மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களே....!!!

மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களே....!!! 

அந்நிய முதலீடு மட்டும் தான் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஒரே வழியா..??? 

1. ஆசியாவின் நெற்களஞ்சியம்னு ஒரு காலத்துல நாமெல்லாம் பெருமையா
 சொல்லிக்கிட்டு இருந்த தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் போராட்டம்...!! - இது தேசிய அவமானம் இல்லையா...???

2. மின்சாரம் இல்லாம முதலாளிகளா இருந்த பலபேர் தொழிற்சாலைகளை மூடி விட்டு வெளிநாட்டுக்கு அடிமை வேலை செய்ய செல்கிறார்களே..!! - இது நாட்டுக்கே கேவலம் இல்லையா..??

3. ஒவ்வொரு மாசமும் பல லட்சம் டன் கணக்கா உணவுப்பொருட்களை வெளிநாட்டுல இருந்து இறக்குமதி பண்ணி பல லட்சம் கோடி செலவு பண்றீங்களே.. அதை நாம உற்பத்தி செய்வதன் மூலம் தடுக்கலாம் இல்லையா..??

4. வெளிநாட்டு கம்பெனிகளை கூழைக்கும்பிடு போட்டு கூபிடுறீங்களே.. அதுக்கு மூளையா இருக்குற இந்தியர்களை வச்சி.. அட்லீஸ்ட் ஒரு செல்போன் கம்பெனி தொடங்கலாமேன்னு ஏன் உங்களுக்கு தோணாம போச்சி...!!5. நாம் இந்தியர்கள்.. நாம் இந்தியர்கள்னு கோஷம் போடுறது கிரிக்கெட் விளையாட மட்டும் தானா..?? என்னைக்காவது ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்னென்ன தேவைகள் இருக்கு அதை எப்படி நிறைவேற்றலாம்னு யோசிச்சிருப்பீங்களா..??

6. வெளிநாட்டுக்காரன் வந்து முதலீடு பண்ணி இந்தியால பொழைக்க முடியும்னு நினைக்கிறப்ப.. இந்தியர்கள் ஏன் பிழைக்க முடியாது..??

7. ஆப்பிள், சாம்ஸங்.. ஹோண்டா.. இப்படி எங்கே பார்த்தாலும் வெளிநாட்டு பிராண்டா இந்தியால இருக்குதே.. வெளிநாட்டுல சாக்கடை மூடுற மூடிய தவிர வேற எதாவது இந்தியன் பிராண்டு யூஸ் பண்ணி நீங்க கேள்விப்பட்டதுண்டா..???

8. இந்தியாவை ஒரு சந்தையாகவும்... இந்தியர்களை ஆட்டு மந்தையாகவும் ஆக்க நினைக்கிறீர்களே.. என்னைக்காவது இந்தியனோட முன்னேற்றத்தை பத்தி நினைச்சி பார்த்திருக்கீங்களா..??

9. வெளிநாட்டுக்காரங்க இந்தியால தொழில் தொடங்க போய் போய் பேச்சு வார்த்தை நடத்துறீங்களே.. என்னைக்காவது இந்திய இளைஞர்களோட திறமை என்னான்னு யோசிச்சிருப்பீங்களா..??

## விவசாயிகளை ஊக்குவியுங்க.. விவசாயத்தை பெருக்குங்க...!!

## மாற்றுத்திறனாளிகளுக்கு சில ஆயிரங்கள்ல தொழில் தொடங்கி குடுங்க..!!

## பிச்சை எடுப்பவர்களை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஈடுபடுத்துங்கள்..!!

## விவசாயக்கூலித்தொழிலாளர்களுக்கு மாச சம்பளம் குடுங்க..!!

## நதிகளை தேசிய மயமாக்குங்கள்... தடுப்பவர்களை ஒடுக்குங்கள்.. இந்தியாவே உங்க பின்னால் இருக்கும்..!!!

## லஞ்சம் வாங்குபவர்கள்... அரசாங்க சலுகைகளை ஆட்டைய போடுபவர்களை.. ஈவு இறக்கமின்றி டிஸ்மிஸ் செய்யுங்கள்..!!!

## படித்த வேலை இல்லாத இளைஞர்களை ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி தொழில் வளத்தை பெருக்குங்கள்..!!

## 50000 ருபாய் டேப்லட்டை அசால்ட்டா வெளிநாட்டுக்காரன் விளம்பரப்படுத்தி இந்தியால விக்கும் போது.. 3000 ருபாய்க்குள்ள அற்புதமா தயாரிச்ச இந்தியன் டேப்லட்டை ஒன்னுமே இல்லாம ஆக்கிட்டீங்களே..!!!

இந்தியாவ பத்தி யோசிங்க.. இந்தியர்களை பத்தி யோசிங்க..!!

அண்ணன் எப்போ சாவாரு.. திண்ணை எப்போ காலியாகுங்கிற மாதிரி எப்போ பிரச்சனை வந்தாலும் இந்தியாவை வெளிநாட்டுக்காரங்களுக்கு விற்க நினைக்கிறீங்களே.. உங்களுக்கு வெக்கமா இல்லையா..?? 

நன்றி: பசுமை நண்பர்கள்             


             

பகிருங்கள் தோழமைகளே... நன்றி 

Comments