வீட்டில் விஷேசங்க

அனைவருக்கும் வணக்கம்

   அதிகாலை நேரம்...

ஏங்க எழுந்திருங்க மணி ஏழு ஆகபோது இன்னும் என்ன தூக்கம் ?  
சுகமான தூக்கம் கலைந்தது என் மனைவியின் சுப்ரபாதம் கேட்டு. 

என்னமா காலைலங்காட்டியும் ஆரம்பிச்சிட்டியா ?                               

என்னவா நாளைக்கு விநாயகர் சதுர்த்தி வீடெல்லாம் கழுவிடனும் கோலம்போடனும் ஏகப்பட்டவேளை இருக்கு நீங்க முதல்ல எழுந்திருங்க.

ஆண்டவா இது உனக்கேஅடுக்குமா நாளைய நிகழ்ச்சிகளுக்கு இன்றே என் தூக்கத்தை கெடுக்கலாமா ? என்று கூறியபடி எழுந்தேன். 

மனைவி என்று வந்துவிட்டால் அவர்களின் செயல்பாடுகளை அந்தஆண்டவன் ஆனாலும் மாற்றமுடியாதுதான் என்னசெய்வது ?

காலைவேளையிலேயே வீடுமுழுவதும் தண்ணீர்ஊற்றி கழுவி சுத்தம் செய்தாகிவிட்டது.

ஏங்க இங்கெல்லாம் உட்காரவோ படுக்கவோ கூடாது ஆமா சொல்லிவிட்டேன்.

ஆகா இதுவேரயா ?

எங்கள் வீட்டில் ஒருசின்ன வெள்ளிபிள்ளையார் சிலைஉண்டு.
பிள்ளையார் என்றால் என்மனைவிக்கு மிகவும்விருப்பம் அதனால் அந்த சிலையை எடுத்து அதற்கு விதவிதமான ஒப்பனைகள் செய்ய ஆரம்பித்துவிட்டாங்க.

(அவர்கள் அழகுகலை நிபுனராக்கும்)

ஒருவழியாக ஒப்பனைகள் முடியும்பொழுது மதியம்ஆகிவிட்டது.
இதற்க்குள் நானும் வழக்கமான என்வேலையில் முழுகிவிட்டேன். ஒருவழியாக பிள்ளையார் ரெடி ஆகிவிட்டார்.

மாலைநேரம் என்தொழில் விஷயமாக வெளியில்சென்றுவிட்டு வீடுதிரும்பினால்...

நான் குடிஇருப்பது எங்கள் வீட்டின் மேல்தளத்தில் கீழே வெளிவாசலில் இருந்து மாடியில் உள்ள பூஜைஅறை வரையில் கோலம் போடபட்டுள்ளது.

ஏங்க கோலத்தை எல்லாம் மிதிக்காம வாங்க கோலம் அழிஞ்சிடபோது.

ஐயா,எங்கப்பா ஆஞ்சநேயா எங்கஇருக்கப்பா என்று அவரை நினைத்து ஒரே தாவலாக முடியாவிட்டாலும் முடிந்தவரை தாவி...தாவி..அடைந்துவிட்டேன் என் இடத்தை.                              

நல்லவேளை விருந்தினர் யாரும் வரவில்லை தப்பித்தார்கள்.ஒருவேளை அவர்ரவர் வீட்டிலும் இப்படிதாவிக்கொண்டிருந்தனரோ என்னவோ.?

ஒருவழியாக அனைத்து முன்னேற்பாடுகளும் ஒர்அளவு முடிந்திருக்க நானும் தூங்கபோனேன்.

இன்று விநாயகர் சதுர்த்தி...

நிச்சயமாக நல்ல விருந்துஉண்டு என்ற எண்ணத்தில் காலையிலேயே எழுந்து குளித்துமுடித்து நெற்றிக்கு இட்டுகொண்டு தயாரானேன்...

அனைத்துவேலைகளும் ஜருராக நடக்கின்றன.

பூஜைஅறையின் நடுவில் நாயகனாக பிள்ளையார் எழுந்தருளினார்.

ஒருபித்தளைதட்டில் வெல்லம்பொரிகடலை,சோளக்கதிர்,கொய்யாபழம்.

தலைவாழை இலைபோட்டு அதில் தயிர்பச்சடி,உருளைகிழங்கு காரகறி, வாழைகாய் வருவல்,மசால்வடை,அப்பளம் இவற்றோடு சுத்தஅண்ணம் 

சேர்த்துகொள்ள நெய்யோடுபருப்பு,முளைக்கீரை,முருங்கைகாய் சாம்பார்,தக்காளி ரசம்,சேமியா பாயசம் மற்றும் கெட்டிதயிர்.

வெள்ளைகொண்டைகடலை சுண்டல் கூடவே பூர்ணம் கொழுகட்டை.

ஆகா அனைத்தும் வைத்துபடைத்தாகி விட்டது இனி...

நன்றாக சாப்பிட்டும்விட்டேன் அடுத்து...

ஏவ்வ்...அப்பாடா...?

அப்புறம்...கொர்...கொர்..தான்...

( கொழுக்கட்டை சாப்பிடுவது எப்படி என்று பதிவு எழுத வந்ததின் விளைவு )

  

Comments

  1. கொழுகட்டை எனக்கும் வேனும்...

    ReplyDelete
  2. களத்துக்கு ஒரு தூக்கு பூர்ணம்கொழுகட்டை பார்சல்.நன்றி.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்