Ads Top

துவங்குவோம் புதிய பயணத்தை பாகம் - 3


நண்பர்கள் அனைவருக்கும் இனிமையான காலை வணக்கங்கள், நேற்று காலையிலேயே கண்ணா லட்டு திங்க ஆசையான்னு... கருத்துரையிட்ட மதுரகவி அண்ணாவிற்கு போனசாய் லட்டு இதோ பிடிங்க உங்களுக்கான லட்டுவை....

 

(காலை வணக்கம் சொல்லிட்டார்...என்னைவிட ரொம்ப......சின்ன பிள்ளையாம் நம்பிட்டேன் நீங்களும் நம்பிடுங்க,  லட்சுமியம்மாவிற்காக  பைவ் ஸ்டார் சாக்லெட்டுடன் என் அன்பும்கூட... விலாசம் தெரிஞ்சாதான் குரியர் அனுப்ப முடியும்... எல்லாத்தையும் நம்ம காந்தி தாத்தா கணக்குல வச்சிருங்க வாய்ப்பு கிடைக்கும் போது தவறாமல் இனிப்பு இனிப்பான விண்முகில்தமிழ்ச்செல்வியின் அறிமுக சந்திப்பில் நிச்சயமாக வழங்கப்படும். (சின்னதா ஒரு கிசு கிசு... மீண்டும் ஒரு பதிவர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கின்றனவாம்... முதல் பதிவர் திருவிழாவில் விண்முகில் தமிழ்செல்வி மிஸ்ஸிங்....இந்த தடவ முதல் ஆளா அம்மா தான் ஆஜர் சோ இனிப்பு நிச்சயமே) இன்றைய தலைப்பு என்ன என்று ஆவலோடு தங்கள் காத்திருப்பது தெரிவதால்... தொழிற்களம் குழுவி்ன் மின்னஞ்சலே...பதிவு அனுப்பும் முறை என்று சொல்லிசில விதிகளை கீழ் கொடுத்திருந்தார்கள்...அவற்றை தங்களின் பார்வைக்காக....

பதிவுகளை அனுப்பும் முறை : 
Ø  தலைப்புகளில் கவனம் செலுத்துங்கள்
Ø  பிரிவுகளை சரியாக இடுங்கள்
Ø  பின்னூட்டம் மற்றும் மற்ற இணையத்தளங்களில் பகிர்ந்துகொள்ளுங்கள்
Ø  சமூக வலைத்தளங்களில் இணையுங்கள்
Ø  தேடுபொறிகளுக்கு ஏற்ற குறியீடுகளில் கவனம் செலுத்துங்கள்
Ø  உங்கள் சொந்த பதிவுகளாக  இருக்கட்டும்
Ø  தொழிற்களத்தில் பதியும் கட்டுரைகள் வேறு தளத்திலோ உங்களது வலைப்பூவிலோ பதிய வேண்டாம்.
Ø  நடக்கவிருக்கும் நான் பதிவன் பரிசு போட்டியிலும் நீங்கள் கலந்துகொள்ளலாம்

அதில் முதல் விதி தலைப்புகளின் கவனம் செலுத்துங்கள் என்பதே...பெரும்பாலும் இணைய உலகத்தில் தலைப்பினை பார்த்தே செய்தியை படிக்கவருகிறார்கள் என்பது உண்மை தான். தலைப்பை மட்டுமே பார்த்தும் படிக்க வருவதில்லை நம் பதிவை பலர் படிக்க நாம் தலைப்பில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும். தலைப்பை பார்த்து படிக்க வருவது அம்மாவாசை சோறு... அது அன்றாடம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா...? அம்மாவசை சோற்றையும் அற்றாட சைட் டிஷ்ஷாக்கா தலைப்புக்கேற்ற சரக்கும் நம் பதிவுகளில் இருக்க வேண்டும். அதனால் கொஞ்சம் மண்டையில் மசாலா இருக்க வேண்டும் என்பதற்காக அதிகம் படிக்காலாம் என்று நான் முடிவெடுத்துள்ளேன். நீங்க...(ஹலோ நில்லுங்கப்பா... இன்னும் முடிக்கவே இல்ல அதுகுள்ள லைப்ரெரிக்கு ஓடினா எப்படி?)

