மாத்திரை சாப்பிட்டால்!

அட, ஒரே தல வழியா இருக்கு! காய்ச்சலா இருக்கு! வயிறு சரி இல்ல!

இப்படி எந்த வலி வந்தாலும் ஏதோ ஒரு மாத்திரை நாம் கைவசம் வைத்திருப்போம். காய்ச்சலா "கால்போல்" "பாராசெடமால்" இப்படி ஏதோ ஒரு மாத்திரையை நாமே போட்டுக் கொள்வதுண்டு. இது மிகவும் தவறு தெரியுமா உங்களுக்கு?

ஒரு சிலர் இப்படி என்றால், வேறு சிலர், மருத்துவரிடம் செல்வார்கள், மருத்துவர் வானவில்லின் ரசிகர் போல அனைத்து வண்ணங்களிலும் மாத்திரை கொடுத்துவிடுவார்! ஒரு வாரம் சாப்பிடுங்கள் என்று சொல்வார்.

நம்ம ஆள் என்ன செய்வார் தெரியுமா..? தெரியுமா? இரண்டு நாட்கள் சாப்பிடுவார், காய்ச்சல் சரியாகிவிடும், பிறகு மாத்திரையை கண்ணால் கூட தீண்டமாட்டார்.

"அட, இதில் என்ன தப்பு?", என்று கேட்கிறீர்களா?

இது பெரிய பெரிய தப்பு!

சொல்கிறேன் எப்படி என்று கேளுங்கள்! நாம் மாத்திரை சாப்பிடுகிறோம் என்று வையுங்கள், வைரஸ் காய்ச்சலுக்கு. அந்த மாத்திரை ஒரு வாரம் ( அல்லது உங்கள் மருத்துவர் குறிப்பிடும் கால அளவு வரை) சாப்பிட்டால் தான் முழுமையாக எல்லா கிருமிகளும் (வைரஸ்) அழியும்.

நீங்கள் இரண்டு நாட்களில் நிறுத்தி விடுவதால், சில நேரம் 99 % கிருமிகள் அழிக்கப்பட்டு 1% மீதம் அழியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. மீண்டும் ஒரு வாரத்தில் உங்களுக்குக் காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த முறை, அதாவது இரண்டாவது முறை காய்ச்சல் வரும்போது, நீங்கள் மறுபடி அந்த மாத்திரையை சாப்பிட்டாலும் உங்களுக்கு குணமாகாது!

காரணம்???

நீங்கள் ஒருமுறை மாத்திரை சாப்பிடும் பொழுது சாகாத கிருமிகள் அந்த மாத்திரைக்கு ஏற்றார் போல தங்களை மாற்றிக் கொள்ளும். அதாவது அந்த மாத்திரையை நீங்கள் மீண்டும் சாப்பிட்டால் அந்த கிருமி சாகாது. ஆங்கிலத்தில் "resistance" என்று சொல்வார்கள். இதற்காகத் தான் மாத்திரையை சரியான கால அளவு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள்.

டி.பி (tuberculosis) போன்ற நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகளை சரியான கால அளவு சாப்பிட வேண்டும் என்று விளம்பரம் செய்கிறார்கள். பார்த்திருக்கிறீர்களா? "டாட்ஸ்" கோர்ஸ் முழுமையாக எடுக்க வேண்டும் என்று நமது அரசு விளம்பரம் செய்வதை.

காரணம் இது தான்.  மருந்து சாப்பிட்டால் சரியாகச் சாப்பிடுங்கள், இல்லையே காய்ச்சல் தலைவலி இவை எல்லாம் தானாய் சரி ஆகிவிடும் வரை பொறுமையாக இருங்கள்.

-----------

கண்மணி அன்போடு

Comments

 1. உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
 2. கண்மணி, பெயருக்கு ஏற்றது போல் தெளிவான பதிவுகள்...

  வாழ்த்துக்கள் கண்மணி...

  ReplyDelete
 3. மிக்க நன்றி :)

  ReplyDelete
 4. அன்புள்ள கண்மணி,
  நல்ல கட்டுரை. நம் நாட்டில் தானே வைத்தியம் செய்துகொள்ளுவது என்பது படித்தவர்களிடமும் இருக்கும் கெட்ட பழக்கம். மருந்துக் கடையில் போய் மருந்து வாங்கிக் கொள்ளுவதும் அதிகம்.

  இவர்களை எப்படித் திருத்துவது?
  திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

  ReplyDelete
 5. உண்மை தான் அம்மா... இதனால் தான் நிறைய நோய்களை குணப்படுத்தவே முடிவதில்லை :(

  ReplyDelete
 6. தங்களின் இந்த கட்டுரை எனக்கு தங்களது ஆங்கில வலைப்பூவில் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தது.இது எனக்கு புதிய விசயமாக இருந்தது. நல்ல பயனுள்ள தகவலை அனைவரும் அறிய சுருக்கமாகவும், விளக்கமாகவும் தந்தமைக்கு கண்மனிக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்