Engine):வெளிப்புற  என்ஜின் அதிகயளவில்  பயன்பாட்டில் இல்லை. ஸ்டீம் என்ஜின் வெளிப்புற  என்ஜின் ஆகும். வெளிப்புறமாக உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை கொன்டு என்ஜின் இயங்கும்.

எ.கா: ஸ்டீம் ரயில் என்ஜின், ஸ்டீம் ஜென்ரேட்டர்
ஆட்டோமொபைல் என்ஜின் இயங்குவது எப்படி பகுதி 3யில் உட்ப்புற  என்ஜின்   (internal combustion engine) பிரிவுகளை கான்போம். இந்த பதிவில் SI Engine மற்றும் CI Engine.

SI Engine:
 SI Engine என்றால் Spark Ignition Engine அதாவது தீப்பொறி மூலம் எரிபொருள் எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும். இதன் மூலம் வாகனம் இயங்கும்.
தீப்பொறி எவ்வாறு  கிடைக்கும் என்றால் spark plug மூலம் கிடைக்கும். ஸ்பார்க் ப்ளாக் என்றால் என்ன எவ்வாறு இயங்கும் என்பதை  என்ஜின் பாகங்கள் பகுதியில் கான்போம்.SI Engine என்றால்  என்ன மிக எளிமையாக அறிய பெட்ரோல்  மூலம் இயங்கும் என்ஜின்கள் SI Engine ஆகும்.


CI Engine:
 CI Engine  என்றால் Compression Ignition Engine அதாவது மிகுந்த அழுத்ததுடன் இருக்கும் காற்றில் எரிபொருளை தெளிக்கும் பொழுது எரிபொருள் எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும். இதன் மூலம் வாகனம் இயங்கும்.
 www.automobiletamilan.com


எரிபொருள் எவ்வாறு தெளிக்கப்படும் என்றால் Injector மூலம் மிகுந்த அழுத்ததுடன்(High Pressure)  எரிபொருள்  தெளிக்கப்படும்.CI Engine என்றால்  என்ன மிக எளிமையாக அறிய   டீசல் மூலம் இயங்கும் என்ஜின்கள் CI Engine ஆகும்.

எதனால் பெட்ரோல் என்ஜின்க்கு  ஸ்பார்க் ப்ளாக் டீசல் என்ஜின்க்கு Injector

Self  Ignition Temperature எனப்படும் தீ பற்றும் வெப்பநிலை

 பெட்ரோல்: 246 °C
 டீசல்: 210°C
..............................................................................................................................................................................
ஆட்டோமொபைல் என்ஜின் இயங்குவது எப்படி தொடரின் பகுதி நான்கில் 2 சுற்றுக்கும் 4  சுற்றுக்கும் வித்தியாசம் என்ன என்பதை கான்போம்.
ஆட்டோமொபைல்  என்ஜின்களின் ஆற்றலை பெற பயன்படுத்தும் முறைதான் 2 சுற்று(2stroke) மற்றும் 4  சுற்று(4stroke).

2 Stroke:
2 சுற்றில் இயக்க ஆற்றலை  பெற்று வாகனம் இயங்கும். முதல் சுற்றில் காற்றும், எரிபொருளையும் எரிதல் கலனில்(Combustion Chamber) இழுத்து கொள்ளும். இரான்டாம்  சுற்றில் ஸ்பார்க் ப்ளாக்கில் தீ பொறி உன்டாகி எரிபொருள் எரிந்து ஆற்றல் கிடைக்கும். தேவையற்ற பொருட்கள் புகைக்கூன்டில் வெளியேற்றப்படும்


2 சுற்றில் இயக்க ஆற்றல் கிடைப்பதானால் ஆற்றல்  அதிகமாக கிடைக்கும். ஆனால் எரிபொருள் முழுமையாக  எரியாது இதனால் எரிபொருள் வீனாகும் மற்றும் சுற்றுசூழலை பாதிக்கும். தற்காலத்தில் 2 ஸ்டோர்க் என்ஜின் பயன்படுத்துவது குறைந்து வருகிறது.
எ.கா; டிவிஸ் 50 (2 ஸ்டோர்க் என்ஜின்) ஆகும்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=s_BGFb13Obg
4 Stroke:
4 சுற்றில் இயக்க ஆற்றலை  பெற்று வாகனம் இயங்கும்.முதல் சுற்று:(Suction stroke)
காற்றை மட்டும்  எரிதல் கலனில்(Combustion Chamber) இழுத்து கொள்ளும்.(diesel)
காற்றும், எரிபொருளையும் எரிதல் கலனில்(Combustion Chamber) இழுத்து கொள்ளும்.(petrol)
இரான்டாம் சுற்று:Compression stroke
காற்றை மிகுந்த அழுத்தமாக மாற்றும்(diesel)
காற்று  மற்றும் எரிபொருள் கலவையை  மிகுந்த அழுத்தமாக மாற்றும்(petrol)
மூன்றாம் சுற்று:Power stroke
அழுத்தம் மிகுந்த காற்றில் எரிபொருளை injectorயில் தெளிக்கும் பொழுது எரிபொருள் எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும்.(diesel)
காற்று  மற்றும் எரிபொருள் கலவையில் ஸ்பார்க் ப்ளாக்கில் தீ பொறி உன்டாகி எரிபொருள் எரிந்து ஆற்றல் கிடைக்கும்.(petrol)
நான்காம் சுற்று: Exhaust stroke
தேவையற்ற பொருட்கள் புகைக்கூன்டில் வெளியேற்றப்படும்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2Yx32F1cncg
.......................................................................................................................................................................

