தோழமைக் கரங்கள் - Friendly Hands

Friendly handsகல்லூரி மாணவர்கள் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்னவாக இருக்கும்? அழகாக உடை உடுத்தி, ஒரு நோட்டுப் புத்தகம், ஒரே ஒரு நோட்டுப் புத்தகம் மட்டும் கையில் ஏந்தி, அழகாக சுற்றி வருவார்கள் என்றா?


அப்படி நினைத்திருந்தால் இதைப் படிக்க வேண்டும் நீங்கள் நிச்சயமாக. நான் சொல்லப் போகும் கல்லூரி மாணவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் விருதுநகர் மாவட்டம் - சிவகாசியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தோழமைக் கரங்கள் - friendlyhands என்கிற அமைப்பைத் தொடங்கி உதவி வருகிறார்கள்.

இன்று நாடு மிகவும் மோசாமான நிலையில் இருக்கிறது என்று பேசுபவர்கள் பலர், ஆனால், நம்மால் இயன்றதை செய்வோம் என்று முன் வருபவர்கள் வெகு சிலரே! உண்மை தானே?

அந்த வெகு சிலருள், இவர்களும் அடக்கம். என்ன செய்கிறார்கள் இவர்கள்?

** பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லங்களில் வாடும் பெரியோர்களுக்கு இவர்கள் தாம் பிள்ளைகள்.
** பள்ளியில் படிக்க போதிய பண வசதி இல்லாதவர்களுக்கு இவர்கள் தாம் பெற்றோர்.
** மருத்துவம் பார்க்க வழி இல்லாமல் வருத்தத்தில் இருப்போருக்கு, இவர்கள் தாம் உதவும் தெய்வங்கள்!

இப்படி பலதரப்பட்ட மக்களுக்கும் இவர்கள் பலவாறு உதவி வருகிறார்கள், முக்கியமாக, கல்வி கற்க வசதி இல்லாதவருக்கு இவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

ஒருவருக்கு பண உதவி செய்வதைக் காட்டிலும், கல்வி தருவது மேல் அல்லவா?

இதை தான் இவர்கள் செய்து வருகிறார்கள். "நாடென்ன செய்தது நமக்கு?" என்று யோசிக்காமல், இப்படி நம்மால் இயன்றதை நாட்டிற்குச் செய்தால் நல்லது தானே? இவர்கள் இதற்காக பணம் எப்படிபெறுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

பெற்றோர் செலவு செய்ய "pocket money" தருவார்கள் இல்லையா? அதை சேமித்து தான் இவர்கள் நிறைய பேருக்கு கல்வி கற்க உதவி வருகிறார்கள்.

கல்லூரி மாணவர்கள் மட்டும் தான் உறுப்பினராக இருக்கிறார்கள் என்று நினைத்து ஒதுங்கி விடாதீர்கள். எல்லோரும் இவர்களோடு இணையலாம். இந்த தோழமைக் கரங்கள், தமிழக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பு.

நீங்களும் இந்தத் தோழமைக் கரங்களோடு இணைய வேண்டுமா? இதோ, இணையுங்கள்,

http://www.friendlyhands.org/

https://www.facebook.com/friendlyhands

உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள்.

சிறு துளி பெரு வெள்ளம்! சரி தானே?

-------

கண்மணி அன்போடு
Comments

 1. கண்மணி, தேர்ந்தெடுத்த பதிவு, வாழ்த்துக்கள் ,நன்றி

  ReplyDelete
 2. பயனுள்ள பதிவு,
  சமுகத்திற்கு தெரியவேண்டிய அமைப்பு,
  பகிர்ந்ததற்கு நன்றி

  ReplyDelete
 3. பலரும் அறிய பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்