பறவைகள் எப்படித்தான் நெடுந்தூரம் திசையறிந்து பறக்கின்றன?வேடந்தாங்கல் போயிருக்கிறீர்களா? அங்கே பறவைகள் சைபீரியா போன்ற நெடுந்தூர நாடுகளில் இருந்து சரியாக குறிப்பிட்ட பருவத்தில் வருவதைப் பார்க்கும் நமக்கு வியப்பாக இருக்கும். எப்படித்தான் இந்தப் பறவைகள் இவ்வளவு தூரம் இம்மி அளவு திசை பிசகாமல் வந்து சேர்கின்றன, மறுபடி தங்களுடைய பகுதிகளுக்கே திரும்பி செல்கின்றன என்று நினைக்கத் தோன்றும்.

படத்தில் உள்ள பறவையைப் பாருங்கள். எப்படியெல்லாம் அது கணக்குப் போட்டபடி பறக்கிறது என்று வேடிக்கையாக படத்தில் காட்டப் பட்டிருக்கிறது! நெடுந்தூரம் பறவைகள்  பறக்க நுண்ணறிவு அவசியம் என்பதையும் அது கோடிட்டு காட்டுகிறது
 
பறவைகளின் மூளை மற்றும் அலகுகளில் மக்னடைட் என்ற பொருள் இருக்கிறது. இதனால் பறவைகளுக்குக் கிடைக்கும்   உயிர் காந்தத் தன்மை
 தான் திசையறிய உதவியாக உள்ளது

பூமியினுள் அதன் மத்திய பாகத்தில் நன்கு உருகிய பொருட்கள் சுற்றி சுற்றி வருவதால் பூமிப் பந்தை சுற்றி ஒரு காந்த மண்டலம் உருவாகி இருக்கிறது.இது மெலிதாக அவ்வளவு வலு உள்ளதாக இல்லாத போதும் சில பறவைகளும்  , விலங்குகளும் இந்தக் காந்த மண்டலத்தை  உணர்ந்து கொள்ளும் தன்மை பெற்று இருக்கின்ற. சில பறவைகள் காந்த மண்டலத்தைப் பார்க்கக் கூட முடியுமாம்! இப்படி காந்த மண்டலத்தை உணர்ந்து கொள்வது  அதனால் தங்களுக்குள் ஒரு மாறுதலைப் பெறுவது இதுதான்  உயிர் காந்தத் தன்மை.இதை சாத்தியமாக்குவது தான் அவற்றின் மூளை மற்றும் அலகுகளில் உள்ள மக்னடைட்

மிதக்கும் படிகங்களாக உணர்வு பெற்றுக் கொள்ளும் நரம்பு செல்களில் உள்ளது  இந்த மக்னடைட்.  காந்த மண்டலத்தின் அழுத்தம் மக்னடைட் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் போது அருகாமையில் உள்ள நரம்பு செல்களுக்கு அது தெரிவிக்கப் பட்டு பாதையில் உள்ள திசை மாற்றத்தை உணர்ந்து கொள்கின்றன . காந்த மண்டலம் பூ மத்திய ரேகைக்குப் பக்கத்தில் வலுக் குறைந்தும் துருவப் பகுதிகளில் வலு மிக்கதாகவும் உள்ளது. இந்த காந்த மண்டல மாறுபாடுகள் ஏற்படுத்தும் அழுத்த வேறுபாடுகள் பறவைகளால் உணரப் பட்டு திசைகள் மாற்றமும் புலன் ஆகிறது. இந்த காந்த மண்டல மாறுதல்கள் பறவைகளின் நினைவில் வைக்கப் பட்டு திசை மாற்றங்கள் எளிதில் உணரப் படுகின்றன . அனைத்துக்கும் அடிப்படை  மக்னடைட் மூலம் பெரும் உயிர் காந்தத் தன்மையே

இந்த மக்னடைட் பொருள் பறவைகள் தவிர பின் வரும் உயிர் இனங்களிலும் காணப் படுகிறது

டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள்

தேனீ போன்ற பூச்சிகள்

சாலமன்டர்கள்

நுண்ணுயிரிகள்

மனிதர்கள்


பறவைகள் தவிர மற்ற உயிரினங்களும் இந்த திசை அறியும் ஆற்றல் பெற்று இருக்கின்றன. டால்பின்களும் திமிங்கலங்களும் நெடுந்தூரம்  நீந்தும் போதும் தேனீக்கள் போன்றவை பறக்கும் போதும் இது உதவியாக இருக்கிறது.மனிதர்களுக்கு இந்த ஆற்றல் இருப்பதாகத் தென் படவில்லை என்பதுதான் குறை


Comments

 1. அருமையான பதிவு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நல்லதொரு பகிர்வு...

  நன்றி...

  ReplyDelete
 3. அருமையான பதிவு,
  நீங்க பறவைகள் காந்தப்புலத்தை பயன்படுத்தறதா சொல்றிங்க,
  ஆனா புறாஊதாக்கதிர்களாலான வரைபடம் வச்சுதான் பறவைகள் வலசை போறதா ஒரு புத்தகத்துல படிச்ச ஞாபகம்,
  எதுவா இருந்தாலும் அருமையான பதிவு

  ReplyDelete
 4. நல்ல பதிவு...justify என்ற வசதியை உபயோகியுங்கள்.......நன்றி

  ReplyDelete
 5. nantri!

  nalla thakaval!

  iraivan padaippo viyappaanathu ..

  ReplyDelete
 6. அனைவரும் அரிய வேண்டிய செய்தி

  ReplyDelete
 7. paraatukalukku nanri. magnetite enpathu paravaikal, vilangalukkul kandariappattu athan moolamthan boomiyin kantha mandalaithai unarnthu parakkinrana enru ezhuthiurikkiren.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்