ஆழ்கடலில் அற்புதங்கள்:

ஆழமான தண்ணீரில் மூழ்குவதை நினைத்து பார்த்தாலே பயமாக இருக்கும்.ஆராய்ச்சிக்காக அனேக கிலோ மீட்டர்  நீரில் மூழ்கி ஆராய்ச்சி செய்பவர்களை நினைத்து பாருங்கள்.நமக்கு மூச்சு திணறி போகும்.

கடலின் ஆழங்களில் மூழ்கி ஆராய்ச்சி செய்வது மிகவும் சவாலான ஒன்றாகும்.ஆனாலும் அதற்கும் தயாராகுபவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே தான் இருக்கிறது.இந்த ஆராய்ச்சிக்காக நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்துகிறார்கள் இதில் உயிர் பாதுகாப்பான எல்லாவிதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது.
 
பவளப் பாறைகள் மற்றும் தாது பொருட்கள் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரோபோக்களை அனுப்பி மனிதன் செல்ல முடியாத அடி மட்டத்திலும் ஆய்வுகள் நடத்துகின்றனர்.அமெரிக்காவின் அதி நவீன நீர்மூழ்கி கப்பலான 15 டன் எடை கொண்ட ஆல்வின் 45,000 மீட்டர் அழத்தில் மூழ்கி ஆராய்ச்சி செய்யும்.


அழத்தின் அழத்தை சமாளிப்பதற்காக டைட்டானியம் கொண்டு தான் ஆல்வின் புற உருவாக்கி உள்ளனர்.அமெரிக்காவில் உள்ள உட்ஹோன் ஆர்கானிக் இன்ஸ்ட்டியூட் தான் இதனை வடிவமைத்தது.1966-ல்கடலின் அடியில் மூழ்கி போன அணு குண்டை கண்டுபபிடித்தனர்.

உலகையே நடுங்க வைத்த டைட்டானிக் கப்பலின் நொறுங்கிய பகுதிகளை ஆல்வின் 1986-ல் ஆய்வு செய்தது.பேட்டரி மூலம் இயங்கக்கூடிய தன்மை கொண்டது தான் இந்த நீர்மூழ்கிகள்.சில நீர்மூழ்கி கப்பல்கள் அணுசக்தி மூலமும் செயல்படும்.தேவையான அளவு சுத்தமான காற்று, மின்சாரமும் இவை கப்பலுக்கு கிடைக்கின்றன.

உணவு பொருட்கள் தேவையான அளவுக்கு வைத்து கொண்டால் நீண்டகால ஆராய்ச்சிக்கு பின்பு தான் மேல் பரப்புக்கு வருவார்கள்.


Comments

  1. இப்படில்லாம் பதிவு போட்டா ரொம்ப ஆழ்ந்து சிந்திக்கறேனு சொல்லிடுவோமா..?

    பதஞ்சலி ராஜா..


    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்