ஆட்டோமொபைல் என்ஜின் இயங்குவது எப்படி தொடரின் பகுதி ஐந்தில் என்ஜின் பாகங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி கான்போம்
என்ஜின்யில் நிறைய  பாகங்கள் இருந்தாலும் மிக முக்கியாமான 12 பாகங்களை பற்றி கான்போம்.

1. சிலின்டர் ப்ளாக்(cylinder block)
சிலின்டர் ப்ளாக் எனப்படுவது என்ஜின்யின் அனைத்து பாகங்களை தாங்கும் அமைப்பாகும். சிலின்டர் ப்ளாக்யில் என்ஜின் வெப்பத்தை தனிக்க cooling finsகளும் இருக்கும்.
2.  சிலின்டர்(cylinder)
 சிலின்டர் எனப்படுவது பிஸ்டன் மேலும் கீலும் சென்று வரும் பகுதியாகும். இந்த பகுதியில் தான் எரிதல்(combustion) நடக்கும். மிக அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்படும்.
3. பிஸ்டன் (piston)
சிலின்டர் உட்ப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் பிஸ்டன் மேலும் கீழும் சென்று வரும் வகையில் அமைக்கப்படும்.பிஸ்டனயில் பிஸ்டன் ரிங் பொருத்தப்பட்டிருக்கும். பிஸ்டன் ரிங் கேஸ் மற்றும் ஆயில் கசிவை தடுக்கும்
4. எரிதல் கலன் (combustion chamber)
 எரிதல் கலன்  மிக அதிகமான வெப்பம் மற்றும் அழுத்தம் தாங்கும் வகையில் உருவாக்கப்படும்.
5.இன்லெட்&அவ்ட்லெட் (inlet&outlet manifold)
இன்லெட்&அவ்ட்லெட்  குழாய் வடிவில் இருக்கும். இன்லெட் காற்றை மற்றும் எரிபொருளை எரிதல் கலன்க்கு எடுக்க பயன்படும். அவ்ட்லெட் எரிந்த எரிபொருளை வெளியேற்ற பயன்படும்.
6.வால்வ்(valve)
வால்வ் இன்லெட்&அவ்ட்லெட்  என இரண்டுக்கும் இருக்கும். இன்லெட் வால்வ் காற்றை மற்றும் எரிபொருளை எரிதல் கலன்க்கு எடுக்க திறக்கும். அவ்ட்லெட் வால்வ்  எரிந்த எரிபொருளை வெளியேற்ற திறக்கும்.
7.ஸ்பார்க் ப்ளாக்(spark plug)
சிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்பார்க் ப்ளாக்கில் தீ பொறி உன்டாகி எரிபொருள் எரிந்து ஆற்றல் கிடைக்கும்.
8.இன்ஜெக்டர்(injector)
 சிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். injectorயில் தெளிக்கும் பொழுது எரிபொருள் எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும்.


9.கனக்டீங் ராட்(connecting rod)
கனக்டீங் ராட் பிஸ்டன்யுடன்( small end )  மேல்பகுதி பொருத்தப்பட்டிருக்கும். கீழ்பகுதி  க்ராங்க் ஸாப்ட்யுடன்(Big end) பொருத்தப்பட்டிருக்கும்.
10. க்ராங்க் ஸாப்ட்(crank shaft)
பிஸ்டன்யில் இருந்து வரும் ஆற்றலை(reciprocating motionமேலும் கீழும்) க்ராங்க் ஸாப்ட் rotary motion (வட்ட) மாற்றும்
11.கேம் ஸாப்ட்(cam shaft)
சிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.இன்லெட்&அவ்ட்லெட் வால்வை இயக்க பயன்படும். கேம்ஸ் வால்வை திறக்க மூட பயன்படும்.
12.ப்ளைய் வீல்(flywheeel)
ப்ளைய் வீல் க்ராங்க் ஸாப்ட் மூலம் கிடைக்கும் ஆற்றலை சீர்படுத்த  பயன்படும்.
................................................................................................................................................................................................
ஆட்டோமொபைல் என்ஜின் இயங்குவது எப்படி தொடரில் நிறைவு பகுதியில் என்ஜின்யில் உற்பத்தியாகும் ஆற்றல் எவ்வாறு சக்கரங்களை சென்றடைகிறது என்பதை கான்போம்.

எரிதல் கலனில் உன்டாகும் ஆற்றல் எவ்வாறு சக்கரங்களை சென்றடைகிறது.
பிஸ்டன்(piston) ஆற்றலை கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கனக்டீங் ராட்(connecting rod) பிஸ்டன்யில் இருந்து வரும் ஆற்றலை  க்ராங் ஸாப்ட் கொண்டு செல்லும்.
க்ராங் ஸாப்ட்யில்(crank shaft) இருந்து வரும் ஆற்றல் க்ளர்டச்க்கு(clutch) கொண்டு செல்லும்.
clutch மூலம் ஆற்றல் கியர் பாக்ஸ்(transmission system) வழியாக ப்ராப்லர் ஸாப்ட்(propeller shaft) கொண்டு செல்லும்.
 ப்ராப்லர் ஸாப்ட்  மூலம்  வரும்  ஆற்றல் Differential unit வழியாக  இரு  சக்கரங்களை சுழல வைக்கும்

Comments

  1. தங்களின் பகிர்வுகள் இங்கும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்