அதோடு தலைப்பு தொழிற்களம் பிரிவுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புகளின் உட்பிரிவுகளை ஒத்ததாக இருப்பின் கூடுதல் சிறப்பு.

(தொழிற்களம் ல பதிவு போட எதவாது கருத்துப்போடுவீங்கன்னு கதைக்க வந்த... காய போடுறீங்களே நட்பானவர்களே, கருத்துரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்)

இன்றைக்கும் தொழிற்களம் குழுவிடம் ஒரு செல்ல பட் அழுத்தமான குட்டு என்னன்னா? எல்லாரும் மக்கள் சந்தை திரட்டில நினைவா தங்களோட தனியர் வலைப்பூக்களை இணைத்துவிடுங்கள். (நான் இணைக்கல பாஸ் யாரும் சொல்ல மாட்டீங்களா?...இன்னைக்கு பார்த்தா மதுரகவி அண்ணா ப்ரண்ட்ல போஸ் குடுக்குறாரு...சொல்லாததுனால லட்டு வாபஸ். இன்னொரு முக்கியமான விடயம் பதிவர்கள் பதிவிற்கு கீழே தங்களுடை பெயரை புனை மற்றும் இணை பெயர்களோடு போட்டுக்கொள்ளலாம்....என்ன மாதிரி பேருக்கு கீழ லிங்க்கெல்லாம் போட்டு குட்டுகளை தோப்பு தோப்பு தோப்பா வாங்கப்படாது.

பேருக்கு கீழ போடுற லிங்க்க திரட்டிக்குள்ள போட்டிங்கன்னா...ப்ரண்ட் பேஜ்ல மதுரகவி அண்ணா போல போஸ் குடுக்கலாம் அதானால மறக்காமா மக்கள் சந்தை திரட்டியில உங்க தனியர்  வலைப்பூக்களை இணைச்சுடுவீங்களாம்.

ஹப்பா சொல்ல வந்தத சரியா சொல்லிட்டேன் நாளைக்கு தொழிற்களம் குழுவின் செல்ல குட்டுக்களோடு வருகிறேன்.

குட்டுக்களோடு எனக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி என்னோட விண்முகில் ப்ளாகோட லிங்க் தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி வேண்டுமா என்ற விளம்பரத்திற்கு கீழாக...புறா ஒண்ணு அழகா பறக்குது பாருங்க அது தொழிற்களம் குழுவின் கைங்காரியம் தான். அங்கே தொழிற்களம் பதிவர்களின் தனியர் வலைப்பூக்களின் லிங்க்குகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது அழகாகவும் அதே சமயம் பதிவர்களை மகுடம் சூட்டி அழகுபார்க்கும் தொழிற்களம் நிறுவனத்தின் தாயுள்ளமும் நிர்வாகத்திறனும் இனிதே வெளிப்படுகிறது.

தனியரின் வலைபதிவுகளில் சிறந்தவற்றை எடுத்து தனித்து காண்பித்தால் இன்னும் கூடுதல் சிறப்பாய் இருக்கும் என்பது என் கருத்து இதனை தொழிற்களம் குழு அங்கீகரிக்கும் என்றே எண்ணுகிறேன்.

