ஓடும் பஸ்சின் மீது அழகான தோட்டம்!

 


பேருந்து வந்தாச்சு என்பதை அறிவிக்கும் அதன் புகை சுற்று சூழலை மாசு படுத்தும் ஒன்று. அண்மைக் காலங்களில் அதை ஒரு சுற்று சூழலுக்கு உகந்த ஒன்றாக மாற்ற முயற்ச்சிகள் நடக்கின்றன. மாற்று எரி சக்தியைப் பயன் படுத்தும் முயற்சியுடன் அதன் மீதுள்ள காலியிடத்தை பசுமை நிறைந்த தோட்டமாக மாற்றினால்?  அதைத்தான் நியூ யார்க் நகர வடிவமைப்பாளர் மார்கோ அந்தோனியோ காஸ்ட்ரோ காஸியோ அவருடைய நியூயார்க் பல்கலைக் கழக ஆய்வுக்காக செய்திருக்கிறார்

 உயிரியல் பேருந்து என்ற நடமாடும் அறிவியல் ஆய்வுக்கூடத்தின் உதவி இவருக்குக் கிடைக்க பேருந்தின் கூரையில் அமைந்த தோட்டத்துடன் இந்தப் பேருந்து நியூயார்க் நகர் வீதிகளை வலம் வருகிறது. பேருந்தின் கூரை மீது காலியாக இருக்கும் ஏறக்குறைய  340  சதுர அடி ஆழக் குறைவான பெட்டிகளில்   ஊட்டப் பொருட்கள் கொண்ட மண்ணும் வளரும் தாவரங்களும் கொண்டு அழகான தோட்டமாக அமைக்கப் பட்டுள்ளது.

அடுக்கு மாடிகளின்  உச்சியில் தோட்டங்கள் அமைக்கும் அதே கருத்துதான் இதிலும். காற்றில் உள்ள கரிய மில வாயுவை உறிஞ்சிக் கொள்வது மழை நீரை முறைய பயன் படுத்தவது எல்லாம் இதன் பயன்கள்.  என்ன என்ன தாவரங்கள் எப்படி பட்டவை என்று அறியும் கல்விச சாலை ஆகவும் இதைப் பயன் படுத்துவதுடன் மக்களுக்கு எப்படியெல்லாம் பசுமையை அன்றாட வாழ்வில் கொண்டு வரலாம் என்ற யோசனையையும் எழுப்பும் வகையில் அமைந்துள்ளது இந்த கூரை மீது தோட்டப் பேருந்து  

Comments

  1. வியப்பாக உள்ளது... அருமையான தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. paraattukku nanri. thodarnthu padippathudan karuthuraiyum unagalukkum paraatukkal

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்