விவேக வீச்சுகள்
 பணி செய்வதற்கே உங்களுக்கு உரிமை; பயனுக்கு உரிமை கிடையாது”


கர்மண்யேவ அதிகாரஸ்தே மா பலேஷு கதாசன ( கீதை. அ.2. சு. 47)”
Myspace Rangoli Graphics Rangoli Designs Clipart
 உலகமே துன்பங்கள் நிறைந்த கல்விச்சாலைதான். அத்துடன் கூட மகாத்மாக்களும் தீர்க்கதரிசிகளும் உயர்ந்த பண்புகளைப் பயிலும் பள்ளியும் ஆகும். கருணை, பொறுமை, இவற்றுடன் எல்லாவற்றுக்கும் மேலாக நம் காலின் கீழுள்ள பிரபஞ்சமே பொடிப்பொடியாகப் போனாலும் நடுங்காத, வெல்ல முடியாது, எஃகினை ஒத்த உறுதி ஆகிய உயர்ந்த பண்புகளைப் பயிலும் பள்ளியாகும்.

 
இந்நாட்டு மக்களை யாராவது தமது முழு உள்ளத்துடனும் நேசிக்க முடியுமானால் பாரதம் மீண்டும் எழுந்து விடும் என்று  நம்புகிறேன்.

 
 உயர்ந்த சிந்தனையின்,  உண்மையுள்ளத்தின், குறிக்கோள்களில் தூய்மையாக இருப்பதன் சக்தி  மிக்க எண்ணங்கள் ஊடுருவி, உலகமெல்லாம் பாய்ந்து, பரவிப் பல நூற்றாண்டுகள் வரை, தக்க ஒரு மனிதனின் மூளையில் புகுந்து அங்கே வேலை செய்யும்வரை சூழ்ந்து கொண்டிருக்கும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

உள்ளத்தில் நம்பிக்கையும் அனுதாபமும் – தீச்சுடர் போன்ற நம்பிக்கையும், அனுதாப உணர்ச்சியும் – குடிகொள்ளட்டும். 

நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடமே தன்னம்பிக்கை.

 
 பக்தி, பக்தி, இறைவனின் பக்தி! மேன்மை பெறுவதற்கான ரகசியம் இதுதான்.

தன்னம்பிக்கையில்லாதவன் தான் நாஸ்திகன். 

 
நான் பலரிலும் மேம்பட்டவன்; எவருக்கும் தாழ்ந்தவனல்லன்; எங்குமே நான் கடைசியல்ல. ஏதாவதொன்றைச் செய்ய முடியும்”.
இந்தத் தைரியம் நமது மனதில் வளர்ந்தோங்கி , சிரத்தையுணர்ச்சி நமக்குள் குடிபுக வேண்டும். 
நமக்கு வேண்டுவது இரும்பினை ஒத்த தசை நார்கள். 
எஃகினையொத்த நரம்புகள். 
இவற்றினூடே இடியேறு போன்ற வலிமையுள்ள மனம். 
பலம், ஆண்மை, க்ஷத்திரிய வீர்யம், பிரம்ம தேஜஸ் ஆகிய இவையே வேண்டுவது. 
நமது அழகான, நம்பிக்கையுள்ள இளைஞர்களிடம் உள்ள தூய்மையின் காரணமாக உற்சாகத் தீ கொழுந்து விட்டெரிய, இறைவனிடம் குன்றாத பக்தியெனும் கவசமணிந்து, சிங்கத்தின் தைரியம் நரம்புகளில் துடிக்க,அர்த்தமற்ற தவறான கருத்துக்களையும், பலவீனத்தையும் பொறாமையையும் ஒழித்துக்கட்டி விட்டு வாருங்கள். இந்தப் புதிய தெய்வீக அமைப்பாகிற சக்கரம் சுழலுவதற்குத் துணை புரியுங்கள்.

உடல் பலவீனமாக இருக்கும்பொழுதுதான் நோய் அதனைப் பீடிக்கிறது:


Comments

 1. அற்புதமான பதிவு நல்ல கருத்துக்கள் நண்பரே.....

  ReplyDelete
 2. இந்நாட்டு மக்களை யாராவது தமது முழு உள்ளத்துடனும் நேசிக்க முடியுமானால் பாரதம் மீண்டும் எழுந்து விடும் என்று நம்புகிறேன்.

  படங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது. அருமையான பதிவு

  ReplyDelete
 3. பிளாகர் 'பதஞ்சலி' ராஜா கூறியது...

  அற்புதமான பதிவு நல்ல கருத்துக்கள் நண்பரே.....//

  கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

  ReplyDelete
 4. @ பிளாகர் Tamilraja k கூறியது...

  இந்நாட்டு மக்களை யாராவது தமது முழு உள்ளத்துடனும் நேசிக்க முடியுமானால் பாரதம் மீண்டும் எழுந்து விடும் என்று நம்புகிறேன்.

  படங்கள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது. அருமையான பதிவு //

  அருமையான கருத்துரைக்கு நிறைவான நன்றிகள்..

  ReplyDelete
 5. அருமையான பதிவு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. தொழிற்களம் குழு கூறியது...
  அருமையான பதிவு...

  வாழ்த்துக்கள்...

  வாழ்த்துகளுக்கு நன்றி ..

  ReplyDelete
 7. பாசிடிவ் எண்ணங்கள் மனதில் தோற்றுவிக்கும் ஒரு நல்ல கட்டுரை.
  பாராட்டுக்கள்!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்