பல வித இணைய ஏமாற்றுகள்.


இணையத்தை பயன்ப்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றது.இத்தகைய தருணத்தில் நம்முடைய தகவல்களை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம் ஆகும்.இணையத்தில் நம்முடைய தகவல்களை திருடும் திருடர்களுக்கு இன்டுரடர்ஸ் (Intruders) மற்றும் ஆட்டக்கெர்ஸ் (Attackers) என்பர்.

இணையத்தில் நமக்கு தொல்லை கொடுப்போர்களை பற்றி காண்போம்.


1.Spamers and Adware Spreders
தேவையில்லாமல் கவர்ச்சியான படங்கள் மற்றும் விளம்பரங்களை இணைய பயனாளர்களுக்கு அனுப்பி அதன் மூலம் காசு பாற்போர்.

2.சைபர் குற்றவாளிகள் (Cyber Criminals )
இந்த திருடர்கள் நோக்கம் ஆனது வங்கி கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டு பாஸ்வேர்ட்டை திருடுவது. இமெயில் மற்றும் பிற இணைய தளங்களை பயன்படுத்தும் போது பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டுகளை திருடி அதன் மூலம் தங்கள் காரியத்தை சாதிப்பது இவர்களின் வேலை ஆகும்.

3.வர்த்தக கயவர்கள் (Corporate Spies)
ஒரு நிறுவனத்தின் தகவல்களை தெரிந்து கொண்டு அதனை எதிரி நிறுவனத்திற்கு விற்று பணம் சம்பாதிப்பர்.

4.தகவல் திருடர்கள் ( Hack Vists)
அரசியல் மதம் அல்லது பொருளாதாரம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு நம்முடைய கருத்துக்களை கேட்டு அதனை இணையத்தில் பரப்பி விட்டு நம்மளை சிக்கலுக்கு உள்ளாகின்றனர்.

5.ஆடாவடித் திருடர்கள் ( Rough Hackers )
இந்த வகையான திருடர்கள் முக்கிய வேலையானது பயனாளர்களின் கணினிக்கு வைரசை பரப்புவது எனலாம்.இந்த வகையான திருடர்கள் இப்போலுது அதிகரித்து வருகின்றன.இவர்களிடம் இருந்து கணினியை பாதுகாக்க கணினிக்கு நல்ல ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் இருக்க வேண்டும்.

6.சைபர் வாரியர்ஸ் (Cyber Warriors)
இது நவீன இணைய போர் உத்தியாகும். இத்தகைய கயவர்கள் எதிரி நாடுகளின் தகவல்களை திருடுதல் மற்றும் எதிரி நாடுகளின் கணினிகளை வைரஸ் வலியாக செயல் இழக்க செய்வர்.

7.அட்வான்ஸ்டு பெர்சிஸ்டெண்ட் திருட்டு ( Advanced Persistent Theft)
இத்தைகய திருடர்கள் பயனாளர்களுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழந்தது அல்லது உங்களுக்கு மிகப்பெரிய நிறுவனத்தில் இருந்து பரிசு கிடைக்க போகிறது என்று சொல்லி நம்முடைய தகவல்களையும் மற்றும் பணத்தையும் கேட்டு பறிப்பர்.சமீப காலமாக செல்பேசிகளின் மூலம் மோசடிகளை செய்கிறார்கள்.


Comments

 1. இன்டர்நெட் உலகத்துல இத்தனை திருடர்களா?...தெரிவித்த தங்களுக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்களின் அரும் பணி

  ReplyDelete
 2. எப்படியெல்லாம் திருடராங்கய்யா...

  ரூம் போட்டு யோசிப்பாங்ய்களோ...

  பயனர்களே உஷார்ரா இருங்கோ...

  பயனுள்ள பதிவு,

  வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete
 3. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது , பதிவு அருமை நன்றி

  ReplyDelete
 4. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி...

  ReplyDelete
 5. விரிவான விளக்கங்களுடன் நல்ல பயனுள்ள பதிவை தந்துள்ளீர்கள்..

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்