ஏன்தான் வருது இந்த 'அச்' 'அச்' தும்மல்?

 


நமது மூக்கினுள் நமக்கு தொல்லை தரும் துகள்கள் வரும்போது அவற்றை அகற்றவே வருகிறது இந்த 'அச் அச்'.

தும்மல் நமது உடம்பை புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. நமது மூக்கினுள் இருக்கும் ரோமங்கள் நமக்கு தேவையில்லா துகள்கள் சுவாசிக்கும் காற்று மூலமாக உள்ளே நுழைவதை தடுத்து வடிகட்டுகின்றன. சில துகள்கள் அபரிமிதமாக நிறையும் போதும் மூக்கை அடைக்க வைக்கும் போதும் மூக்கை அவற்றில் இருந்து விடுவித்து மேற்கொண்டு வரும் துகள்களை வடிகட்டும் வேலையை தொடர செய்யவே வருது தும்மல். 'அச்' ! இப்போது அந்த துகள்கள் வெளியே தள்ளப் பட்டு விட்டன. மூக்கு பழையபடி ரெடி!ஆக தும்மல் இது ஒரு நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு அனிச்சை செயல்

பெனிசில் வேனியா பல்கலை கழகத்தை சேர்ந்த டாக்டர் நோம்  கோஹேன் எலிகளின் மூக்கில் இருந்து பெறப்பட்ட செல்களின் மூலம் எலிகள் எப்படி சளியை வெளியேற்றுகின்றன என்று ஆராயும்போது சைனஸ் தொந்தரவு உள்ள, அந்த தொந்தரவு இல்லாத மனிதர்கள் மூக்கு திசுக்களையும் ஆராய்ந்தார். அப்போது சைனஸ் தொந்தரவு உள்ளவர்களிடம்  இருந்து பெற பட்ட செல்கள் தொந்தரவு இல்லாதவர்களிடம் இருந்து பெற பட்ட செல்களை போல சரியாக செயல் படத்தை பார்க்க முடிந்தது.அவர்களுடைய மூக்கடைக்கும்  தன்மை முழுவதும் சரி ஆகாமல் இருப்பதால் அதிக அளவில் தும்முவார்கள் என்று தெரிவித்தார்

சைனஸ் மூலம் இறக்கும் வாய்ப்புகள் குறைவு என்றாலும் அவர்கள் வாழ்க்கையை நடத்துவதில் குறை பாடு இருக்கவே செய்யும். சைனஸ் இருப்பவர்கள் எப்படி தங்களது சளியை வெளியேற்ற முடியாமல் போகிறது என்று தெரிய வந்தால் அவர்களை குணப்படுத்துவது எளிது என்கிறார் இவர். அந்த நாள் வரும் வரை சைனஸ் நோயாளிகள் தும்மி கொண்டிருக்க வேண்டியதுதான். ஆய்வுகள் வெற்றி பெற்று அவர்களும் உடல் நலம் பெறட்டும். 'அச்' . ஐயோ எனக்கும் தும்மல்! பிறகு பார்க்கலாம்!

எனது இன்றைய அறிவியல் ஜோக்:


ஹலோ சையன்டிஸ்ட்! அணு குண்டு போட்டால் என்ன செய்வீங்க?

சிம்பிள். நான்  பாதிப்பு வராத படி செஞ்சுருவேன்

வாவ்! எப்படி?

அது இன்னும் சிம்பிள் நான் அந்த பக்கமே இருக்கமாட்டேனே!Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்