Ads Top

நான் பதிவர் அறிமுகம் --- ராஜ நடராஜன்


முன்னூறு வரிகளில் ஒரு பதிவை எழுதும் திறமையை விட அதை மூன்றே வரிகளில் மிக அழகாக விமர்சிக்கும் கலை மிக ஆச்சரியமானது. எழுதியவருக்கே பல முறை இது போன்ற விமர்சனம் ஆச்சரியத்தை தந்து விடும்.  அது போன்ற சுருக்கமான பல சமயம் விரிவான விமர்சனங்களை தந்து கொண்டுருப்பவர் ராஜ நடராஜன். 

இவர் பார்வையில் என்ற தளத்தின வாயிலாக தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.


                                      http://parvaiyil.blogspot.in/

அப்பா பெயரின் துவக்கமும் எனது பெயரும் இணைந்தே ராஜ நடராஜன் என தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக எழுதி வருகிறேன்.பதிவின் எண்ணிக்கைகளையும்,ஹிட்,பின்னூட்டங்கள்   என்றில்லாமல் நட்புடன் கருத்துரையாடல் என்ற நிலையிலே பதிவுகளை இட்டு வருகிறேன்.நான் தற்போது குவைத்தில் பணி நிமித்தமாக தொசிபா மடிக்கணினி விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.பதிவுகளை விட வாசிப்பிலும்,பின்னூட்டங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளதால் பதிவுகள் எண்ணிக்கை பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதேயில்லை.

யாதும் பதிவே!யாவரும் கருத்துரிமையாளர்களே என்பதில் நம்பிக்கை கொண்டவன் என்ற போதிலும் மத அடிப்படைவாதங்களையும்,தனி மனித விமர்சனங்களையும் கடந்து விடுவது வழக்கம். எனது பதிவின் பார்வையாக கொஞ்சம் சொல்லி நிறைய தேடி...மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும் என சுருக்கமாக முகப்பில் சொல்லியிருக்கிறேன்.

என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

மூத்த குடி தமிழர்களைப் பற்றி நாம் அறைகுறையாக புரிந்து கொள்ள உதவுவது மிச்சம் மீதி உள்ள புத்தக குறிப்புகளை வைத்து மட்டுமே.  விஞ்ஞான தொழில் நுட்பத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பதிவுலகம் மட்டும் இருந்து இருந்தால் அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் உண்மையான வாழ்க்கையை நாம் உணர்ந்து கொண்டுருக்க முடியும்.

ஆனால் இன்று உலகில் உள்ள அத்தனை விசயங்களையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.  நடக்கும் நிகழ்வுகளை அந்த நொடியே அறிந்து கொள்ள முடிகின்றது.  உலகில் பரவி வாழும் தமிழ்மக்கள் தாங்கள் பார்த்த காட்சிகளை, சம்பவங்களை, நிகழ்வுகளை பதிவுகளாக மாற்ற முடிகின்றது.  பத்திரிக்கை தர்மம் என்ற வலைக்குள் இல்லாமல் உண்மையாக தாங்கள் வலையில் நினைத்தப்படியே குறிப்பிட்ட செய்திகளை எழுத முடிகின்றது.

திருப்பூர் பற்றி ஒருவர் படிக்கும் அதே நேரத்தில் அமெரிக்காவின் ஏதோவொரு மூலையில் நடந்து கொண்டுருக்கும் சம்பவங்களை விலாவாரியாக எழுத முடிகின்றது.  படங்களாக செய்திகளாக, தங்கள் கருத்தோடு சேர்த்து பதிவுகளாக எழுத முடிகின்றது. அடுத்து வரும் தமிழ் தலைமுறைகளுக்கு இந்த தமிழ் பதிவுலகம் சொல்லும் செய்திகள், மற்றும் செய்திகளுக்கு பின்னால் உள்ள நம்பகத்தன்மை என்று எல்லாவிதங்களிலும் தன் விருப்பப்படியோ சோதித்துக் கொள்ள முடியும்.

ஆனால் தமிழர்களின் முந்தைய காலகட்டத்தில்?

மன்னர்களை, அவர்களின் வீரங்களை, போர்த்திறமையை, வென்ற நாடுகளின் பட்டியலிட்ட தானம் பெற்ற புலவர்கள் வாயிலாக நமக்கு கிடைத்த குறிப்புகளைப் போல் இல்லாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று ராஜநடராஜன் தனது பதிவுகளை எழுதிக் கொண்டு வருகிறார். ஈழம், முதல் தன் பார்வையில் பட்ட அத்தனை விசயங்களையும் சமூகவியல் பாடத்தினைப் போல படபடப்பு, பரபரப்பு இல்லாத அளவிற்கு நம்பகத்தன்மையோடு, ஆதாரங்களோடு எழுதிக் கொண்டு வருகிறார்.

பதிவுகள் என்பது பொழுது போக்க என்ற கொள்கை கொண்டவர்கள் மத்தியில் இதுவொரு அறிவுசார் ஊடகம் என்பதை கொள்கையாக வைத்துக் கொண்டு அறிவியல், போலி மதவாதிகள் என்று அத்தனை விசயங்களை கலந்து கட்டி எழுதிக் கொண்டுவரும் இவரின் எழுத்துக்கள் காலம் கடந்தும் நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

                                                                                வாழ்த்துகளுடன் தொழிற்களம்.


3 comments:

 1. ராஜ நடராஜனுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 2. எனக்கு புதிதாய் அறிமுகமாகும் பதிவர். ராஜ நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. யாதும் பதிவே!யாவரும் கருத்துரிமையாளர்களே


  வாழ்த்துகள்

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.