இந்தியா விற்பனைக்கு...


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சட்ட முன்வடிவத்தை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது இந்திய அரசு. எதிர்கட்சிகள் மட்டுமல்லாது மத்திய அரசின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள்கூட அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.


இந்தியா ஒரு விவசாய நாடு. இந்த நாட்டில் 80 % மக்கள் விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ளனர். ஏற்கனவே மாறிவிட்ட பருவ சூழ்நிலை, உரத்தட்டுப்பாடு  என விவசாயிகள் பல கஷ்டங்களை  அனுபவிகின்றனர். அப்படியே கஷ்டப்பட்டு விவசாய பொருட்களை விளைவித்தாலும், அதனை சரியானபடி பாதுகாக்கவோ, பதபடுத்தவோ அரசால் முடியவில்லை. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்களைத்தான் அரசு மக்களுக்கு மானிய விலையில் தருகிறது. ஆனால் விவசாய பொருட்களுக்கான அடிப்படை விலையை அதிகரிக்க வேண்டுமென்ற விவசாயிகளின் பலவருட கோரிக்கைக்கு மட்டும் எந்த அரசும் செவிசாய்க்கவில்லை.

இந்த நிலையில்தான் சில்லறை வணிகத்தில் 51 %அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவெடுத்துள்ளது அரசு. அமெரிக்காவில் பலகிளைகளை உடைய வால்ட் மார்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்ய  தயாராக உள்ளது. அப்படி மத்திய அரசு அந்நிய முதலீட்டை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் கிளைகளை நேரடியாக இந்தியாவில் துவங்கும். இந்திய விவசாயிகளிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து, அந்த பொருட்களை பதபடுத்தி, தங்கள் நிறுவனத்தின் பெயரில் சந்தைக்கு கொண்டு வருவார்கள். அதாவது இந்திய நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும். இதனால் உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படும். சிறு விவசாயிகளும், சில்லறை வணிகர்களும் நேரடியாக பாதிக்கபடுவார்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, பருப்பிலிருந்து அத்தியாவசிய பொருட்கள்வரை அனைத்திற்கும் நாம் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த நிலையை  தவிர்க்க வேண்டுமானால் மத்திய அரசு அந்நிய முதலீட்டிற்கு 
தடை விதிக்க வேண்டும். அரசு இந்த முடிவை கைவிட வேண்டும் என எதிர்கட்ச்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும், வணிகர் சங்கங்களும் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்நிய முதலீட்டை தங்கள் சந்தைக்குள் அனுமதிப்பதை பற்றி மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறினாலும், வணிகர் சங்கங்கள் இந்த பதிலை ஏற்க தயாராக இல்லை.ஆரம்பத்தில் இந்திய  சந்தையில் தங்கள் நிறுவங்களை நிலைநிறுத்துவதற்காக பொருட்களை குறைந்த விலையில் கொடுப்பார்கள். மக்களின் ஆதரவு கிடைத்தவுடன், விலையை ஏற்றுவதோடு அல்லாமல் சந்தையில் செயற்கையான தட்டுபாட்டை இவர்கள் கொண்டுவருவார்கள் என்பது வணிகர்களின் வாதம். மத்திய அரசின் இந்த முடிவு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு அல்லாமல் பொருளாதார ரீதியாக இந்தியாவை அந்நிய சக்திகளிடம் அடிமைபடுத்தகூடும் என்ற அபாயகரமான் வாதத்தை முன்வைக்கின்றனர் அரசியல் நடுநிலையாளர்கள்.

இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி, மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் அதனால் ஏற்படாக்கூடிய விளைவுகளை பற்றி ஒரு கணம் சிந்திக்குமா அரசு?

இந்தியா அந்நியர் வசமாவதற்குள்ளாக நாமும் விழிப்படைய வேண்டும்...இல்லாவிட்டால் நம் சந்ததியும் மீண்டும் ஒரு காந்தியும் நேதாஜி நேரு என்று வீரர்கள் பட்டியல் பிறப்பெடுக்க தவம் கிடக்கும்.

Comments

 1. அன்பு தமிழ் செல்வி, உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் நூற்றுக்கு நூறு நிஜம்.

  ஏற்கனவே கோலா நிறுவனங்கள் வந்து நம் கிராமங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன.

  இந்தியாவை யார் காப்பாற்றப் போகிறார்கள்?

  ReplyDelete
 2. ஆழமான, அனைவரும் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். அருமையான வார்த்தை பிரயோகங்கள். உங்கள் பனி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. ஹலோ தமிழ்செல்வி பொருளாதாரம் அப்படின்னா என்னவென்று தெரியாமல் copy & paste கட்டுரை இது. இது நாள் வரை சாதாரண மக்களுக்கு கலப்படம் இல்லாத உணவு பொருட்கள் கிடைத்ததா ?????????? விவசாயிகளுக்கு உண்மையான லாபம் கிடைக்கிறதா ???????????? வால்மார்ட் வருவது எல்லோருக்கும் நல்லது. இடைத்தரகர்களுக்கு மட்டுமே நல்லது அல்ல.வால்மார்ட் கடை இந்தியாவின் பெரிய நகரங்களில் மட்டுமே. இதனால் சிறு வணிகர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

  ReplyDelete
 4. நல்ல கருத்தை வெளியிடும் நண்பர் பெயரோடு வெளியிட்டிருக்கலாமே...பெயரில்லா ஒரு முகமூடி எதற்கு....வால்மார்ட் வருவது எல்லோருக்கும் நல்லதா...உன் திறமையை பெருக்க சொன்னால் அன்னியன் வந்து தான் உனக்கு கற்றுகொடுக்க வேண்டும் என்று எண்ணுவது அடிமைதனத்திலிருந்து இந்திய மனம் விடுதலையடையவில்லை என்ற கோழைத்தனத்தைதான் காண்பிக்கிறது...பொருளாதாரம் என்பது எனக்கு தெரியததாக இருக்கலாம்...உங்கள் கருத்துரையிலிருந்தே நீங்கள் பொருளாதாரம் அறிந்தவர் என்பது புலனாகிறது...விரைவில் உங்களின் கட்டுரைகளை தொழிகளத்தில் எதிர்பார்க்கிறேன். உங்களின் முகவரியோடு

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்