Ads Top

துவங்குவோம் புதிய பயணத்தை... பாகம் - 2


எப்படா விடியும்ன்னு இருந்தது, இந்த மலர்கள் உங்களுக்காக,  உங்கக்கூட கதைக்கலாமேன்னு ஒரு சின்ன ஆவல் தான், என்னை விட வயசுல மூத்தவங்களுக்கு வணக்கங்கள், இளையவங்க மறக்கமா எனக்கு ஒரு வணக்கம் போட்டுட்டுதான் அந்த பக்கம் நகரனும், சம வயதினர் வணக்கம் எல்லாம் வேணாம்ப்பா நாம என்ன அப்படியா பழகினோம்…

சரி நான் நேரா விடயத்திற்கு வருகிறேன். நம்ம தொழிற்களம் குழுவினர் நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினாங்க… தொழிற்களம் அறிவிப்பு ன்ற தலைப்புல… உங்க எல்லாருக்குமே வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்.

சில விதிமுறைகளை முறையாக பின் பற்றுவதன் மூலமாக தொழிற்களத்தின் நோக்கத்தோடு சரியாக பயணிக்க தங்களை வரவேற்கிறோம்.

பதிவு பட்டியல்ல பார்த்ப்ப தெரிஞ்சது யாரும் விதி முறையை கடைபிடிக்கலன்னு, முதல்ல நானே கடைப்பிடிக்கலீங்க… தொழிற்களம் குழு தலைமேலயே சட்டுன்னு ஒரு குட்டு வைக்கிறது கேட்கிறது… (மானசீகமான இந்த குட்டு வலிக்கவில்லை)

தொழிற்களத்திற்குள் களம் புகுந்திருக்கும் பதிவர்களாகிய நம்முடைய எழுத்து மாபெரும் ஆக்கச்சக்தியை உடையது. குதிரைக்கு கடிவளம் போட்டு இயக்குவது போல சரியான இலக்கை நோக்கி செயற்படுத்த வேண்டும் என்பது என் கருத்து… (என் சக பயணிகள், நண்பர்கள், ஆலோசகர்கள்…இப்படி எத்தனையோ பதவிகளில் மனதை அள்ளிக்கொண்டு போகும் நீங்கள் தான் சொல்ல வேண்டும் கருத்துரைகளில் சரியா தவறா என்பதை.) குதிரையின் கடிவளத்தை கழற்றிவிட்டோமானால்…புற காட்சிகளில் மிரண்டு பாதை மாறக்கூடும். அவ்வண்ணமே நம் பதிவுகளும் விதிகளுக்குட்படாமல் பதியப்படுமேயாகின்… தொழிற்களத்தின் இலக்கிலிருந்து பாதை மாறிடும் என்பது திண்ணம்.

நாம் குடும்பமாய் பயணிக்க வேண்டியவர்கள்…ஒவ்வொருவரும் தங்களின் கடைமைகளை உணர்ந்து பதிவிட்டால் தொழிற்களம் ஏற்றம் பெறும்… அதற்கான உழைப்பின் பலனை நாமும் அறுவடை செய்வோம் என்பது திண்ணம்.

விதி முறைகளை சரியாக பின்பற்றினாலே நாம் இலக்கை அடைந்து விடுவோம் என்றொரு நிச்சயமான எதிர்ப்பார்ப்பு மனதில் முளைவிட்டு விடுகிறது. நாம் எதை எதிர்ப்பார்க்கிறோமோ அது நிகழ்ந்து விடும் என்பதும் வெற்றி விதிகளின் மையங்களின் சூத்திரம் ஆகும்.

மறக்காம கருத்துரையிடுபவர்களுக்கு ரெண்டு பைவ் ஸ்டார் சாக்லெட் குரியர் அனுப்பப்படும்.

பின்குறிப்பு – சாக்லெட் வழங்கும் பொறுப்பை தொழிற்களம் குழு ஏற்றுக்கொள்ளும் (ஏனுங்க நான் சொல்றது சரி தானுங்களே…)

புதியவர்களுக்காக புதிய பயணத்தை துவங்குவோம் பாகம் 1
 -
மீண்டு நாளை…..அன்புடன் சந்திப்போம்

நட்புடன்
விண்முகில் தமிழ்ச்செல்வி

5 comments:

 1. காலையிலேவா...? கண்ணு இரண்டு லட்டு பார்சல்.கைப்புள்ளயின் காலை வணக்கம் அம்மா..? ரொம்பசின்னபுள்ளதானே நாங்க.?

  ReplyDelete
 2. எனக்கும் சாக்லெட் உண்டா

  ReplyDelete
 3. நாம் குடும்பமாய் பயணிக்க வேண்டியவர்கள்…ஒவ்வொருவரும் தங்களின் கடைமைகளை உணர்ந்து பதிவிட்டால் தொழிற்களம் ஏற்றம் பெறும்… அதற்கான உழைப்பின் பலனை நாமும் அறுவடை செய்வோம் என்பது திண்ணம்.

  நிச்சயம் தொழிற்களம் ஏற்றம் பெறும்… அதற்கான உழைப்பின் பலனை நாமும் அறுவடை செய்வோம்
  தேவையான பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. தொழிற்களம் அறிவிப்பு ன்ற தலைப்புல… உங்க எல்லாருக்குமே வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்.

  எப்போது ?? எங்கே ???

  ReplyDelete
 5. அன்பு சகோதரி நன்றி கலந்த வாழ்த்துக்கள்...

  சரியாக சொன்னீர்கள் தோழி...

  அனைவருக்கும் புரிந்துகொள்ள வேண்டிய தகவல்...

  லட்டு என்ன?... பெரிய விருந்தே வைக்கலாம்...

  நாங்க ரெடி...நீங்க ரெடியா?

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.