பகிர்ந்து கொள்வோம்!

"தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்", இது உங்களுக்கும், எனக்கும், அனைவருக்கும் தெரிந்த ஒரு பொன்மொழி.

"அட அதான் தெரியுதுல, பிறகு ஏம்மா கண்ணு திரும்ப சொல்ற..?", னு கேக்கறிங்களா?

 இந்தக் கூற்ற நான் இப்போ மறுத்துப் பேசப் போறேன். நமக்குப் போக தான், எஞ்சியத பகிர்ந்து கொள்ளனுமா? இதோ பார்க்கலாம் அது பற்றி.

நீங்கள் அறிவாளியா? தினமும் ஏதேனும் வாசிப்பவரா? மாணவரா? இந்தப் பழமொழி உங்களுக்கு சிறிதும் பொருந்தாது. நான் சொல்வது இப்பொழுதே உங்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பு உண்டு. சரிதானே?

இன்று நாம் அனைவரும் படிக்கிறோம். தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம். ஆனால், இதனால் என்ன பயன்? நமக்கு என்ன பயன்? இதனால் நமக்கு உறுதியாக பயன் உண்டு, ஆனால், பிறருக்கு?

அது தான் சொல்ல வருகிறேன். நாம் படிக்கும், தெரிந்து கொள்ளும், கற்றுக் கொள்ளும் செய்தியோ, தொழில் நுட்பமோ அது பிறருக்குப் பயன்பட வேண்டும். சரி தானே?

கற்பதும் கூட இன்று கடமையாக மாறி விட்டது. காசுக்காக கற்பதாகிவிட்டது!
இதோ நான் சொல்லவருவதெல்லாம், உங்கள் அறிவை வஞ்சகம் இன்றி பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது பணி இடத்திலோ, கல்லூரியிலோ, உங்கள் பக்கத்து வீட்டுச் சிறுவர்களிடமோ, யாரிடம் முடியுமோ, அத்தனை பேரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மாணவரா? எந்தத் துறையைச் சார்ந்த மாணவராக இருந்தாலும், உங்களது அறிவை உங்கள் பகுதியில் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இதோ விளக்கமாகச் சொல்கிறேன்.

மருத்துவர்:
மருத்துவம் படிக்கிறீர்களா? உங்களது பகுதியில் வாழும் மக்களுக்குச் சுகாதாரம், மருத்துவ அடிப்படைகள் பற்றி சொல்லிக் கொடுக்கலாம். உங்கள் பகுதி என்றால், வீட்டின் அருகிலோ, அல்லது, உங்களது ஊரில் உள்ள போதிய விழிப்புணர்வு இல்லாத ஒரு கிராமமோ, இப்படி எங்காவது.

பொறியியல்:
பொறியியல் மாணவரா? நீங்கள் கல்லூரியில் "மினி ப்ராஜெக்ட்" (mini project) செய்வீர்கள் இல்லையா? அது மக்களுக்கு உதவும் வண்ணம் ஏதாவது ஒரு வகையில் அமையும் வண்ணம் செய்யலாம்.

எடுத்துக்காட்டாக: நீங்கள் கட்டிடப் பொறியியல் மாணவர் என்றால், உங்கள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகளோ, அல்லது, குப்பைகள் குவித்துக் கிடக்கின்றனவா சாலை ஓரம்? அதற்க்கு மாற்று வழிகள் யோசித்து ஒரு வடிவமைப்பு செய்து, அதை செயல் விளக்கம் செய்து காட்டலாம். பிறகு அதை மாவட்ட ஆட்சியர் போன்றோருக்கு அனுப்பலாம். மக்களுக்கும் இது பற்றி விவரிக்கலாம்.

சட்டம்:
சட்டம் பயின்றால், நீங்கள் மக்களுக்கு சட்ட ரீதியாக உங்களது அறிவை விளக்கலாம்?

இப்படி நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் உங்களது அறிவை மக்களுக்காக பயன்படும் வண்ணம் பகிர்ந்து கொள்ளுங்கள். பணம் மட்டுமே குறியாக இருக்க வேண்டாம்.

சரி தானே?

தனக்குப் போகதான் தானமும் தர்மமும்... இது, தவறு தானே?

-----

கண்மணி-அன்போடுComments

 1. கண்ணான கண்மணியே...

  எங்கள் பணியை சுலபமாக்கியதற்கு நன்றி...

  இந்த பகிர்வை ''படித்ததில் பிடித்தது'' என்னும் தலைப்பின் கீழ் பகிர்ந்துகொள்ளலாமே...

  நன்றி சகோ...

  ReplyDelete
 2. நன்றி.. :)
  ம்ம் மாற்றுகிறேன்.

  ReplyDelete
 3. இப்படி நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் உங்களது அறிவை மக்களுக்காக பயன்படும் வண்ணம் பகிர்ந்து கொள்ளுங்கள். பணம் மட்டுமே குறியாக இருக்க வேண்டாம்.

  சரி தானே?

  தனக்குப் போகதான் தானமும் தர்மமும்... இது, தவறு தானே?  அருமையாக சொல்லியுள்ளீர்கள் கண்மணி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. தொழிற் களத்தின் நோக்கமும் அது தானே... அது நம் வாழ்க்கையின் நோக்கமாய் இருந்தால் நாம் தான் நல்லரசு ,
  நன்றி சகோதரி , நல்ல பதிவு

  ReplyDelete
 5. //கற்பதும் கூட இன்று கடமையாக மாறி விட்டது. காசுக்காக கற்பதாகிவிட்டது!//
  இன்று கல்வியின் நிலை இது தான்...
  கற்ற கல்வியை பயன்படுத்த வேண்டும் இல்லைனா கல்விக்கே அர்த்தம் இல்லை நல்ல சிந்தனை நடைமுறையில் இது சாத்தியப்பட்டால் நாடு முன்னேறும்.

  தொழிற்களத்தில் இணைய உலகம் பற்றிய என் தொடர் கட்டுரை திங்கள் தோறும்:
  http://tk.makkalsanthai.com/2012/09/internethistory1.html

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்