ஆச்சாள்புரம் அற்புதங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

   நேற்றுகாலை 9.30 மணியளவில்...
எங்கள் ஊரில்இருந்து ( சிதம்பரம் ) 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆச்சாள்புரம் என்ற ஊருக்குசெல்ல தயாராகிகொண்டு இருந்தேன்.

   ஆச்சாள்புரம் ஓர்அழகிய கிராமம்.விவசாயம்  முழுஅளவில் நடைபெரும் கிராமங்களில் இதுவும் ஒன்று.இப்பொழுதுதான் அங்கு ரியல்எஸ்டேட்காரர்களின் கண்பார்வை விழுந்துஉள்ளது.
   
   திருஞானசம்பந்த பெருமானால் பாடல்பெற்ற சிவன்கோவில் ஓன்று தருமையாதீனம் மடத்தால் சிறப்புற நிர்வகிக்கபடுகிறது.கோவிலை பற்றி தனி பதிவே எழுதலாம் அவ்வளவு தகவல்கள் உள்ளன.

   என்நண்பர்களில் ஒருவர் மஹிந்திரா சைலோ கார்..? வாங்கிஉள்ளார் அதில்தான் பயணம்.வேறுவொரு நண்பரின் மகளுக்கு திருமணம், திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைக்க சக்கரவர்த்தி திருமகன் இராமனை காணதான் செல்கின்றோம்...?

   நான் தயாராகிஇருந்தேன் காரும்வந்தது  முன் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.வண்டியில் இரண்டாம்வரிசையில் நண்பரின் (ஜெகதீசன்) மனைவி,மகள்(மணப்பெண்) மற்றும் எங்களை அழைத்து செல்லும் என்தந்தையின்(எனக்கும்தான்)நண்பர் லெட்சுமணன் ( குஜிலியை குருஜி ஆக்கியவர் )அமர,மூன்றாம்வரிசையில் ஏகாந்தமாக ஜெகதீசன் அமர்ந்துகொள்ள கிளம்பிய சைலோ ஐந்துநிமிடத்தில் ஊரின் எல்லையை கடந்து புறவழிசாலையில் பயணம் தொடங்கியது...

   ஆறுஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆச்சாள்புரம் நோக்கி என் பயணம்...

   என்தம்பிக்கு திருமணம். நாள் நெருங்கநெருங்க பல்வேறு பிரச்சினைகள்.
என்னசெய்வது பயங்கரகுழப்பங்கள்.இதில் பணம் பற்றாகுறை வேறு.  என் தந்தை என்சிறுவதிலேயே வைகுந்தம் சென்றுவிட்டதால், மூத்த மகன் ஆகிய நான்தான் அனைத்தும்.இச்சூழ்நிலையில்தான் பலருக்கும் வழிகாட்டியான லெட்சுமணன் அவர்கள் ( குட்டி குருஜி - உயரம் குறைவானவர் அதனால் செல்லபெயர் ) ஆச்சாள்புரம் இராமர் பற்றி கூறினார்கள்...

   ஆச்சாள்புரம் ஊர் எல்லையை வண்டி நெருங்கியது.சிவன்கோவில் வாசலில் நாங்கள் இறங்கிகொள்ள வண்டிமீண்டும் சிதம்பரம் சென்று ஏனைய நண்பர்கள் ஶ்ரீதரன் மற்றும் செந்தில் ( சைலோவின் உரிமையாளர் ) குடும்பத்தினரை அழைக்க செல்ல...

   என் நினைவுகள் மீண்டும் பின்நோக்கி செல்கிறது...

   நீ என்னோடு வா.நாம் இருவரும் ஆச்சாள்புரம் செல்வோம் அங்கே ஒரு இடத்தில் இராமர் மூர்த்தம் உள்ளது அங்கு உன் பிரச்சினைகளை பிராத்தனையாக வை அவைகள் தீர்ந்து அனைத்தும் சுபமாக நடக்கும் என்றார்கள் குட்டிகுருஜி.                                                                                                             

   அதன் படியே அனைத்தும் நிறைவேற இப்பொழுது மீண்டும் இங்கு...

   கோவிலின் உள்ளே சென்று இறைவனையும்,இறைவியையும் தரிசித்து வெளியில் வந்தோம்.முன் ஒரு காலத்தில் வாழ்ந்த மகான் அப்பையதீக்ஷ்தர் அவர்களுடைய மனைவி ஆச்சாள் ஞாபகமாக வழங்கப்படுவதே இவ்ஊரின் பெயர் என்று ஜெகதீசன்கூறிக்கொண்டுவர நாங்கள் அக்ரஹாரத்தை அடைந்தோம்.

   ஆச்சாள்புரம் அக்ரஹாரத்தில் உள்ள ஒரு வீட்டில் சக்ரவர்த்தி திருமகன்  
ஶ்ரீ விஜய கோதண்ட ராமர் ஸ்வாமிகள் என்றபெயரில் எழுந்தருளிஉள்ளார்.ஆண்டுதோறும் ஶ்ரீராமநவமி உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

   இன்று நேற்று இல்லை சுமார் 480 ஆண்டுகளுக்கும் மேலாக வெகுவிமரிசையாக தொடர்ந்துவிடாமல் நடைபெறுகிறது.

