ஏன் இப்படி ?

அனைவருக்கும் வணக்கம்.

   இன்று புரட்டாசி மாதம் சனிக்கிழமை.அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். வழக்கமானநடைமுறைகள் ஆரம்பம்.
   
   ஆணால்...

   ஏதோ ஒன்றை இழந்துபோனது போல் உணர்வு...?

   என்ன ? எதை இழந்தோம் ? ஒரே குழப்பம் மனதில்.....

   ''நாராயணா கோபாலா''

   ஆம் இதுதான் நான் இழந்தது.                                                                                        

   புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த வார்த்தைகளை கேட்டுத்தான் காலையில் எழுவது வழக்கம்.

   ஆணால் இன்று...?

   ஒருகாலத்தில்...? அப்படித்தான் இனிவரும் காலத்தினருக்கு கூறவேண்டும், இந்த வார்த்தைகளை கேட்டாலே எனக்கு சிரிப்புதான்.விபரம் தெரியாது, மகிமை அறியாது. 

   அவைகள் பற்றி அறிந்தபொழுது....

   நம் முன்னோர்கள் திருப்பதி செல்வதாக இருந்தால் மஞ்சள் ஆடையனிந்து, நெற்றியில் திருமண் இட்டு பெருமாளுக்கு காணிக்கைகள் பெற்றுசென்று திருப்பதியில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

   எனக்கு நினைவுதெறிந்து நான் கவனிக்க துவங்கியபோது,இதை போன்று வருபவர்கள் வெறும் காணிக்கைகள் பெறுபவர்களாகத்தான் தோன்றினர்.

   அதுமட்டும் அல்ல அதில் வேறு ஒரு தகவலும் உண்டு.

   மூன்று ஆண்டுகளுக்கு முன்...

   என் குடும்பத்தில் பயங்கரமான பிரச்சினைகள்.எதிலும் தொந்திரவுகள்.எதை செய்தாலும் முடிவுகள் பாதகம்தான்.அன்றாட வாழ்க்கையே போராட்டம். இதில் வேதனையான விஷயம்,அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளும் உண்டு எதையும் செயல்படுத்த முடியாதநிலைதான். 

   உங்களால் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் இருந்தால் திருப்பதி பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு ஒருரூபாய் மஞ்சள் துணியில் முடிந்து வைத்து புரட்டாசி சனிக்கிழமைகளில் மற்றவர்களிடம் தாணம் பெற்று திருமலைக்கு வருவதாக வேண்ட நினைத்த காரியம் கை கூடும்.

   இதன்படியே நடக்க அனைத்தும் சுபம்.

   ஒரு ஐயப்பன் திரைபடத்தில் சுருளிராஜன் ஒரு உண்டியலோடு வரும் காரை வழி மறித்து காணிக்கை கேட்க,காரில் வரும் அசோகன் ஒரு குடத்தை காட்டுவார்.

   எது எப்படியோ நாம் பாரம்பரிய பழக்க வழக்கங்களை தொளைத்துவிட்டோம்.

   ''நாராயணா கோபாலா''

   ''நான் சொன்னா கேட்பேளா''

  

     

Comments