இனிய வணக்கம்! இன்று முதல் எனது அறிவியல் மற்றும் இதர பதிவுகள்!

நான் ஒரு அறிவியல் மற்றும் அறிவியல் கதை எழுத்தாளன். கவிதைகளும் சரளமாக ஆங்கிலத்தில் எழுதுகிறேன். தமிழும் கை வரும். தவிர ஒரு ஆராய்ச்சியாளன். அறிவியல், தொழில் நுட்பம், விண்வெளி , வானவியல் பற்றி எளிய முறையில் மக்களுக்கு கொண்டு சேர்க்க,   அவற்றின்  புகழ் பரப்ப, மாணவர்களை அவற்றின்  பக்கம் ஈர்த்து அவர்களுக்கு வழிகாட்டியாக செயல் படுகிறேன். பசி பஞ்சம் பட்டினியை அறிவியல் மூலமாக அகற்றுவது, மக்களிடையே சரி விகித உணவு பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதன் மூலம் ஆரோக்யமாக இருப்பது, இயற்கையை நேசிப்பது, பாதுகாப்பது, உலக வெப்ப மயமாதல் விழிப்புணர்வு அதை போக்குவது குறித்து இவை போன்ற அறிவியல் சார்ந்த சமூக பணிகள் செய்து வருகிறேன். அறிவியல் விந்தைகளை தொடர்ந்து உங்களுடன் பகிர   இருக்கிறேன். இதோ எனது துவக்கமாக ஒரு அறிவியல் பாடல்என்னிடம் அறிவியல் என்றொரு
தீப்பந்தம் இருக்கு
அறியாமை இருளை போக்க

சுட்டெரிக்கும் பசி பட்டினியையே சுட்டெரிக்க
ஊட்ட சத்து குறைவை விரட்டி அடிக்க
நோயில்லாமல் வாழ
நீண்ட நாள் பூமியில் இருக்க
உலகத்தை அறிய உலகத்தை ஆள
மண்ணில் இருக்க விண்ணில் பறக்க
இது ஓயாத ஒரு அறிவியல் ஒலிம்பிக்ஸ் ஜோதி!

பந்தம் மட்டும் கொண்டு வாருங்கள்
தீயை நான் மூட்டுகிறேன்
ஒளி பரவட்டும் எங்கும்!
வாழ்க அறிவியல்! வளர்க மக்கள்!

- மோகன் சஞ்சீவன்

Comments

 1. வாருங்கள்...வரும் தலைமுறைக்கு வழிகாட்டுங்கள்.#சகபயணி#.

  ReplyDelete
 2. தொடருங்கள்... தெரிந்து கொள்கிறோம்...

  ReplyDelete
 3. //என்னிடம் அறிவியல் என்றொரு
  தீப்பந்தம் இருக்கு
  அறியாமை இருளை போக்க //

  நிற்காமல் எறியட்டும் இந்த தீப்பந்தம்...

  வரவேற்கத்தக்கது...

  ReplyDelete
 4. அருமை அண்ணா, உங்களை போன்றோர் தமிழுக்கும் தேவை, தொடருங்கள், வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்