   அதுவும் ஒரே குடும்பத்தின் வம்சாவழியினரே இன்றுவரை அதனை ஆராதனை செய்துவருகின்றனர் என்பதும் ஒரு சிறப்பு.

   ஜாதி,மதம்,மொழி பாகுபாடு என்பதே அங்கு இல்லை. யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்பதை ஆரம்பகாலம் முதல் பின்பற்றுகின்றனர்.

   ஒருகாலத்தில், உற்சவகாலங்களில் ஊரில்தெரு முழுவதும் பந்தளிட்டு அனைத்து மக்களும் சமபந்தியாக ஒன்றாக அமர்ந்து விருந்து உண்பார்கள் என்றால் ஒரு ஆச்சர்யம் அல்லவா.

   இன்று இக்குடும்பத்தை சேர்ந்தவர்களும்,ஊரை சேர்ந்தவர்களும் பல ஊர்களில்,நாடுகளில் வசித்துவந்தாலும்,ஶ்ரீராம நவமி உற்சவத்தின் பொழுது அனைவரும் ஒன்றுகூடி நடத்துகின்றனர். 

   ஒரு வழியாக வீட்டினை அடைய ஏனைய நண்பர்களும் வந்துசேர்ந்து
கொள்ள உள்ளே நுழைந்தோம்.தினம்தோறும் மதியவேளையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.அப்பொழுது யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

   விசாலமான ஹால்,விஷேசகாலங்களில் அனைவரும் கலந்துகொள்ள வசதியாக புணரமைக்கபட்ட நகர வசதிகளை கொண்ட கிராமத்து வீடு. உள்ளே பூஜை அறையிலேயே சமையல் அறை.

   அனைவரும் வீட்டின் பின்புறம் சென்று கை கால்களை தண்ணீரால்சுத்தம் செய்துகொண்டு வந்து அமர அபிஷேகம் ஆரம்பம்.பின் மந்திரஜெபம். இடைப்பட்டநேரத்தில் சுவாமிக்கு படைக்க அனைத்தும் தயார் நிலையில் இருக்க,உடன் நைவேத்தியம் முடித்து தீபஆராதனை.

   இந்த நிகழ்வுகள் நடைபெறும் சமயம் உங்கள் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதனை நீங்கள் உங்கள் மனதில் நினைத்து பிராத்தினை செய்தாலே போதும் அவைகள் காற்றுபோல விளகுவது ஒரு அற்புதம் ஆகும்.                                                                                                                                                       

   (திருமணம் சம்பந்தமானவைகளுக்கு ஶ்ரீவிஜயகோதண்டராமர் வரப்ரசாதி) 

   பூஜைகள் முடிந்தவுடன் அனைவரையும் ஒன்றாக அமரவைத்து விருந்து படைக்கின்றனர்.பூஜை செய்பவரும் இதேபந்தியில் அமர்ந்து கொள்கிறார்கள்.

   தலைவாழை இலைபோட்டு நீர் தெளித்து,முதலில் இனிப்பிற்காக சிறிது 
பருப்புபாயசம் வைத்து,நெய்கூடிய பருப்பு,தயிர்பச்சடி,கோஸ் துவட்டல், கீரைகூட்டுடன் சுத்தஅண்ணம் சேர்த்துகொள்ள அவரைகாய் சாம்பார், தக்காளி ரசம்,பாயசம் மற்றும் மோர்.

   விருந்து முடிந்தஉடன் அனைவருக்கும் தேங்காய்,பழம் சேர்த்து தாம்பூலம் தருகின்றனர்.

   ( காரியங்கள் ஸித்தி அடைய ஆஞ்சநேயர் ஸ்வாமியின் கையடக்க படங்களை தருகின்றனர் )

   நாங்கள் இவைகளை பெற்றுகொண்டு அனைவரும் ஒன்றாகவே சிதம்பரம் வந்துசேர்ந்தோம்.

( இது என் பயணங்களின் அனுபவ பதிவு மட்டுமே ஆன்மீக பதிவு அல்ல )

நண்பர்களே,
நான்,பிராத்தனைக்கு வந்தவர்கள்,உடண்வந்தவர்கள்,அழைத்துசென்றவர்,சென்றஇடத்தில் உள்ளவர்கள் அனைவரும் சமயத்தாலும்,மொழியாலும் வேறுபட்டவர்கள் ஆணால் ஒரே விதமான நடைமுறைகள் அங்கு.
வழிபாட்டு இடங்களிலும்,கோவில்களிலும் இவைகள் உண்டு. ஆணால் தனிபட்ட முறையில் இப்படிஒரு பிராத்தனைகள் நடைபெறும் இடங்களை கண்டதுஉண்டா.?இப்படிபட்ட இடங்களை அறிவோம் வரும்நாட்களில்.......

   
   

      

   

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்