சுவற்றுக்கு அப்பாலும் மனிதர்களை பார்க்கக் கூடிய ராடார்

 
நான்தான் சுவற்றுக்கு இந்த பக்கம் இருக்கிறேனே என்னை பார்க்க முடியாதே என்று சவடால் விட முடியாது சாமி இனி. சுவற்றுக்கு அப்பால் என்னதான் செய்யறார் இவர்னு பார்க்க வை பி (wi-fi)   ராடார் ரெடி!

இங்கிலாந்து அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பிரயாண பை அளவுள்ள வை பி ராடார் கருவியை உருவாக்கி அதன் மூலம் சுவற்றுக்கு அப்பால் பார்க்கிறார்கள். மனிதர்கள் சுவற்றுக்கு அப்பால் நகரும் போது அவர்களிடம் இருந்து வரும் வை பி அலைகளின் மூலம் பார்க்க முடியும்

இந்த ராடார் சாதாரண ராடார் போலவே செயல் படுகிறது. சுவற்றுக்கு அப்பால் உள்ளவர்களின் வேகம் , நிலை கொண்டுள்ள இடம் , திசை அனைத்தும் அறிய
 கண்டு பிடிக்க முடியும் இந்த ராடாரினால். வீட்டில் உள்ள குழந்தைகளை பாது காப்பது வீட்டையும் பார்த்துக் கொள்ளுவது மாதிரியான சமர்த்தான அமைதியான வேலைகளுக்கு இதை பயன் படுத்திக் கொள்ளலாம், பணயக் கைதிகளாக பொது  இடங்களில் பிடித்து வைத்துள்ள இடங்கள் மற்றும் உள் நாட்டுக் கலவரப் பகுதிகள் போன்ற இடங்களில் இது  பயன் படும்

ஆராய்ச்சியாளர்கள் ஒரு பல் நிலை  சமிக்ஞை வாங்கி வழியாக இந்த அலைகளை கிரகித்து சோதனை செய்தார்கள். மனிதர்கள் அருகாமையில் இருக்கும் போது அலைகள் பலமாகவும் தூரத்தில் இருக்கும் போது மெலிதாகவும் இருப்பது தெரிய வந்தது.  மொத்தத்தில் இதன் பயன் பாடுகள் அமைதி வழியில் சட்ட சீர் குலைவுகள் இல்லாத வகையில் அமையும் படி பார்த்துக் கொள்ள உதவும்


.
Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்