காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...பச்சை வாழை இலையிலே... அவியல் ஒருபுறமும், பொறியல் ஒருபுறமும்,அப்பளம் மறுபுறமும், இனிப்பு பலகாரமென ஒரு பெரிய விருந்தே படைக்கும் நமது பல்சுவை இனிய தமிழ் பதிவர்களுக்கு காலை தேநீரின் இனிய காலை வணக்கம்...
தனக்கென ஒரு வலைப்பூ....

     அதிலே பல வண்ண மலர்பூ...

ஒவ்வொன்றும் ஒரு விதம்...

    ஆனால், அத்தனையும் அற்புதம்....


பயந்துடாதீங்க....கவிதை சொல்ல வரல....

நம்ம பதிவர்களை எப்படி சிறப்பித்து வரவேற்கலாம் என்று, ஒரு சின்ன ஒத்திகை... பிடிச்சிருக்கா...

ஞாயிறு உதிக்கும் காலையிலே, ஞாயிற்றுகிழமை வேலையிலே, சிந்தனைக்கு சில தகவல் துளிகள்...


  • ஐஸ் வாங்கினா மட்டும் போதாது, அது கரையறதுக்குள்ள சாப்பிடனும்...
  • புது துணியிலே சாயம் போகுதா? கவலை வேண்டாம், துணியை தூக்கி போட்டுடனும்...
  • கால்சட்டை ஒரு புறம் கிழிந்து போனால், மறுபுறமும் கிழித்து பேஷன் என்று சொல்லனும்...
  • நண்பன் மேல் கோவப்பட்டால், பார்ட்டி என்று சொல்லி, அவன் பர்ஸ்சை காலி பண்ண வேண்டும்...
  • நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமானால், அனைவருக்கும் சமைத்து போடு, அவர்களே துரத்திவிடுவார்கள்....

(ரசனைக்கு மட்டும்)....

அடப்பாவிங்களா, லீவு நாள்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னா...இப்படியா?சண்டே ஜாலி டே..... சோ,  நோ சண்டை....கூல்...கூல்...

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...


Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்