முதல் பக்கத்தில் பதிவர்களை விளம்பரப்படுத்தி மேன்மைபடுத்துவதிலிருந்தே பதிவர்களுக்கு தொழிற்களம் தரும் அங்கீகாரத்தையும் பதிவர்களுக்குண்டான மதிப்பையும் உணர்ந்து செயல்படும் விதமாக அமைந்துள்ளது. மதிப்புணர்ந்து ஊக்கப்படுத்தும் இந்நிறுவனத்தில் உதவியாசிரியராய் பணிபுரிய பெறுமைப்படுகிறேன். அதே சமயத்தில் இன்னும் அதிகமான உதவியாசிரியர்கள் தொழிற்களம் பதிவு களத்திற்கு வரவேண்டும் என்று வரவேற்று வாழ்த்தவும் செய்கிறேன்.

இது செல்லகுட்டுகளோடு என் மனம் நோகாமல் வழிநடத்திய தொழிற்களம் நிர்வாகத்திறனுக்கும், தொழிற்களம் குழுவிற்காகவும்.


இப்போ யாரும் பேருக்கு கீழ லிங்க் போடவும் வேண்டியதில்ல...என்ன போல செல்ல குட்டுகளை வாங்க வேண்டிய அவசியமும் இல்ல.

தவறுகளிலேயே நின்று விடாமால் தவறுகளில் இருந்தும் கற்றுகொள்வோம். அதற்கு உதவிய தொழிற்களத்தில் ஒன்றினைவதில் மகிழ்ச்சியடைவோம் சேர்ந்து செயல்படுவோம்... தொழிற்களத்தின் ஏற்றம் நம் வாழ்வின் முன்னேற்றம். 

தொழிற்களம் குழுவிடம் மற்றும் ஒரு வேண்டுகோள்... இப்படி நான் ஒவ்வொரு பதிவிலும் முந்தைய பதிவுகளின் லிங்குகளை கொடுப்பதற்கு பதிலாக....பதிவர்களின் பெயர் மேல் கிளிக் செய்தால் பதிவர்களின் ஒட்டுமொத்த பதிவுகளும் வருது போல் வழி செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இது வாசகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

புதியவர்களுக்காக

நாளை சந்திப்போம் மீண்டும் ஒரு செல்ல குட்டோடு.... மறக்காம கருத்துரையிடுங்க...பதிவிட ஐடியாவும் குடுங்க... சிறந்த ஐடியாவிற்கு புதியதொரு விருதோடு....

நட்புடன்
விண்முகில்தமிழ்ச்செல்வி


9 comments:

 1. mmmmmmmmmm:........
  enakku theriyaatha thakavalkal.....

  ReplyDelete
 2. அடேயப்பா ஒரு பத்து ம் போட்டிருக்கீங்க....ரொம்ப தெளிவான மனுஷர் போங்க...

  ReplyDelete
 3. பலே...பலே...

  கலக்குங்க...

  ReplyDelete
 4. சாக்லெட் கூடவே இனிப்பும் கிடச்சது நன்றி. லட்டுவும் எனக்கே எனக்கா

  ReplyDelete
 5. உங்களுக்கே உங்களுக்குதான் அம்மா...எடுத்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 6. உங்களுக்கு தாராள மனசு நன்றி

  ReplyDelete
 7. ஆகா இது நல்லா இருக்கே ? களத்தின் தகவலிருந்தே பதிவா ? வருடம்முழுவதும் நிச்சயம் படம் ஹிட்.
  களதுக்கு திருஷ்டி கழிக்க என் படத்தை போட்டதுக்கு ஒரு தனி படமே ஓடும் போலிருக்கே.ஒரு சின்னபுள்ளய இப்படியா ஆசைகாட்டி மோசம்பன்றது லட்டு கொடுக்கல...? நாளைக்கி வாங்கிட்டாபோச்சி கிளம்புடா கைப்புள்ள.

  ReplyDelete
 8. சரிங்க... தெரிந்து கொண்டேன்... நன்றி...

  ReplyDelete
 9. அருமையான பதிவு. எங்க ரொம்ப நாளா தொடராம அப்படியே வச்சு இருக்கீங்க. சீக்கிரம் அடுத்த பதிவை பதிவு பண்ணுங்க. காத்திருக்கிறேன்.

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.