பிளாஸ்டிக்கின் மீது அச்சடிக்கப் பட்டு இயங்கும் சூரிய ஒளிப் பலகைகள்!

படத்தில் இருப்பது சூரிய ஒளி வாங்கும் செல்கள்  அச்சடிக்கப் பட்ட பிளாஸ்டிக்  பலகை.அச்சடிக்கப் பட்டபின் இது ஒரு சூரிய ஒளிப் பலகை! இது ஆப்பிரிக்காவில் வேயப் பட்ட கூரையின் மீது பொருத்தப் பட்டு சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கப் பயன் படுகிறது.

இன்னும் மண் எண்ணெய் உபயோகத்தில் இருக்கும் வளரும் நாடுகளில் பாது காப்பான,  விலை குறைவான மாற்றாக இது வெகுவாகப் பயன் படும்.  தொலை தூரத்தில் வெளி உலகத்துடன் தொடர்பு குறைவான இடங்களில் இது மாதிரி அமைத்து அங்கங்கே இருக்கும் இடத்திலேயே மின்சாரம் பெறலாம்.மின்சாரம் கம்பிகள் வழியாக வந்து சேரும் என்று காத்துக் கிடக்க வேண்டாம். தொடரும் மின் வெட்டைப் பற்றி கவலையே இல்லை!

தற்போது சூரிய ஒளி பெற செல்கள் பலகைகள்  நிறுவும் முதலீட்டு தொகை அதிகமாகவே உள்ளது. சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறுவது அதிகமாகி இருக்கிறது.  2001 இல்  34   மெகா வாட் உற்பத்தி  இருந்த ஆஸ்திரேலியாவில்   இப்போது  1400 மெகா வாட்  வரை உற்பத்தி ஆகிற வகையில் சூரிய ஒளி சாதனங்கள் நிறுவப் பட்டிருக்கின்றன. இப்போது  ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளிலும்  இந்த சூரிய ஒளி மின்சாரத்திற்க்கான  தேவை அதிகரித்திருப்பதால் இதன் உற்பத்தியும் கூடியிருக்கிறது. சீனாவில் இது பெருமளவில் உற்பத்தி செய்யப் படுவதால் விலை குறைவாகி இருக்கிறது. இருந்தாலும் எல்லோருக்கும் இது போய் சேர இன்னும் விலை மலிவான தயாரிப்பு அவசியம் , இந்த பிளாஸ்டிக்கின் மீது அச்சடிக்கப் படும் சூரிய ஒளி பலகை அமைக்கும் முறை தயாரிப்பு செலவைக் குறைக்கும்

இந்த முறையில் தயாரிக்கப் படும் செல்களில் ஒரு பாலிமரும் புல்லரீன் என்ற பொருளும் கலந்து ஒரு மெல்லிய தகடு இரண்டு மின் வாய்களுக்கு இடையில் பொருத்தப் படும் . சூரிய ஒளி பாலிமரின் மீது படும் போது அந்த சக்தி பாலிமரில் இருந்து புல்லரீனுக்கு எலெக்ட்ரான் என்கிற எதிர் மின் அயனியை கடத்துகிறது இது ஒரு மின் ஓட்டத்தை செல்களுக்குள்  ஏற்படுத்தி மின் உற்பத்தி தொடங்குகிறது

 இந்த வகை செல்கள் எடை குறைவாக இருப்பதால் அதிக சுமை தூக்கும் கூரைகள் தேவை இல்லை. உபோயோகிக்கும் போது கூரை மீது பொருத்தி கொண்டு இரவில் வீட்டிற்குள் தொங்க விட்டுக் கொள்ளலாம்.


நல்லாத்தானே இருக்கு  இது என்று நினைக்கத் தோன்றுகிறது இல்லையா? 

Comments

 1. மிகவும் பயன்னுள்ள தகவல்

  ReplyDelete
 2. சூரிய சக்தியை திறம்பட பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். இப்போது விலை அதிகமானாலும் நிறையப்பேர்கள் பயன்படுத்தும்போது விலை குறைய வாய்ப்பு உண்டு.

  சூரிய சக்தி பற்றி விழிப்புணர்வு வரவேண்டும். அதற்கு இந்தக் கட்டுரை உறுதுணையாக இருக்கும்.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 3. நம்ம ஊருக்கும் வந்தா ரொம்ப நல்ல இருக்கும், மின்சாரம் என்னும் காதலிக்காக காத்திருக்க வேண்டாம்

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்