பரோட்டா சாப்பிட்ட◌ால் சர்க்கரை நோய் வரும்
 பரோட்டா சாப்பிமடுவது சர்க்கரை நோய்க்குக் காரணமாகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று! பரோட்டா என்ன அத்தனை ஆபத்தான உணவா?’ என்றால், கொஞ்சம் தயங்கினாலும் பின்பு ஆமோதிக்கவே செய்கிறார்கள் நிபுணர்கள். ‘‘பொதுவாவே நார்ச்சத்து இல்லாத எந்த உணவுப் பொருளும் உடம்புக்கு நல்லதில்ல. உணவுல இருக்கற நார்ச்சத்துதான் அதைச் சரியான நேரத்துல செரிக்கச் செய்யுது. செரிமானம் கரெக்டா நடந்தாதான் உடம்புக்கு எல்லா சத்துகளும் முறையா கிடைக்கும். உடலின் இயக்கமும் இயல்பாக இருக்கும். கோதுமையில இருந்து நார்ச்சத்தையெல்லாம் பிரிச்ச பிறகு கிடைக்கற மைதாவுலதான் பரோட்டா தயாரிக்கப்படுது. ஆக, பரோட்டா சாப்பிட்டா செரிக்க லேட் ஆகும்ங்கிறது நிஜம். அதனால அடிக்கடி பரோட்டா சாப்பிடறதைக் கூடுமானவரை தவிர்க்கலாம்!’’ என்றார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன்.
‘செரிமானப் பிரச்னை இருக்கட்டும். நேரடியாகவே சர்க்கரை நோய்க்கு பரோட்டாக்கள் காரணமாகுதுங்கிறதை மக்கள் புரிஞ்சுக்கணும்’ என்று பரோட்டாவைப் புரட்டிப் போட்டிருப்பது ‘கேரளா கிளப் ஆஃப் நியூட்ரிஷனிஸ்ட்’ என்கிற அமைப்பு. ஆய்வு முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருப்பது இதுதான்… 

‘‘மையாக அரைக்கப்பட்ட கோதுமையில், கடைசியாக மிஞ்சுவது பழுப்பு கலந்த மஞ்சள் நிற மாவு. இந்த மாவுடன் பென்சாயில் பெராக்ஸைடு என்னும் வேதிப்பொருள் சேர்க்கும்போது அது பளிச்சென வெள்ளை நிறமாகிறது. தொடர்ந்து ‘அலெக்ஸான்’ என்னும் இன்னொரு வேதிப்பொருள் கலந்து மாவை மிருதுவாக்க, அது மைதாவாகிறது. மேற்சொன்ன இரண்டு வேதிப்பொருட்களுமே நேரடியாக சர்க்கரை நோயை வரவழைக்கக் கூடியவை. பென்சாயில் பெராக்ஸைடு ‘ஹேர் டை’யில் பயன்படுத்தப்படுகிற ரசாயனப் பொருள். மாவிலுள்ள புரோட்டீனுடன் சேர்ந்து இதை எடுத்துக் கொள்ளும்போது உடலில் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. ‘அலெக்ஸான்’ என்பது இன்னும் மோசம். சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சிகளில், சோதனைக் கூடத்தில் எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைக்கக் கொடுக்கப்படுபவை இவை!’’

இந்த எச்சரிக்கை கண்ட மறுநாள் முதலே கேரளாவில் பரோட்டா குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கி விட்டன சில நுகர்வோர் நல அமைப்புகள். தமிழ்நாட்டில் இந்த விஷயம் அவ்வளவாகத் தெரியவில்லை.

Comments

 1. பரோட்டாவில் இவ்வளவு விசயம் இருக்கிறதா...

  பதிவுக்கு நன்றி சசோ...

  ReplyDelete
 2. சர்க்கரை குறைபாடு (நோய் அல்ல) வருவதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று...

  ReplyDelete
 3. பசிக்காகவும், ருசிக்காகவும் சாப்பிடாமல், ஆரோக்கியத்திற்காக சாப்பிட்டால், நிறைய குறைபாடுகளை தவிர்க்கலாம்.

  அருமையான ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 4. அதும் நம்ம தமிழ் நாட்டுல பரோட்டா கடைகள் அதிகம் தான்.. பலரிடமும் பகிர்வோம்... நல்ல பதிவு ...

  ReplyDelete
 5. பரோட்டா உடல் நலத்திற்கு கேடுதான் இருப்பினும் பரோட்டாவை பார்த்தாலே நாவில் எச்சில் ஊறுவது தவிர்க்கயியலாததாகிறது..பின் எங்கிருந்து சாப்பிடும் என்னத்தை தவிர்ப்பது?

  நான் அடிக்கடி சாப்பிடுவதில்லை ஆனாலும் வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடாமல் இருப்பதை தவிர்க்க இயலவில்லை பேச்சிலராக இருப்பதால்!

  இன்று எனக்கு பரோட்டா சாப்பிடும் என்னைத்தை தூண்டியமைக்காக ஆசிரியருக்கு கண்டனங்கள்! :) :)

  by the way useful post buddy! keep rocking!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்