நீருக்கடியில் சக்கர நாற்காலியில் சஞ்சரிக்கும் மாற்றுத் திறனாளி கலைஞர் சூ ஆஸ்டின்!


 


 இந்த அற்புத பெண் மாற்றுத் திறனாளி கலைஞர் சூ ஆஸ்டின் 1996  ஆம்      வருடத்திலிருந்து சக்கர நாற்காலியில் தனது நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். கடலுக்குள் மூழ்கி
 செல்லும் ஸ்கூபா நீச்சல் வீரர்கள் உதவியுடன் ப்ரோபெள்ளர்(முன் தள்ளி) மற்றும் துடுப்புக்கள் இணைந்த ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளார். நீருக்கடியில் இதன் மூலம் இலகுவாக பயணிக்கிறார். இவருடைய " free wheeling"  ( சுதந்திர சக்கரப்  பயணம்)  கலையும் உடல் இயலாமையும்  சங்கமிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் இந்த சிறப்பு சக்கர நாற்காலி.  நல்ல உடல் திறனுள்ளவர்கள் கூட இன்னும் சென்று பார்த்திருக்காத கடலுக்கடியில் செல்லும் இந்த சாதனை சாதிப்பதற்கு உடல் இயலாமை ஒரு தடையே இல்லை என்பதை நிருபீக்கும் படி உள்ளது .இவருடைய சாதனை மிகவும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று! மனம் திறந்து பாராட்டுவோம்!

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்