காற்றால் இயங்கும் சிறிய்ய்ய ஏர் பாட் கார்


  
 பெட்ரோலுக்கு மாற்றான  கார் பிரிவில் புது வரவு இந்த காற்றால் இயங்கும் ஏர் பாட் கார். நம்ம ஊரு டாட்டா கம்பனியின்' தயாரிப்பு.

காற்றால் இயங்கும் மோட்டார் மூலம் அழுத்தமேற்றப் பட்ட காற்று பிஷ்டன்களை நகர்த்தி கார் ஓட்டப் படுகிறது. இலவச எரி பொருளுடன் வெளித்தள்ளும் எந்த புகையும் இல்லை இதில் என்பது சுற்று சூழலுக்கு இதமானது. இது மூன்று இருக்கைகள் கொண்ட கட்சிதமான நகர  வாகனம்.

இதனுடைய சிறிய அளவு,  எஞ்சினில் இருந்து கிடைக்கும் சக்தி நல்ல  முறையில் காரை ஓட்ட உதவியாக இருக்கிறது. இது  175  லிட்டர் காற்று பிடிக்கக் கூடியது.  125  மைல்கள் செல்லும். 50 மைல்கள் வேகம் தொடலாம். இதில் உள்ள காற்று காலியானவுடன் சிறப்பு நிரப்பும் நிலையங்களில் நிரப்பிக் கொள்ளலாம் அல்லது மின் மோட்டார் ஐ இயக்கி காற்றை சுற்றுப் புறத்தில் இருந்தே உறிஞ்சி கொள்ளலாம். டாட்டா நிறுவனம் லக்சம் பர்க்கை சேர்ந்த எம் டீ ஐ  நிறுவனத்திடம் இருந்து உரிமைகள் பெற்று தயாரிப்பு ஆயத்தங்களில் முனைப்பாக இருக்கிறது

சோதனைக் கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளதாக டாட்டா நிறுவனம் தெரிவிக்கிறது, அடுத்து கார் விற்பனைக்கு வரும் நாளை எதிர் பார்க்கலாம்
Comments

 1. வரவேற்க்கத்தக்க பதிவு...

  சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாத தொழில்நுட்பம்...

  நல்ல பதிவு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. விரைவில் வரட்டும்...

  தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 3. நல்ல தகவல் கொடுத்திருக்கிறீர்கள். கூடிய சீக்கிரம் வரட்டும். பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் - சுற்றுச்சூழளுக்கும் உகந்ததாக இதைப்போல ஏதாவது வந்தால்தான் நல்லது.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்