தேனீ மெழுகும் பல் நிரப்ப உதவும் !

தலைப்பைப் பார்த்ததும் இது எதோ புதிய கண்டு பிடிப்பு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பண்டைய காலத்திலேயேதேனீ மெழுகு கொண்டு பல் குழியை நிரப்பிக் கொள்ளும் முறையை பயன் படுத்தியுள்ளார்கள்
ஆராய்ச்சியாளர்கள் 6500 வருடங்களுக்கு முன்பான மனிதப் பல்லை ஆராய்ந்த போது அதில் தேனீ மெழுகால் பல் குழி அடைக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது. பல் மருத்துவரிடம் செல்ல அந்தக் கால மனிதர்களுக்கும் அ கூச்சம் போலிருக்கிறது!
படத்தில் இருக்கும் பற்களும் தாடையும் 100 ஆண்டுகளுக்கு முன்பு சொல்வேனியாவில் கண்டு பிடிக்கப் பட்டு இத்தாலியில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப் பட்டது. பல் எனாமலில் உள்ள செங்குந்தான வெடிப்பை நிரப்ப தேனீ மெழுகு அதில் பயன் படுத்தப் பட்டிருக்கும் என்று தெரிய வந்தது அப்போது.இதைப் பற்றி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த பல் குழி நிரப்பும் முறைக்கு இது ஒரு தொன்மையான ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் பெடரிகோ பர்னார்ட்னி தெரிவித்துள்ளார்
இன்றைய அறிவியல் ஜோக்:
கூச்சமா இருக்கு டாக்டர்!
பல் டாக்டரிடம் வந்து கூச்சப் பட்ட எப்படி? ரிலாக்ஸ் ஆ இருங்க
பல் கூச்சம இருக்கு டாக்டர். அதை சொன்னேன்
அட புது விசயமாக அல்லவா இருக்கிறது
ReplyDeleteada....
ReplyDeletenalla thakaval!
அருமையான தகவல்...
ReplyDeleteparakkukalukku nanri nanbargaley
ReplyDelete